எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களையும் தன்னுடைய துறையில் ஈடுபட்டு ஜெயித்து வானளாவிய அதிகாரத்தோடு திகழும் பெண்களையும் சாதனைப் பெண்கள் எனவும் சக்தி வாய்ந்த பெண்கள் எனவும் சொல்லலாம். இந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளைப் பார்த்து இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் மட்டுமல்ல சமூகமே அச்சமுறுகிறது என்றே சொல்லலாம். இந்திரா காந்தி,மார்கரெட் தாட்சர் போன்ற சில பெண் தலைவர்களையே நாம் சக்தி வாய்ந்த பெண்மணிகளாக அறிந்திருக்கிறோம். இன்னும் பலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஃபோர்ப்ஸ் பத்ரிக்கையில் பெப்சிகோ இந்திரா நூயி, எஸ் பி ஓ சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா , ஐசிஐசிஐ சந்தா கோச்சார்  (இவருக்கு ஃபார்ச்சூன் பத்ரிக்கையும் நம்பர் ஒன் பட்டம் அளித்திருக்கிறது. ), சிஸ்கோ சிஸ்டம்ஸ் பத்ம ஸ்ரீவாரியார், பயோகான் கிரண் மஜூம்தார்,, ஆகியோர் மட்டுமல்ல. ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மா, கேப் ஜெமினி இந்தியாவின் அருணா ஜெயந்தி, பணக்காரப் பெண்மணிகள் சாவித்ரி ஜிண்டால், இந்து ஜெயின், அனு அகா, ,மீடியா பெண்மணி ஷோபனா பார்த்தியா ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ) , ஜே. கே. லெக்ஷ்மி சிமிண்ட் வினிதா சிங்கானியா, லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி திவ்யா சூரி சிங், கிண்டால் புஷ்பா பானர்ஜி இன்னும் பல ப்ரபலங்களும் இருக்காங்க  அந்த லிஸ்ட்ல நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் இருக்காங்க.

திங்கள், 13 ஏப்ரல், 2015

பாபா சாகிப் டாக்டர் பி ஆர் அம்பேத்காரின் 125 ஆவது பிறந்தநாளில் 22 உறுதிமொழிகள் பதாகை திறப்பு.

அம்பேத்காரின் 125 ஆவது பிறந்த நாளில் சென்னையில் உள்ள நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் ( தம்ம கிரந்தி யாத்ரா என்று நினைக்கிறேன் - மகாராஷ்டிரா -  நாக்பூரின் தீக்ஷா பூமியில்) 1956 இல் மேற்கொள்ளப்பட்ட சமத்துவமான சமுகத்தை உருவாக்கிடத் தேவையான 22 உறுதிமொழிகள் கொண்ட பதாகை திறக்கப்படுகிறது என்று  ஈ மெயில்  - PRESS INVITATION என்று தலைப்பிடப்பட்டு எனக்கு வந்திருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதை, சமநீதி, அரசியல் பொருளாதார சமூக சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, வர்க்க பேதம் நீக்குதல், பெண் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தியவர் என்று அம்பேத்காரின் மேல் அபிமானம் உண்டு. (சாஸ்த்ரி பவன் பெண்கள்/ தலித் பெண்கள் நலச்சங்கத் தலைவி சென்ற இரு வருடங்களுக்கு முன்னால் அம்பேத்கார் பிறந்த தினத்தில் அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் உரையாற்ற அழைத்திருந்தார். ) இந்த ஈமெயில் அழைப்பைப் பார்த்ததும் அந்த ஞாபகங்கள் அலைமோதின. 
இந்தப் பதாகைகள் செலக்ட் செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு வால் ஹேங்கிங் ஆக வழங்கப்படவும் இருக்கின்றனவாம். 

சனி, 11 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட். வலைச்சரத்தில் வசிக்கும் தமிழ்வாசி ப்ரகாஷ்.

வலைச்சரப் பொறுப்பாசிரியராகப் பலர் இருந்தாலும்  சீனா சார்தான் வலைச்சரத்தை உருவாக்கியவர் என்று நினைத்து வலைச்சரம் பற்றி அவரிடம் கேட்டிருந்தேன். அவரோ தானும் பொறுப்பாசிரியர்தான் என்றும் இது பற்றிக் கூறச் சரியானவர்  தமிழ்வாசி ப்ரகாஷ்தான் என்றும் அவரிடம்  கேட்கும்படியும் கூறி இருந்ததால் அவர்களிடம் வேறு கேள்வி கேட்டேன்.

வியாழன், 9 ஏப்ரல், 2015

வெள்ளையா இருக்கதெல்லாம் வெசமாமே..

மனோ சுவாமிநாதன் மேடம்  இன்று எதைத்தான் சாப்பிடுவது என்று ஒரு போஸ்ட். போட்டிருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டே இருந்தேன். சிக்கன் சாப்பிடாதீங்க அதுல ஆர்சனிக் இருக்குன்றாங்க. எறால் சில சமயம் கல்டிவேட் ஆகுற இடத்துல ஓவரா ஏதோ மருந்து தெளிச்சு விட்டிருக்காங்க போல டபுள் கொடலோட எறாக்கள பார்த்தேன். ரெட் மீட் வேண்டவே வேண்டாம் வெயிட் போடும். ஹார்ட்டுக்கு எதிரி. முட்டை மஞ்சக் கரு வேணாம். மத்ததுல கொழுப்பு, தோல் எல்லாம் வேணாம். கருவாடும் உப்புக் கண்டமும் ”ஆத்தாடி கெட்ட பயவிட்டு..” என்று சொல்வார்கள். ( கெடுதல் என்பதைக் காரைக்குடி மொழி வழக்கில் )

நினைவுகள்.:-

நினைவுகள்.:-
******************
வாலைச் சாமரமாக்கி
சுற்றி வரும்
ஈக்கு விசிறியபடி
எருமை இறங்கியது
நீருக்குள்..
முதுகு நனையாமல்
தெப்பமாய் நகர்ந்தது.
வைக்கோல் தேய்த்துத்
தண்ணியள்ளி அலசி
ஊற்றினான் மேய்ப்பன்.