எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 மார்ச், 2015

என் வீடு என் சொர்க்கம்.

161. மேகத் தோணி மிதக்கிறது
துடுப்பில்லாமல்.
கன்னத்தில் கைவைத்து
எட்டிப் பார்க்கிறது நிலவு
எப்போது தரையிறங்குவோமென.

162. சில வருடங்களுக்கு முற்பட்ட
நாம் இல்லை இப்போது
நம் கிறுக்கல்களில்
தூசு படிந்திருக்கிறது.
முதுமைச் செதில் உதிர
அதன் மேலேயே ஒப்பனை செய்து கொள்கிறோம்
பேசத் தெரியாத உனக்கு
இன்று வார்த்தைகள் மிச்சமில்லை
மரத்தைப் போல உலுக்கிக்கொண்டே இருக்கிறாய்
எல்லாவற்றிலும் விட்டு விடுதலையாகி
நீ வேராய் எஞ்சும் தருணத்துக்காய்க் காத்திருக்கிறேன்
கிளையா அதில் கிளியா எனப் பகுக்கமுடியாமல்.
நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தபடி
வலம் வந்துகொண்டிருக்கின்றன
சூரியனும் சந்திரனும்.

செவ்வாய், 24 மார்ச், 2015

அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்:-


அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும். :-

அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்

 MISSION IMPOSSIBLE ,FACE OFF போன்ற படங்களில் அதன் நாயகர்கள்  ஜான்  ட்ரவால்டோ & நிக்கலஸ் கேஜ், டாம் க்ரூஸ் ஆகியோர் முகமூடி போல முகத்தை மாற்றிக்கொள்வதைப் பார்த்து அசந்திருக்கிறேன். மூக்குச் சீரமைப்புச் செய்துகொண்ட பிறகு நடிகை ஸ்ரீதேவி ஹிந்திப்பட உலகையே ஒரு கலக்கு கலக்கினார். ஆனால் யதார்த்தத்தில் அவ்வளவு சுளுவானதல்ல முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை என்பதுமைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு நடனப் பயிற்சியில் மூக்கு உடைந்துவிட அதனால் அவர் ஒரு முகச்சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டார். அதில் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்பட மீண்டும் ஒரு  மறுசீரமைப்பு சிகிச்சை என அடுத்தடுத்த சிகிச்சைகள் செய்து கொண்டார். ஆனால் இயல்பாய் அவர் ஆடிய பழைய பாடல்களில் இருக்கும் ஒரு வெகுளித்தனமான அழகு புதுமுகத்தில் காணாமல் போய் இருந்தது. அதே நடனத்திறமைதான் என்றாலும் ப்ளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் அழகான பூரணமான முகத்தைப் பெறலாம். ஆனால் அதே போன்ற எளிமையான கொள்ளை கொள்ளும் அழகும் தோல் மென்மையும் மாறக்கூடும்

செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழ்க்குஷியில் மகளிர் தினச்செய்தி (உரை ) ( 2015 ).



என்னுடைய பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். மகளிர் தினம் பற்றிய  என் கருத்தைக் கேட்ட தமிழ்க்குஷி.காமுக்கும் ஆர்ஜே திரு குமரன் அவர்களுக்கும் என் முகநூல் வலைத்தளத் தோழியர் அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள். 

வண்ணங்களால் நிறைந்தது வாழ்வு. ஆனால் இலக்கியத்திலாகட்டும் இதிகாசத்திலாகட்டும் பெண்ணைப் பணயமாக வைத்துத்தான் நடக்கிறது. நல்லவளாகவோ கெட்டவளாகவோ சித்தரிப்பதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சீதையும் த்ரௌபதியும் இல்லாமல் ராமாயணம் மகாபாரதம் இல்லை. கணவன் சொல் கேட்டு ஐயம் தீர்க்கத் தீப்புகுந்தாள் சீதை. நெருப்பினுள்தான் நீர்க்கப்படுகிறது வாழ்வு. 

சாரட்டுகள்.( பாகீரதியில் )

பகலில் காண்பதை விட
இருளில் குளம்புச்சத்தத்தோடு
திரைப்படங்களில் வரும்
சாரட்டுகள் கிளர்ச்சியூட்டுபவை.
இரவையும் ரகசியத்தையும்
ஒருங்கே சுமந்து வரும் அவை
அரண்மனையிலிருந்து ஆசைநாயகி வீட்டுக்கோ
சதியாலோசனைக் கூட்டத்துக்கோ
உயிர் தப்பி ஓடவோ
ஒரு மறைவான காதலைச் சந்திக்கவோ
பயணப்படுகின்றன.

திங்கள், 16 மார்ச், 2015

’விழுதல் என்பது எழுகையே.’ ( உலகத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் தொடரில் என் பங்களிப்பு ) - பண்ணாகம்.


விழுதல் என்பது எழுகையே. :-


க்ளிக் கிளிக் என்று ஒரு சத்தம். பக்கத்திலிருந்த பெண் செல்ஃபோனால் பஞ்சுப் பொதியாய்க் குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழி சுட்டுக்கொண்டிருந்தாள். லேசாகக் கண்ணயர்ந்த மங்கையர்க்கரசிக்கு இந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார். அவள் திரும்பிப் புன்னகைத்து  ஃபேஸ்புக்கில் போஸ்ட் பண்ணுவதற்காகப் புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணும் இளையதலைமுறையினர். 

ங்கையர்க்கரசி மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியை.  ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அங்கே உரையாற்றச் செல்வதற்காக இந்தப் பயணம் மேற்கொண்டிருந்தார். முதல்நாள் கனடாவில் சந்தித்து விட்டு வந்த பத்மகலாவின் சாயல் இவளிடம் லேசாக இருந்தது. பத்மகலாவை முதன் முதலாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அழைப்பாளராகப் பேசச் சென்றபோது சந்தித்தது நினைவுக்கு வந்தது. ”தமிழரும் மூலிகை மருத்துவமும்” என்ற தலைப்பில் உரையாற்றச் சென்ற அவரை விமான நிலையத்திலிருந்து வரவேற்று பின் வழியனுப்பும் பொறுப்பை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் பத்மகலாவும் தரும சீலனும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஈழத்தின் பெரும்பாலான உணவுகளில் கருவாடு சேர்க்கப்பட்டிருந்ததால் அங்கே தங்கியிருந்த ஒரு வாரத்துக்கு உணவு ஒத்துக்கொள்ளாமையால் பத்மகலாதான் தன் வீட்டிலிருந்து தங்குமிடத்துக்கு தினம் அவள் அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்யப்பட்ட ஆப்பம் , போல் சம்பல், போல் ரொட்டி, பிட்டு சம்பல், இடியாப்பம், கிரிபத், மரக்கறிக்காய் குழம்பு மசியல் எல்லாம் கொண்டுவந்து கொடுத்து பேராசிரியையின் உடல் நலம் கெடாமல் பார்த்துக்கொண்டாள்.