வியாழன், 9 ஏப்ரல், 2015

நினைவுகள்.:-

நினைவுகள்.:-
******************
வாலைச் சாமரமாக்கி
சுற்றி வரும்
ஈக்கு விசிறியபடி
எருமை இறங்கியது
நீருக்குள்..
முதுகு நனையாமல்
தெப்பமாய் நகர்ந்தது.
வைக்கோல் தேய்த்துத்
தண்ணியள்ளி அலசி
ஊற்றினான் மேய்ப்பன்.
சொறியக்கொடுத்த மாடு
மின்னியது மதியவெய்யிலில்.
மேய்ப்பனுக்குப் பசியெடுத்தபோது
நீர்விட்டு மேலேறி நடந்தது
தடங்களில் புழுதி சுமந்து.
நேரங்கிடைக்கையில் எல்லாம்
குளியல் கிடைத்தது
எருமைக்கு.
சுத்தமானோமோ இல்லையோ
என்பதறியாமல் அசைபோட்டபடி.

டிஸ்கி :- இந்தக்கவிதை 1.2.2015 சொல்வனத்தில் வெளியானது.

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காட்சிகள் கண்ணில் தெரிந்தன...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

எருமைப் படங்களும் அதற்கேற்ற கவிதையும்
அருமை.

//மின்னியது மதியவெய்யிலில்.//

ஆஹா ! மிகச்சிறந்த பொருத்தமான இந்த வரிகளும் மின்னுகிறதே :)

Raja subramanian சொன்னது…

எருமைக்கும் ஒரு கவிதை.அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படமும் படத்திற்கான கவிதையும் நன்று.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி கோபால் சார்

நன்றி ராஜா சுப்ரமண்யன்

நன்றி வெங்கட் சகோ. கவிதைக்குத்தான் சொல்வனத்தில் இந்தப் படம் போட்டிருக்கிறார்கள். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...