புதன், 15 ஏப்ரல், 2015

பூனைச் சொப்பனம். ( சொல்வனத்தில் )எண்ணெய்ப்புகை காரம் இழுத்து
வெளியெறியும் மின் போக்கிவழி 
கரேலென்று உள்நுழைந்து
தொலைக்காட்சி அட்டைமேல்
சுருண்டு துயிலும் அது.
தடைபட்ட மின்சாரம் வேர்வையூற்ற
சமையலறை இருளில்
தாகமடக்க நீர்விழுங்கி
மல்லாந்திருக்கும் போது
பரணில் மின்னும் இரட்டை வைரம்
படபடவெனப் பதட்டமூட்டும்.
என்னசைவு கண்டு வெருண்டு
உருண்டு புரண்டு அட்டை சரசரக்க
மின் இறகசைத்து நுழைந்து
வெளிப்பறக்கும் கருமூட்டையாய் அது.
வரவு தடுக்க வெண்குழல் எரித்தும்
வந்த மின்சாரம் பிடித்து விசிறியசைத்தும்
விழித்து விழித்து நான் காணும் சொப்பனத்தில்
எத்தனையோ கடவு தாண்டியும்
பதுங்கிப் பதுங்கி இருக்குமந்த கறுப்புப் பூனை.

டிஸ்கி :- இந்தக் கவிதை மார்ச் 16 - 31 , 2015 சொல்வனம் மின்னிதழில் வெளியானது. 

10 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

பூவையின் எண்ணங்களுக்கு வந்து கருத்துப் பதிவு செய்ததற்கு நன்றி gmb writes வலைப்பதிவுக்கு வருகை தாருங்களேன் வலைப் பதிவர் நட்பு வளர எழுதி உள்ளீர்கள் . என் எண்ணங்கள் பதிவாக விரைவில்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கனவில் கண்ட கறுப்புப் பூனையினை வர்ணித்து எழுதியுள்ளது மிகவும் அருமை!

சொல்வனம் மின் இதழில் வெளியானது பெருமை!! பாராட்டுகள்.

எழுத்துலகில் தங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்ட வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

கீத மஞ்சரி சொன்னது…

சொப்பனப்பூனை வாசிக்கும்போதே பதற்றம் உண்டாக்குகிறது. அருமை தேனம்மை.

வல்லிசிம்ஹன் சொன்னது…

கனவில் தூங்கும் பூனை. வெய்யிலில் வரும் மயக்கப் பூனையா. வெகு அருமை தேன்

yathavan nambi சொன்னது…

பூனைச் சொப்பனம் நன்றாகவே பலித்து விட்டது! சகோ!
இது மியாவ்! மியாவ் பூனை மட்டுமல்ல!
பார்த்தவர் மனதை விட்டு நீங்காத அழகு பூனை
சொப்பன வாழ்வில் மகிழும் மகத்தான பூனை!
அருமை!
நட்புடன்,
புதுவை வேலு

ஸ்ரீராம். சொன்னது…

திகில் பூனை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மின்னும் இரட்டை வைரங்கள்.....

நல்ல கற்பனை. பாராட்டுகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

பதிவு அருமை ஜி எம் பி சார்

நன்றி கோபால் சார்

நன்றி கீதா

ஆமா வல்லிம்மா

நன்றி யாதவன் நம்பி சகோ

ஆம் ஸ்ரீராம் :)

நன்றி தனபாலன் சகோ

நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...