மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்.:-
****************************** **************************
தற்காலத்தில் மாணவர்க்கு மொழிப்
பயிற்சி பல சமயம் சிறப்பாய் இருப்பதில்லை.
பேசும் மொழி வட்டார வழக்கிலிருப்பது தவறில்லை. ஆனால் ஒரு
மாணவனின் மொழியைக் கொண்டே அவனின் கற்றலை , தகுதியை ஊகிக்கலாம்.
மொழியறிவு, அவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிக்கிறது.
மொழியறிவுப் பழுதால் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள நேருகிறது
என முதலில் பார்ப்போம்.
1. விளம்பரங்களில் எழுத்துப் பிழைகள்.
2. கடிதம் எழுதத் தெரிவதில்லை. தமிழை எழுத்துப் பிழையுடனும். ஆங்கிலத்தை இலக்கணப் பிழையுடனும் எழுதுகிறார்கள். கட்டுரைகள் எழுதினாலும் ur, tq ,
என்றெல்லாம் எழுதுவது. ஆன்லைன் அல்லது செல்ஃபோன் லாங்குவேஜில் எழுதுவது.
புதிதாக ஒன்றையும் எழுதத் தெரியாமல் எல்லாமே கட் காப்பி , பேஸ்ட் மெசேஜ்கள் தான்.