எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட். வலைச்சரத்தில் வசிக்கும் தமிழ்வாசி ப்ரகாஷ்.

வலைச்சரப் பொறுப்பாசிரியராகப் பலர் இருந்தாலும்  சீனா சார்தான் வலைச்சரத்தை உருவாக்கியவர் என்று நினைத்து வலைச்சரம் பற்றி அவரிடம் கேட்டிருந்தேன். அவரோ தானும் பொறுப்பாசிரியர்தான் என்றும் இது பற்றிக் கூறச் சரியானவர்  தமிழ்வாசி ப்ரகாஷ்தான் என்றும் அவரிடம்  கேட்கும்படியும் கூறி இருந்ததால் அவர்களிடம் வேறு கேள்வி கேட்டேன்.முகநூலில் நண்பரான தமிழ்வாசி ப்ரகாஷிடம் குறுகிய காலத்தில் இதற்குப் பதில் அளிக்கவேண்டினேன். தமிழ்வாசி ப்ரகாஷ் மதுரைக்காரர். வலைச்சரத்தில் வாராவாரம் ஆசிரியர்களைக் கண்டுபிடித்துப் பொறுப்பில் அமர்த்துகிறார். முன்பு சீனா சார் இந்தப் பணியைச் செய்து வந்தார்கள். இது மிகவும் சிரமம் தரும் வேலை. வாரா வாரம் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டுமே. :)

2010 இல் இரு வாரங்களுக்கு நான் மே மாதத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றேன்.  முதன் முறையாக ஆசிரியராகப் பொறுப்பேற்றது பல வலைப்பூக்களை வாசிக்கும் வாய்ப்பைத் தந்தது , மேலும் நான் எழுத்து முறையில் செம்மைப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது. நிறைய அறிமுகங்கள். நிறைய சந்தோஷங்கள் கிடைத்தது.

வலைப்பதிவர்கள்தான் எந்தச் சமயம் கேள்வி கேட்டாலும் அல்லது படைப்பு கேட்டாலும் உடனே அனுப்பக்கூடியவர்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். தற்போது அனைவரும் முகநூலிலேயே ( நான் உட்பட பலரும் ) இரண்டு முதல் இருபது வரி வரை எழுதி இண்ட்ஸ்டண்ட் லைக் மோகத்தில் திளைப்பதால் வலைப்பதிவு எழுதுவது குறைந்து வருகிறது என்பது என் அனுமானம். ஆனால் முகநூலில் நாம் புகைப்படத்துடன் பகிராவிட்டால் அந்த போஸ்டைத் தேடுவது கடினம். அதே வலைப்பூ என்றால் தேதி வாரியாகப் பிரித்து டைம் டேபிள் போட்டுக் கொடுத்துவிடும். நம்ம கரூவூலம் ஆச்சே.

அதுனாலயே இது பற்றி  ஒரு ஆர்வமும் ஆதங்கமும் உண்டு. அனைவரும் தொடர்ந்து வலைச்சரத்திலும் வலைப்பூவிலும் எழுதுங்க ப்ளீஸ். முகநூலில் எழுதினாலும் அதை வலைப்பூவிலும் சேமித்து வையுங்கள். எனவே தமிழ்வாசி ப்ரகாஷிடம் சாட்டர்டே போஸ்டுக்காக வலைச்சரம் பற்றிய விபரங்களைப் பகிரும்படிக் கேட்டிருந்தேன். அவர் கொடுத்த பதில் இங்கே.

/// வலைச்சரம் பற்றிக் கூறுங்கள் ப்ரகாஷ் சகோ ////

வலைச்சரம்...
26.02.2007ல் வலைச்சரம் சிந்தாநதி எனும் மூத்த பதிவரால் ஆரம்பிக்கப்பட்டு  பதிவர் பொன்ஸ் அவர்கள் முதல் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 30-04-2007-இல் பதிவர் முத்துலட்சுமி அவர்களும், 04/05/2008-இல் இருந்து சீனா ஐயா அவர்களும், பொறுப்பாசிரியராக இருக்கிறார்கள். வலைச்சரக் குழுவில் சீனா ஐயாவுடன் இணைந்து கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக  உள்ளேன்.

வலைச்சரம் பற்றி அறியாத பதிவர்கள் யாருமே இருக்க முடியாது. வலைப்பதிவர் ஒருவர் ஒரு வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று தனது வலைப்பதிவுகளில் எழுதியுள்ள முக்கியமான இடுகைகளை சுட்டிக்காட்டியும், சக வலைப்பதிவர்களின் வலைப்பதிவுகளை, அதில் உள்ள இடுகைகளை சுவாரஸ்யமாக தொடுக்கும் வலைப்பதிவு கதம்பமே வலைச்சரம் ஆகும். வலைப்பதிவுகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் வலைச்சரத்துடன் ஏதாவது சில வழிகளில் தொடர்புடன் இருப்பார்கள்/இருந்திருப்பார்கள். ஒரு வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பு ஏற்றோ, பதிவர்களின் வலைப்பூக்கள் அறிமுகம் செய்யப்பட்டோ இருக்கும். 

வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க பதிவர்கள் தமது வலைப்பூவில் குறைந்தது ஐம்பது இடுகைகள் எழுதியிருக்க வேண்டும், அல்லது ஆறு மாத காலம் வலைப்பூவில் இடுகைகள் பதிந்திருக்க வேண்டும். சில சமயங்களில் சிலர் குறைந்த காலத்தில், குறைந்த பதிவுகளில் வலைப்பதிவர்களிடையே அனைவர்க்கும் தெரிந்த வகையில் இருந்தாலும் அவர்களை ஆசிரியர் பொறுப்புக்கு அழைத்திருக்கிறோம். பதிவர்களின் மின்னஞ்சலை தேடிப்பிடித்தும், தொடர்பு எண்ணையும் விசாரித்தும், சக பதிவர்களின் பரிந்துரையாலும் வாராவாரம் பதிவர்கள் ஆசிரியர் பொறுப்பேற்க வைத்தோம். தமிழ் பதிவுலகில் இருக்கும் பெரும்பான்மையான பதிவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் தான். சில சமயங்களில் சிலர் இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் ஆசிரியர் வாய்ப்பு பெற்றவர்களும் உண்டு.

வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை பதிவுகள் எழுதலாம். அதில் ஒரு பதிவில் தமது வலைப்பூ பற்றி அறிமுகம் செய்தும், ஏனைய பதிவுகளில்  மற்றவர்களின் வலைப்பூக்களில் உள்ள சிறந்த தமக்கு பிடித்த பதிவுகளை சுட்டி இணைத்து சுவாரஸ்யமாக தொகுத்து பதிவிடலாம். 

வலைச்சரம் கடந்த சில மாதங்களாக சரியாக இயங்காத நிலையில் உள்ளது. காரணம் வலைப்பதிவர்கள் பற்றாக்குறையே. ஒவ்வொரு வாரமும் வலைப்பதிவர்களை தேடிப்பிடித்து ஆசிரியர் பொறுப்பேற்க வைப்பது என்பது சிரமமான காரியமாக மாறி விட்டது. ஆசிரியர் பொறுப்பேற்க அழைப்பு விடுத்து மின்னஞ்சல் அனுப்புவோம். பலரும் அதற்கு பதில் அனுப்புவதில்லை. இப்போது முடியாது, பிறகு பார்க்கலாம் என ஏதாவது ஒரு பதிலை எதிர்பார்க்கிறோம் ஆனால் பதில் வராது. இந்நிலையில் அவர்களை கொஞ்ச காலத்திற்கு பிறகு திரும்ப அழைக்கவும் பலமுறை யோசனை செய்ய வேண்டி உள்ளது. முன்பெல்லாம் குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஆசிரியர் பொறுப்பேற்கும் பதிவர்கள் பட்டியல் கைவசம் இருக்கும். ஆனால் இப்போது அடுத்த வாரத்திற்கே ஆசிரியர் யார் என தெரியாமல் இருக்கிறோம். பலரும் பின் வாங்குவதால் இந்நிலை. ஆனாலும் நாங்கள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆசிரியர் பொறுப்பேற்க சிலர் ஆர்வத்துடன் தாமாக முன் வந்தவர்களும் உண்டு.

இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் பட்டியல் இப்பதிவில் உள்ளது.

ஆனாலும் பதிவர்களிடையே வலைச்சரம் வலைப்பதிவுகளின் திரட்டியாகவும், பதிவர்களின் எழுத்து திறமையை ஊக்குவிக்கும் தளமாக இப்போதும் உள்ளது.


நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...


www. tamilvaasi.com///

டிஸ்கி:-லேடீஸ் ஸ்பெஷலில் சிறிது காலம் ஃப்ரீலான்சிங்காகப் பணியாற்றச் சென்றபோது முதன் முதலில் நான் வலைச்சரம் பற்றிக் கூறினேன். அதற்கு கிரிஜா மேடம் வலைச்சரத்தைத் தான் தொடர்ந்து வாசித்து வருவதாக சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. அது வலைக்கதம்பம் என்பதால் பல்வேறு பத்ரிக்கையாளர்களும் கூட வாசிக்கலாம். இதன் மூலம் பலர் பத்ரிக்கைகளிலும் எழுதும் வாய்ப்புப் பெற்றுள்ளார்கள். எனவே நேரம் கிடைப்பவர்கள் வலைப்பூவிலும் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றும் சிறப்பிக்க வலைச்சரம் சார்பில் வேண்டுகிறேன். புதிதாக எழுத ஆசைப்படுபவர்களையும் புதிய ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்துங்கள்.

நிறைய விபரங்கள் அளித்தமைக்கும் ,என்னை ஆசிரியராக்கி அழகு பார்த்த வலைச்சரம் பற்றி எழுத வாய்ப்பளித்தமைக்கும் நன்றி ப்ரகாஷ். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது வலைச்சரத்தை ஆரம்பித்த சிந்தாநதி, பொன்ஸ், முத்துலெட்சுமி, சீனாசார், ப்ரகாஷ் மற்றும் வாராவாரம் பொறுப்பேற்றுச் சிறப்புற நடத்திவரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பும் வாழ்த்துகளும் .

15 கருத்துகள்:

 1. தெரிந்த தகவல்கள்தான், இன்னும் செம்மையாகத் தெரிந்து கொண்டேன். இருவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வலைச்சரம் மட்டும் இல்லையென்றால் பலரும் பல புதிய பதிவர்களை அறிந்திருக்க முடியாது...

  வலைச்சரம் மீண்டும் சிறக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 3. மனம் திறந்த பேட்டியும், தகவல்களும் அருமை.

  வலைச்சரத்தின் பணி, பெரும்பாலான வாரங்களில், அருமையான ஆசிரியர்கள் அமைந்ததால் மிகச்சிறப்பானதாகவே விளங்கி வந்தன.

  இதனால் பல புதிய பதிவர்களின் தளங்களைப்பற்றியும், அவர்களின் சில மிகச்சிறப்பான ஆக்கங்களைப்பற்றியும் பலரும் அறிய நல்லதொரு வாய்ப்பாக அமைந்திருந்தது.

  இப்போது பொறுப்பேற்க விருப்பமும், ஆர்வமும், தகுதியும், நேரமும் ஒருங்கே அமையப்பெற்ற வலைச்சர ஆசிரியர்கள் கிடைக்காமல் இருப்பதாகச்சொல்வது கேட்க சற்றே வேதனையாகத்தான் உள்ளது.

  வலைச்சரம் வழக்கம்போல மீண்டும் புத்தொளிபெற்றுத் திகழ, பதிவர்கள் அனைவரும் யோசித்து, தாங்களாகவே பொறுப்பேற்க முன்வந்து உதவினால் வலைச்சரக்குழுவினருக்கும், பதிவுலகுக்கும் நன்மையளிக்கக்கூடும்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 4. //இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் பட்டியல் இப்பதிவில் உள்ளது.//

  http://cheenakay.blogspot.in/2014/11/003-20112014_23.html இதில் போய்ப்பார்த்தால் click here to download the excel file என அதில் எழுதப்பட்டுள்ளது. கிளிக்கினால் அந்த excel file download ஆகவே மாட்டேன் என்கிறது. இது Just ஒரு தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 5. வலைச்சரம் பற்றிப் பல தகவல்களை அறியத் தந்ததற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா :)அருமை. பிரகாஷ் தம்பிக்கும் வலைசர குழுவுக்கும் பேட்டி எடுத்த தேனக்காவுக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. வலைச்சரம் பற்றிய தகவல்கள்...
  சுவையானவை!

  பதிலளிநீக்கு
 8. வலைச்சரம் பற்றிய தகவல்களை தந்த சகோ.பிரகாஷிற்கும் ,பேட்டி கண்ட தேனக்காவிற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 9. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

  சரியா சொன்னீங்க தனபாலன் சகோ

  உங்கள் ஆதங்கம் உண்மைதான் கோபால் சார். உங்கள் ஆசியால் புதிய ஆசிரியர்கள் அமையட்டும். உங்களது 100 க்கு மேற்பட்ட பதிவுகள் வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று ஒரு பதிவில் நீங்கள் கூறி இருக்கிறீர்கள். எனது அநேக பதிவுகளும் பிற வலைத்தளங்களும் கூட குறிப்பிடப்பட்டுள்ளன.

  ஆம் கோபால் சார் வலைச்சரப் பொறுப்பேற்றவர் பட்டியலைத் திருத்த வேண்டும் என நினைக்கிறேன். எனக்கும் இணைப்பு திறக்கவில்லை.


  பதிலளிநீக்கு
 10. முதல் முறை கருத்திட்டுள்ளமைக்கு நன்றி மணவை ஜேம்ஸ் அவர்களே

  நன்றிடா ஏஞ்சலின்

  ஆம் முகம்மது நிஜாமுதீன் சகோ. கருத்துக்கு நன்றி.

  நன்றிடா ப்ரியசகி அம்மு

  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 12. நன்றி வெங்கட் சகோ :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 13. வலைச்சரம் சிறப்பாக இயங்க நாம் எல்லோரும் சேர்ந்தே பாடுபடவேண்டும் வலைச்சர ஆசிரியர் குழுவுடன்.

  பதிலளிநீக்கு
 14. தமிழ்ப் பதிவுலகில் வலைச்சரத்தின் பங்கு மகத்தானது. சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மை விரைவில் சரியாகும்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...