எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர் . ஜக்கும்மாவின் ரின் நினைவுகள்.

ஜக்குமா. சகு மேம் என் முகநூல் தோழி. ஒருவரை ஏன் பிடிக்கும் எதுக்குப் பிடிக்கும்னு தெரியாது. ஆனா பார்த்தோடனேயே பிடிக்கும். அவங்கள்ல ஒருத்தர் ஜக்குமா. மிக மிக அன்பானங்க. அதிர்ந்து ஒரு சொல் சொல்லி எழுதி அறியாதவங்க. தன்மையானவங்க. பேசும் , எழுதும் ஒவ்வொரு வார்த்தையையும் நூறு முறை யோசித்தபின் எழுதுறவங்க. தன்னையறியாமல் கூட அடுத்தவங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையா இருப்பாங்க. எனக்கு அவரோட பதிவுகள் பிடிக்கும்.அவரிடம் சாட்டர்டே போஸ்ட்டுக்காக தன்னோட கருத்துகளைப் பகிர்ந்துக்கும்படி கேட்டிருந்தேன். அதுக்கு அவரின் பதில் இங்கே. :)


சகு மேம் எங்களோடு நீங்கள் சொல்ல நினைத்து இதுவரை சொல்லாத நிகழ்வுகள் சிலவற்றைப் பகிர்ந்துக்க வேண்டுகிறேன். 

 முயற்சிக்கறேன்! தேன்! உங்களைப் போலெல்லாம் பத்திரிகை க்காக எல்லாம் நான் எழுதிய அனுபவம் கிடையாதுப்பா! உங்க மதிப்பில் நான் இருப்பது உங்களுக்கே உள்ள அன்பான குணம்! நேரம் கொஞ்சம் சாதகமாக சில நேரங்களில் அமைய மெனக்கிட வேண்டியதாய் போய்விடுகிறது!

வெள்ளி, 31 ஜூலை, 2015

அவங்கதான் இவங்களா..

81 - 84 வரையிலான குமுதம் விகடன் அட்டைப்படங்கள். என்னுடைய சேமிப்பில் இருந்து கண்டெடுத்தேன். அட அட அட கொள்ளை அழகுக் குழந்தைகள். ஆமா இப்ப எல்லாம் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து அட்டைப்படம் போட்டா யாரும் பார்க்கிறதில்லையா. இல்லாட்டி  பெத்தவங்க ஒப்புக்கிறதில்லையா. என்னவோ போங்க.. இவங்க எல்லாம் இப்ப வளர்ந்துருப்பாங்க.,

ஒரு வேளை அவங்கதான் இவங்களா :) :) :)


அப்பக் கூட குமுதம் குறும்பைப் பாருங்க. :)

வியாழன், 30 ஜூலை, 2015

முன்னோடிகள் மறைவதில்லை.

கல்லூரியில் சேரும் முதல் நாள். முதல்வரைச் சந்திக்க வேண்டும். ஒரே டென்ஷன்.தந்தையுடன் ரிஷப்ஷனில் நின்றது ஞாபகத்தில் பக்கத்தில் ஒரு சின்ன கெபி. குழந்தை யேசுவைச் சுமந்த மேரி கண்ணில் பட கல்லூரி பற்றிய பயத்தோடு சின்ன பெரிய வேண்டுதல்கள் எல்லாம். முதல்வர் சந்திப்புக்குப் பின் ராகிங் இருக்குமே. அதுதான். 

என்னுடைய டர்ன். அப்பாவோடு உள்ளே நுழைந்து மாலை வணக்கம் சொன்னேன். கண்ணாடியணிந்த கம்பீரமான உருவம். சிம்மம்போன்ற பார்வை. நான் மிரட்சியோடு இருக்க அப்பா’ கெமிஸ்ட்ரில நல்ல மார்க் இருக்கதால பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி க்ரூப் கிடைக்குமா ‘ என்று கேட்டார். லேசான கனிவோடு கேட்ட கோர்ஸில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் சகுந்தலா மேடம் . கொஞ்சம் பயமும் அதிகம் நம்பிக்கையுமாக வெளியே வந்தேன். 

புதன், 29 ஜூலை, 2015

முகமூடிகளும் மனப்பூக்களும்.

321. கன்னியாகுமரியை நான் ஒரு ரயில் பயணத்தில் படித்தேன் . அவர் சொன்ன ஒரு விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. பெண்ணை முழுமையாக யாருமே உணர்ந்ததில்லை., அவள் மனதின் அடி ஆழத்தை உணரவே முடியாது எல்லாவிதத்திலும் என்ற இடம் பிடித்தது. ஆனால் ஆரம்பம் ஏனோ கொஞ்சம் பிடிக்கல. சைக்கலாஜிக்கலா ஒரு ஆண் அதுவும் காதலன் , (கணவன் இல்லை ) இப்படியும் தன் காதலி பத்தி அவளுக்கு ஒரு சிதைவைச் சிந்திக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஆனால் பல மனிதர்களின் இயல்பைப் பார்த்தா அது உண்மையான விஷயமாகவும் இருக்கலாம் என  இப்பத் தோணுது.

322.  இனி எதுவும் செய்து திருத்திவிடமுடியாது அம்முகத்தை.

தனக்கு மட்டுமே தெரிந்த கோணல், தனக்கு மட்டுமே தெரியாத அழுக்கு,பிறருக்குத் தெரியும் இனிப்பும் கசப்பும் பூசிக்கிடக்க பலவருடங்களாக தேய்த்துக் கழுவிக் கழுவிச் சுத்தம் செய்த அம்முகத்தில் சுருக்கங்கள் சேரத்துவங்கி இருக்கிறது வயோதிகத்தின் வலியாய்.

திருத்தமுடிந்த சிலவும் திருத்தமுடியாத பலவும் நிறைவேறாத கனவுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் அசைக்க நதியில் மிதக்கும் சருகாய் காயத்துவங்கி இருக்கிறது அவ்வுடல்.

மீட்டெடுக்க முடிந்த சொச்ச ஞாபகங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது அந்த மனம்.

வீட்டின் ஒரு பகுதி இளையோர் உலகமாயிருக்க
இன்னொரு பாகம் முதியோர் இல்லமாய் ஆகிக்கொண்டிருக்கிறது.

323. புதுக்கவிதைகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று பாராட்டுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள் :)
காலத்தின் கட்டாயம். :)

324. நடிகர்கள் பெருகிவிட்டார்கள் எல்லாத் துறையிலும்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

பூக்களும் பூவையர்களும்.

பூக்களும் பூவையர்களும்.


பூக்களிலே நானும் ஒரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்.
பூவாய் நான் பிறந்தாலும்
பொன்விரல்கள் தீண்டலையே.
பொன்விரல்கள் தீண்டலையே
நான் பூமாலை ஆகலையே.

என்ற மு மேத்தாவின் கவிதை கல்லூரிப் பருவத்தில் படித்தது. அரளிப்பூ சொல்வது போல் அமைந்த இக்கவிதை முதிர்கன்னிகளையும் அவர்தம் நிலையையும் குறிப்பது. இன்னும் மறக்காமல் நினைவில் நிற்கின்றது.

நேரு மாமா என்றால் க்கெல்லாம் ரோஜாப்பூ ஞாபகம் வரும். புன்னகை பூத்தல், நறுமுகை, ென்னஅரும்புதல், முல்லைச் சிரிப்பு, இவை எல்லாமே மலர் தொடர்பான சொற்கள். மலர்விழி, பூங்குழலி, மல்லிகா, ரோஜா, பைரோஸ், ஜாஸ்மின், தாமரை, செந்தாமரை, குறிஞ்சி, வாணி, திலகம், செண்பகம், வள்ளி, புஷ்பா, மாலா , ஃப்ளோரா, ஃப்ளாரன்ஸ், என்று நம்மூர்ப் பெண்களின் பெயர்களிலும் சரி மலர்கள் மணம் வீசுவன.

Related Posts Plugin for WordPress, Blogger...