எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 ஜூலை, 2014

மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்.:-


மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்.:-

********************************************************

தற்காலத்தில் மாணவர்க்கு மொழிப் பயிற்சி பல சமயம் சிறப்பாய் இருப்பதில்லை.

பேசும் மொழி வட்டார வழக்கிலிருப்பது தவறில்லை. ஆனால் ஒரு மாணவனின் மொழியைக் கொண்டே அவனின் கற்றலை , தகுதியை ஊகிக்கலாம். 

மொழியறிவு, அவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிக்கிறது. 

மொழியறிவுப் பழுதால் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள நேருகிறது என முதலில் பார்ப்போம்.

1. விளம்பரங்களில் எழுத்துப் பிழைகள்.

2. கடிதம் எழுதத் தெரிவதில்லை. தமிழை எழுத்துப் பிழையுடனும். ஆங்கிலத்தை இலக்கணப் பிழையுடனும் எழுதுகிறார்கள். கட்டுரைகள் எழுதினாலும்  ur, tq ,  என்றெல்லாம் எழுதுவது. ஆன்லைன் அல்லது செல்ஃபோன் லாங்குவேஜில் எழுதுவது

புதிதாக ஒன்றையும் எழுதத் தெரியாமல் எல்லாமே கட் காப்பி , பேஸ்ட் மெசேஜ்கள் தான்.


3. ப்ராஜக்டுகளை விலைக்கு வாங்கி சமர்ப்பித்தல்.

4. என்ன படிப்பது, எப்படிப் படிப்பது என்ற தெளிவின்மை.

5. தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கில மீடியம் மாறுவதால் புரிந்து கொள்ளுதலில் சிரமம்.

6. சுற்றுப் புறக் காரணிகள். குடும்ப சூழ்நிலைகள். கஷ்டங்கள்

7. பெண்கள் திருமணம் செய்ய வேண்டி அது வரை படிக்க அனுமதிக்கப்படுதல். அதனால் சரிவரப் படிப்பதில்லைஇவற்றை நாம் எவ்வாறு களையலாம்..

1. கல்லூரிக்கு வந்த முதல் வாரத்திலேயே அவர்களுக்கு மொழி சம்பந்தமான  மற்றும் துறை சம்பந்தமான ஒரு நுழைவுத் தேர்வு நடத்துவது

2. ப்ரிஜ்பாசி என்னும் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு எங்களுக்கெல்லாம் நடத்தப்பட்டது. 3 நாள் பயிற்சி முகாம் போல. இதில் ஆங்கில இலக்கியம் சொல்லித்தரப்பட்டு ( 6 தரவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். ) இலக்கணம். ,கடிதம் எழுதுதல், மொழிபெயர்ப்பு,  3 இல் ஒரு பங்காக சுருக்கி எழுதக் கற்பித்தல், பேசக் கற்பித்தல்.

3. நூலகத்தை  உபயோகப்படுத்துதல்இலக்கியம் மற்றும் துறைசார்ந்த அறிவுக்காக. கட்டாயம் அன்றைய தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கச் சொல்ல வேண்டும். அடிக்கடி ஆங்கில நாளிதழ்கள் படிக்கப் படிக்க ஆங்கில அறிவு விருத்தியாகும். நிறைய நூல்கள், அல்லது  தினமும் ஒன்றாவது படிக்கப்படவேண்டும்.

4. செமினார் வகுப்புகள். :- நன்கு படிக்கும் மாணவர்களை முதலில் இனம் காணலாம். அவர்களை முதல் வாரத்திலும் அடுத்து அடுத்து உள்ளவர்களை அடுத்த வாரங்களிலும் கட்டாயம் வகுப்பு எடுக்கச் சொல்ல வேண்டும்

5. நன்கு படிக்கும் மாணவர்களையும் சுமாராகப் படிக்கும் மாணவர்களையும் இருவராக இணைத்து படிக்க சொல்லவேண்டும்

6. சீரோ ஹவர் க்ளாஸில் இந்த மொழி சம்பந்தமான சில பரிட்சைகளை வாரம் ஒரு முறை எழுத சொல்ல வேண்டும்

7. மாலை நேரத்தில் கல்லூரி வளாகத்தில் சுற்றுப் புற இடங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு அடல்ட் எஜுகேஷன்  எடுக்க பயிற்சி கொடுத்தல். அவர்களுக்கு சொல்லித்தர வேண்டி இவர்களும் படிக்க வேண்டி வரும்.

ஆசிரியர்களின் பங்கு:-

1. தங்களுடைய மொழி மற்றும் துறை சம்பந்தமான படிப்பில்  அன்றைக்கு என்ன புதிதாக வந்திருக்கிறதோ அதைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

2. பிழையில்லாமல் எழுதுமாறு மாணவர்களை வலியுறுத்த வேண்டும்.

3. தினம் ஒரு மணிநேரமாவது ஒதுக்கி மறுநாள் தாங்கள் எடுக்கப்போகும் பாடங்களுக்காகப் புதுக் குறிப்புக்கள் எடுக்க வேண்டும். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் அது தமிழ் , ஆங்கிலம் போன்ற இலக்கியமாகட்டும். கணினி, வேதியல், பொறியியல், நுண்ணுயிரியல், விஷுவல் கம்யூனிகேஷன் ஆக இருக்கட்டும். எல்லாவற்றிலும் இன்று என்ன மாற்றம் அல்லது சேர்க்கை நிகழ்ந்துள்ளது என்பதில் ஒரு ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும்.பழையனவற்றோடு புதுக் கண்டுபிடிப்புக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்

பொதுவாக இயல்தமிழ் , இசைத்தமிழ், நாடகத் தமிழ்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது மொழி வழக்குத் தமிழ் அதிகம் ஆட்சி செய்கிறது. திரிந்த மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். கவிதைகளில் இலக்கியத்தில், கட்டுரைகளில், கதைகளில் நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்

தமிழில் வெண்பா, எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம், கலிப்பா, மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, க்ளெரிஹ்யூ ( CLERIHEW) என்பது போல. இன்னும் புது வடிவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்தங்களை எல்லாவற்றிலும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்

அறிவியல், புள்ளியியல், வேதியல், சமூகவியல், புவியியல் பௌதீகம், போன்றவற்றில் புதுக் கண்டுபிடிப்புக்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அதே சமயம். அதில் நிகழ்ந்துள்ள பழையன பற்றிய குறிப்புகளையும் சேகரித்து மாணவர்க்குக் கொடுப்பது முக்கியம்

4. கணினி இயக்குதல், அதன் மூலம் தன் மாணவர்களைத் தொடர்புகொள்ளுதல் முக்கியம். முடிந்தால் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து கடினமான கணக்குகள் போன்றவற்றை எப்படி போடவேண்டும் எனப் படிப் படியாக எழுதி ஆவணப் படுத்தலாம்

5. எல்லாருக்கும் ஒரு ஈமெயில் ஐடி வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும். இதன் மூலம் சந்தேகங்கள் ஏற்படின் நிவர்த்தி செய்யலாம்

6.  2 மாதங்கள் வரும் விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் அந்த வருட மாணவர்கள் எதைக்கற்பதில் சிரமமுற்றார்கள் எனக் கண்டுபிடித்து அதன் படி அடுத்த வருடம் அந்தப் பிரிவில் அதை எளிமையாக்கித் தர முயற்சித்தல்.

7. ப்ராஜக்டுகளை சுயமாக செய்ய ஊக்குவித்தல்

8.  முதலில் மொழிப் பிழையோடு இருந்தாலும் ஆங்கிலத்தில் உரையாடப் பயிற்றுவித்தல். தன்னம்பிக்கை ஊட்டுதல்.  

9. குடும்பத்து பிரச்சனைகளை குடும்பத்திலேயே விட்டுவிட வேண்டும்கல்லூரியிலும் அதை சுமந்து இருந்தால் சப்ஜக்டை சரிவர சொல்லித்தர முடியாது

10. IN MODERN BUZZ WORLD THE TERM PEDAGOGY  என்பது --  its  the process of  teaching..  COGNITIVE PSYCHOLOGIST  Jerome Bruner   இதை பல வகையா பிரித்து இருக்கிறார்

1. CONCEPT LEARNING. OBJECT , EVENTS OR IDEAS. .. THATS LEARNING WITH EXAMPLES.

2. CREATIVE PEDAGOGY - TO MAKE THEM TO CREATE THEMSELVES. 

3. CRITICAL PEDAGOGY - IT HELPS STUDENTS TO DEVELOP CONSIOUS OF FREEDOM, RECOGNISE, AUTHORITARIAN TENDENCIES AND CONNECT KNOWLEDGE TO POWER, AND THE ABILITY TO TAKE CONSTRUCTIVE ACTION. 

Practising the students to the upcoming world. Make them to face the world. The language is essential to mould the mind and character and external skills courageously. 

சுய ஒழுக்கம் பேணுதல், முன்மாதிரியாகத் திகழ்தல், சூழல்களை எதிர் கொள்ளத் தயார்ப்படுத்துதல். தலைமைப் பண்பு, நேர்த்தியாக வாழ்வது இவற்றைக் கற்பிக்க வேண்டும். 

11. கவுன்சிலிங். :-மாரல் சயின்ஸ், வால்யூ எஜுகேஷன் போல வகுப்புகள் இப்போது இல்லை. ஒரு 10 மாணவர்களை வருடம் தோறும் ஒரு ஆசிரியர் வசம்  பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். அது மாணவர்களுக்கு தெரியக் கூடாது. அந்த ஆசிரியர் அந்த மாணவனின் செயலில் போக்கில் வித்யாசம் கண்டால் அழைத்து சும்மா பேசுவது போல் பேசி மென்மையாக விசாரித்து பிரச்சனையை அறிய வேண்டும்.

12. வருடம் ஒரு முறை முத்தமிழ் வாரம். லைப்ரரி வாரம், துறை சார்ந்த வாரம் கட்டாயம் இருக்க வேண்டும். இதில் அந்தத் துறை சார்ந்த பிரபலங்களை அழைத்து உரை நிகழ்த்த சொல்லலாம்.

13. வாரம் ஒரு முறை அசோசியேஷன் ஹவர்ஸ் முக்கியம். வெள்ளி அன்று கடைசி வகுப்பு இது போல பல துறை சார்ந்தவர்களையும் அழைத்து கல்லூரி முழுமைக்குமான ஒரு மணி நேரக் கூட்டமாக நிகழ்த்தப் படவேண்டும்

14. யோகா, தியான வகுப்புகளில் சில முத்திரைகள் ஞாபக சக்தியை அதிகப்படுத்துகின்றனதியானத்தில் ஹாசினி சக்தியே முக்கியம். இதைச் செய்தால் நினைவாற்றல் பெருகும். இட, வல மூளைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும்.  

15. வகுப்பில் தினம் ஒரு புதுச் செய்தியோடு ஆரம்பிக்கலாம். சிறிது நேரப்பகிர்தலுக்குப் பின் பாடங்களைத் தொடங்கலாம். வகுப்பில் நடத்தும்போது சிறுகுறிப்பு - நோட்ஸ் கட்டாயம் எடுக்கச் சொல்ல வேண்டும்.

16. கல்வி என்பது உற்சாகமாக பயிலப்பட வேண்டும். ஆசிரியர்கள் மலர்ச்சியோடு சொல்லித் தர வேண்டும். மாணவர்கள் ஊக்கத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுத்தரும் ஆசிரியர் நிறையக் கற்று தான் ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும். ( TECHNICALLY ADVANCED )
மேலும் மாணவர்களின் சிரமங்களை உணருங்கள். பயிற்சி கொடுங்கள். பாசிட்டிவ் க்ளாஸ் ரூம் அப்ரோச் தேவை. என்கரேஜ். என்கரேஜ். என்கரேஜ்

 VISUALISE POSSIBLE CHANGES. அணுகுமுறையை மாற்றுங்கள்.
 Tell your expections clear from the begining. ( some rules and regulations) . க்ளாஸ் ரூமில் சரியாக அட்டெண்ட் பண்ணாவிட்டால் இண்டர்னலில் மதிப்பெண் கிடையாது என்று சொல்லலாம்

17. ஆசிரியப்பணி என்பது முழு நேரத் தொழில். அது மற்ற தொழில்கள் போல அல்ல. ஆசிரியர்களின் உழைப்பு, திறமை, அர்ப்பணிப்புத் தன்மை எந்த ஒரு தொழிலிலும் இல்லாதது

THE BEST TEACHER TEACHES FROM THE HEART AND NOT FROM THE BOOKS.

மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் சொல்லியது:-

“ some students have become doctor.
some students have become lawyer
some students have become engineer
some students have become pilot.
some students have become researchers.
all of them become what they are.
as teacher taught the students.
but a teacher continue to be a teacher
as ladder continue to be the ladders.
lifting all of us to what we are. "

THE TEACHER IS THE CREATER OF THE DESTINY.   

என்னால் சிறப்பாகக் கவிதை எழுத முடியும் என்று என்னைக் கண்டு பிடித்ததும் என் ஆசிரியைதான். அவங்க ப்யோதர் தஸ்தாவ்யெஸ்கியின் அசடன் மற்றும் குற்றமும் தண்டனையும் என்ற   500 பக்க 600 பக்க ரஷ்ய நாவல்களைத் தன் ரிட்டயர்மெண்டுக்குப் பிறகும் மொழி பெயர்த்தவங்க. பாரதி பதிப்பக வெளியீடா அது வந்திருக்குநான் இன்றும் என்றும் தன்னம்பிக்கையோடு உங்கள் முன் நிற்கக் காரணமே அவங்கதான். அவங்க சுசீலாம்மா. என் தமிழன்னை.. அவங்களுக்கு நன்றிகள்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை மே 12, 2014 திண்ணையில் வெளியானது.  

இந்தக் குறிப்புகளை ஒரு கல்லூரியின் ஆசிரியர் தினத்தில் பேசுவதற்காக எடுத்திருந்தேன். கூப்பிட்டும் கலந்துகொள்ள இயலவில்லை. எனவே அதை வலைத்தளத்தில் வெளியிடுகிறேன். ( ஆங்கிலம், தமிழ், தங்க்லீஷில் இருப்பதற்காக மன்னிக்க.. !!!!!!!!!!!!! )

3 கருத்துகள்:

 1. மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்.:- Thenammai Lakshmanan
  சுய ஒழுக்கம் பேணுதல், முன்மாதிரியாகத் திகழ்தல், சூழல்களை எதிர் கொள்ளத் தயார்ப்படுத்துதல். தலைமைப் பண்பு, நேர்த்தியாக வாழ்வது இவற்றைக் கற்பிக்க வேண்டும். = எங்கள் மூத்த பதிவர், முகநூல் நண்பர் திருமதி தேனம்மை லக்ஷமணன் அவர்களின் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் படித்து கருத்துகளை பதிய, பகிர வேண்டுகிறேன். நன்றி & வாழ்த்துகள் திருமதி Thenammai Lakshmanan

  பதிலளிநீக்கு
 2. நன்றி ரத்னவேல் ஐயா :) கருத்துக்கும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...