எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞாயிறு, 12 ஜனவரி, 2020
சொ. முருகப்பனாரும் பாரதியாரும்.
நலந்தா = நல்ல புத்தகக்கடை என்ற புத்தகக்கடையைக் காரைக்குடியில் நடத்தி வரும் திரு நலந்தா ஜம்புலிங்கம் அவர்கள் சிறந்த எழுத்தாளர் & பதிப்பாளரும் கூட. மிக சிறந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பில் உள்ளவர். என் எழுத்தைப் பற்றி அவர் கூறியுள்ளவற்றைப் படிக்கும்போது சிறிது கூச்சம் ஏற்பட்டது. அதோடு சொ. முருகப்பனாரின் இராமகாதை பற்றியும் கூறி இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.
(இந்தப் புகைப்படம் பாரதி காரைக்குடி வந்தபோது எடுத்தது. பாரதியாரின் வலது பக்கம் இராய சொ அவர்களும் இடது பக்கம் சொ முருகப்பனாரும் அமர்ந்திருக்கிறார்கள். )
சனி, 11 ஜனவரி, 2020
அன்பெனும் பிடிக்குள்..
அன்பெனும் பிடிக்குள்..
அன்பெனும் பிடிக்குள்..
இது ஒரு மணிவிழா மலர். ஆனால் இதன் கட்டுக்கோப்பும் இவ்விழா நாயகரின் சாதனைகளும் என்னை இந்நூல் பற்றி எழுதச் செய்கின்றன.
2019 நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற திரு நடேசன் அவர்களின் மணிவிழா மற்றும் நகரத்தார்களின் பண்பாட்டுக் கலாச்சார விஷயங்கள் மேன்மைகள் அடங்கிய பொக்கிஷம் இது.
வெள்ளி, 10 ஜனவரி, 2020
காக்கைச் சிறகினிலே - ஒரு பார்வை.
காக்கைச் சிறகினிலே - ஒரு பார்வை.
காக்கைச் சிறகினிலே
விருது அரசியலை விரிவாக அலசுகிறது தலையங்கம். கல்விக்கூடக் கொலைகள்/தற்கொலைகள் பற்றிக் காட்டமாய்த் தாக்குகிறது ஒரு கட்டுரை. கவிஞர் சேரனுடன் நேர்காணல் ஈழ இனப் படுகொலையைக் கண்டிக்கிறது.
இராணுவ முகாம்களுக்குள் இருக்கும் எனது வீடு என்ற தீபச்செல்வன் கட்டுரை பூமி யாருடையது என்ற கேள்விகளை எண்ணமெங்கும் நிறைத்தது. இன ஒடுக்குமுறை என்பது எவ்வளவு மலினமான செயல்பாடு. யதீந்திராவின் இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும் விரிவான அலசல்.
வியாழன், 9 ஜனவரி, 2020
புதுவயல் கைலாஸ விநாயகர் கும்பாபிஷேக மலரில் எனது பாடல்.
நேற்று புதுவயல் கைலாஸ விநாயகர் கோயில் கும்பாபிஷேக மலர் வெளியிடப்பட்டது. மலருக்கு பாடல் ஒன்று எழுதிக் கேட்டிருந்தார்கள். மூன்று மாதம் முன்பு அனுப்பியிருந்தேன். நேற்று மலருக்குக் கட்டுரை பாடல் எழுதியவர்களுக்கு மேடையில் சிறப்பு செய்தார்கள்.
கோவிலூர் சீர் வளர் சீர் திரு மெய்யப்ப ஞான தேசிக ஸ்வாமிகள் தலைமையேற்க , திரு சபா அருணாசலம் உரையாற்றினார். இன்னும் பலர் பேசியதும் மலர் வெளியிட்டதும் சீக்கிரமே முடிந்துவிட்டது. நாங்கள் 5 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றோம்.
நான் போடியம் பின்னே நின்றதால் தலைவரால் இருந்த இடத்திலிருந்து புகைப்படம் எடுக்க இயலவில்லை . அதனால் வீடியோ மட்டும். :)
கோவிலூர் சீர் வளர் சீர் திரு மெய்யப்ப ஞான தேசிக ஸ்வாமிகள் தலைமையேற்க , திரு சபா அருணாசலம் உரையாற்றினார். இன்னும் பலர் பேசியதும் மலர் வெளியிட்டதும் சீக்கிரமே முடிந்துவிட்டது. நாங்கள் 5 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றோம்.
நான் போடியம் பின்னே நின்றதால் தலைவரால் இருந்த இடத்திலிருந்து புகைப்படம் எடுக்க இயலவில்லை . அதனால் வீடியோ மட்டும். :)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







