எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 மார்ச், 2019

சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் எச்சரிக்கும் இல்லீகல் அட்வைஸர்ஸ் !

இந்த வாரம் இல்லீகல் அட்வைஸர்ஸ் பற்றிக் கூறி எச்சரிக்கிறார் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள். 

இல்லீகல் அட்வைஸர்ஸ் !

”ஹலோ,  மிஸ்டர் ஸ்ரீனிவாசனா ?”

“யெஸ், பிளீஸ்”

“ஸார், எனக்கு ஒரு மெடி-கிளெயிம் பாலிஸி எடுக்கணும்.  இன்னைக்கே உங்கள மீட் பண்ண முடியுமா ?”

ஒரு புதுமுக முகவர் வேண்டுமானால் இந்தக் கோரிக்கையைக் கேட்டுப் பூரிப்பு அடையலாம்.  ஆனால் மேனியெங்கும் அனுபவ வடுக்கள் நிறைந்தவர்கள் சட்டென்று வீழ்வதில்லை.

லாஜிக் ரொம்ப சிம்பிள்.   நட்பு வட்டத்தில் இருப்பவர்களே பாலிஸி எடுக்கத் தாமாக முன்வருவதில்லை.  இந்த நிலையில் என்னை யார் என்றே தெரியாத ஒருவர் ஏன் என்னை அணுக வேண்டும் ?

அடுத்த சில நிமிட உரையாடலே போதும்.  அவருடைய குறிக்கோள் என்னவென்று புரிந்து கொள்ள. 

புதன், 13 மார்ச், 2019

நட்புக்கு மரியாதை தந்த திரு வெங்கடேஷும், திரு. கோபாலகிருஷ்ணனும்.

2081. புதுவை புத்தகத் திருவிழாவில் எனது நாவலுடன் நண்பர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள். சென்னைக்காரரான இவர் புதுகைக்குச் சென்ற இன்று புக் ஃபேர் சென்று புக் வாங்கி ஃபோட்டோவுடன் அனுப்பியதை நினைத்தால் ஆனந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. :) (y). நட்புக்கு மரியாதை. நன்றி சகோ

2082. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எனது நூல்களை வாங்கி வாசித்து வரும் அன்பு சகோ வெங்கடேஷ் வெங்கி அவர்களுக்கு நன்றியும் அன்பும்.

செவ்வாய், 12 மார்ச், 2019

தினமலரில் காதல் வனம் நாவல் பற்றிய நூல்முகம். :-

தினமலரில் காதல் வனம் விமர்சனம்.

நன்றி தினமலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.  

தங்கள் நாவல் கிடைத்தது. 70 நிமிடங்களில் படித்து முடித்தேன்.

ஒரு சாயுங்கால நேரத்து குட்டித்தூக்கத்தில் இருபதின் இளமையில் நிகழ்ந்திட்ட ஒருகனவு கண்டு விழித்ததுபோல ஒருசுக அனுபவத்தை மனதில் சேர்த்தது காதல்வனம் கதை.
குடும்பம் தாம்பத்தியம் என்ற சிறையில் அடைப்படாமல் இருந்திருந்தால் சாமின் மூன்றுகாதலையும் கொண்டாடியிருக்கலாம். அந்தக் கொண்டாட்ட மனநிலையை தேவி வந்து தடுத்துவிடுகிறாள்.

புதன், 6 மார்ச், 2019

சமூகவலைத்தளங்களும் பெண்களும்.

சமூகவலைத்தளங்களும் பெண்களும்.
கடந்த இருபது ஆண்டுகளில் சமூக வலைத்தளங்களில் பெண்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டரில் ஈமெயில் அனுப்புவதே சிரமமாய்ப் பெண்கள் நினைத்தது ஒரு காலம். இன்றோ கைபேசியில் இணையம் வந்தபிறகு முகநூல், வலைத்தளம், வாட்ஸப், ட்விட்டர், ஸ்ம்யூல் ( பாடல் இணையம் ), யூ ட்யூப், டிக்டாக், ப்லாக்ஸ்பாட், தனி வெப்சைட்  எனப் பலவற்றில் பெண்கள் புகுந்து வெளுத்து வாங்குகிறார்கள்.
பேசுவதற்கும் தகவல் அனுப்புவதற்கும் உபயோகப்பட்ட செல்போன் இணையத்தையும் குறைந்த மாதாந்திர தொகையில் வழங்க ஆரம்பித்த பின்பு பெண்களின் உள்ளங்கையில் உலகம் உருள ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட சாதகங்களும் பாதகங்களும் அநேகம்தான்.
முதலில் சாதகங்களைப் பார்ப்போம். முதலில் தனிநபர் & குடும்பப் பயன்பாடு. கையில் செல்ஃபோன் இருப்பதால் வெளியே செல்லும் பெண்கள் தங்கள் இருக்குமிடத்தைச் சொல்ல முடிவதால் பாதுகாப்பு பயம் குறைகிறது. ரூட் தெரியாத இடத்திலும் தானே மேப்பிங் மூலம் வண்டியையோ காரையோ ஓட்டிச் சென்று வர முடிகிறது. குடும்ப மெயில்கள், குடும்பப் புகைப்படங்கள், விழாக்கள், நிகழ்வுகளை அவ்வப்போதே அறிவித்து அனுப்ப முடிகிறது. திருமண, குடிகுபுதல், இன்விடேஷன்கள், வாழ்த்துகளை உடனே பலருக்கும் ஒரு தொடுகையில் அனுப்பலாம். டாகுமெண்ட்களை அஞ்சலில் அனுப்பினால் தொலைய வாய்ப்பிருக்கிறது. அதை செல்ஃபோனில் ஒரு க்ளிக் செய்துஅனுப்பி விடலாம். வயதான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் வாட்ஸப் மூலம் எந்த நாடாக இருந்தாலும் ஒருவர்க்கொருவர் முகம் பார்த்துப் பேசலாம். பணம் பெறவோ செலுத்தவோ வங்கிக்குச் செல்ல வேண்டாம்.

அன்னம் பாலித்த அண்ணன். தினமலர் சிறுவர்மலர் - 7.


அன்னம் பாலித்த அண்ணன். :-

அன்னம் பாலித்த அண்ணன் என்றால் உங்களுக்கு தங்கையின் வேண்டுதலுக்காகத் தடா தடாவாக அக்கார அடிசிலும் வெண்ணையும் சமர்ப்பித்த ராமானுஜரும் ஆண்டாளும் நினைவுக்கு வரலாம். ஆனால் அடர் கானகத்தில் ஏதும் கிட்டாத இடத்தில் ஒரு அண்ணன் தன் தங்கைக்கு ஒரு முனிவர் மூலம் ஏற்பட்ட சோதனையில் இருந்து காக்க அன்னம் பாலித்தார் என்பது தெரியுமா?. அதுவும் எப்படி ? முனிவருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சீடர்களுக்கும்  அறுசுவை உண்டி சாப்பிட்ட உணர்வை உண்டாக்கி இக்கட்டிலிருந்து நீக்கினார் என்றால் ஆச்சர்யம்தானே. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
Related Posts Plugin for WordPress, Blogger...