எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

தேன் பாடல்கள்.பாசமும் பிரிவும் ( ரொமான்ஸ் வெள்ளி :)

221. மானூத்து மந்தையிலே மான்குட்டி பெற்ற மயிலே.
கிழக்குச் சீமையிலே அண்ணன் விஜயகுமார் தங்கை ராதிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு சீர் கொண்டு வரும் பாடல் காட்சி. ஒவ்வொரு வரியும் வைரம். ( பாடல் வைரமுத்து )

222. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
பாசமலரில் சிவாஜியும் சாவித்ரியும் அண்ணன் தங்கை. தனக்குக் குழந்தை பிறந்ததும் மாமன் சீர் கொண்டு வருவார் என்று பாடுவார். தனக்கும் அண்ணனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை ஒவ்வொரு வரியும் உணர்த்தும்.

223. பெண்ணே அழகிய தீயே
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பெரும்பாலான பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் இது ஏ க்ளாஸ் பாட்டு. மின்னலேயில் மாதவனும் ரீமாசென்னும்கூட செம க்யூட்.

224. வெண்மதி வெண்மதியே நில்லு.
இதுவும் மின்னலேதான். பிரிவைப் பாடும் பாடல்.  பாத்ருமில் உக்கார்ந்து அழும் காட்சியில் ரீமா செமயாக நடித்திருப்பார். மாதவனும் சோகத்தைப் பிழிந்திருப்பார். // அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே. அளந்து பார்க்க பல வழி இல்லையே// என்ற வரிகள் பிடிக்கும்.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

நிழல்கள் உலவும் தெரு:- ( சொல்வனத்தில் )



நிழல்கள் உலவும் தெரு:-

மரத்தின் கிளைகளிலிருந்து
நிலவுச்சுடர் தெறிக்கச் சிதறிவிழுந்தது
ஒரு வாதாங்கொட்டை.

வாலைமடித்துக் கூர்கண்கள் ஜொலிக்கக்
குப்பைத்தொட்டியினருகே
காத்திருந்தது ஒரு நாய்.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

விரல்கள்.:-



விரல்கள்.:-
================

பிரம்மிப்பு ஏற்பட்டது மனதில் அந்த ஓவியத்தைப் பார்த்ததும். எப்படி வரைய முடிந்தது இப்படி மனசை இழுத்துக் கட்டிக் கொள்கிறார்போல். இத்தனைக்கும் வெறும் பென்சிலால் ஷேட் மட்டும் கொடுத்து வரையப்பட்ட படம் அது. ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் இதழ் பிரிக்காமல் சிரிப்பது போல் இருந்தது.

அந்த இதழின் ஓரத்தில் லேசாய் ஒரு மடிப்பு. அதுதான் சிரிப்புக்கு ஆதாரம்.அந்தப் படத்தில் அந்தப் பெண்ணின் கைகள், விரல்கள், சீராய் சமப்படுத்தப்பட்ட நகநுனிகள், கவுன் சுருக்கம், சுருள் முடி, பம்மினாற்போன்று அந்தக் கன்னம், பளபளத்த தோள்பட்டை எல்லாமே சேர்ந்து சிரிப்பதாகப் பிரமை அளித்தது. கொஞ்சநேரம் எதைப்பறியும் சிந்திக்க முடியவில்லை.

அதன் மேல் வைத்த கண்ணை வேரோடு பிடுங்கித்தான் எடுக்கவேண்டும் போலிருந்தது. மனசு வரிவரியாய் அந்த ஓவியத்தைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தது. ஓவியத்தின் இடது கை மூலையில் கீழ்ப்பக்கம் இராஜன் என்று போட்டிருந்தது.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

ஏற்றுமதி டாகுமெண்டேஷன் - இலவச வழிகாட்டி கருத்தரங்கம். HOW TO MAKE EXPORT DOCUMENTS WITHOUT MISTAKES.- FREE SEMINAR.

நிறைய பேர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வியாபாரம் செய்வாங்க. ஆனா அதுல அடிப்படையா சில விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டா இன்னும் சிறப்பா செய்யலாம். சில சமயம் தரமான பொருளை அனுப்பியும் டாகுமெண்டேஷன் சரியில்லைன்னு சொல்லி அனுப்பின பொருளுக்கான பணம் திரும்ப வராம பலர் அல்லாடுறதும் உண்டு.