எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 ஜூலை, 2014

சாட்டர்டே போஸ்ட், சீனா சாரும் வலைச்சரமும் மதுரையில் பதிவர் மாநாடும்.

வலைச்சரப் பொறுப்பாசிரியர் சீனா சார் அவர்களைத் தெரியாதவர் வலையுலகில் இருக்க வாய்ப்பில்லை. அவரைப்பற்றி நான் தனிப்பட்ட முறையில் கூற வேண்டுமானால் நான் முதன் முதல் ஒரு பத்ரிக்கைக்குப் பணியாற்றமுடியும் என்ற நம்பிக்கையை அளித்தவர்.

2010 இல் நான் லேடீஸ் ஸ்பெஷலில் சுதந்திர எழுத்தாளராகப் பணிபுரிய வலைச்சரத்தில் எழுதிய அனுபவம் கைகொடுத்தது. நம்முடைய வலைத்தளத்தில் எழுதுவதை விட ஒரு வலைச்சரத்தில் ( கொத்து ) எழுதுவது பல்வேறு ரசனை கொண்ட வாசகரையும் பெற்றுத் தரும்.எல்லாருக்கும் ஒரு வாரம்தான் ஆசிரியப் பொறுப்புக் கிடைக்கும். என் மனதின் பேராசையோ என்னவோ எனக்கு போனசாக இன்னொரு வாரமும் கிடைத்தது. நிறைய ப்லாகுகள் படித்து கிட்டத்தட்ட 250 வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி இருப்பேன் என நினைக்கிறேன். 


ஒவ்வொரு வாரமும் சீனா சார் அந்த வாரத்திற்கான நடப்புப்  பொறுப்பாசிரியரைத் தேர்ந்தெடுக்கும் விதம் அலாதியானது. ஒருவரைத் தேர்ந்தெடுக்க சில நாட்கள்/ மாதங்களுக்கு முன்பே அவரின் வலைத்தளத்துக்கு விசிட் செய்து ஆதிகால இடுகைகள் 15, நடு இடுகைகள் 15, தற்கால இடுகைகள் 15 படித்துப் பின்னூட்டமிடுவார். பின்னரே அவர் குறிப்பிட்ட வாரத்திற்கான பொறுப்பாசிரியராக முடியுமா என்று சம்மதம் கேட்கப்பட்டு ஆசிரியராக நியமிக்கப்படுவார். 

நான் வலைச்சரத்தில் எழுதிய போது 300 ப்ளஸில் இருந்த பின் தொடர்பவர்கள் தற்போது 1200 ப்ளசில் இருப்பது மகிழ்ச்சி. மேலும் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மா போன்றார் கூட வலைச்சரம் என்று சொன்னவுடன் படித்திருப்பதாகக் கூறினர்.  என்னுடைய 4 வலத்தளங்களையும் அறிமுகப்படுத்தி  பலமுறை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் அதன் நடப்புப் பொறுப்பாசிரியர்கள். 

அந்த வகையில் நான் சீனா சாருக்கு மிக நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.    எனவே நான் மதிக்கும் மிகப் பெரும் பதிவரான தாங்கள் என் இன்றைய வளர்ச்சியில் பெரும் பங்கு பெற்றிருக்கிறீர்கள், அதற்கு முதலில் நன்றிகள்.

என்னுடைய வலைத்தளத்தில் சாட்டர்டே ஜாலி கார்னர்/சாட்டர்டே போஸ்ட் என்ற ஒரு போஸ்ட் போடுகிறேன்.

இதற்கு சில கேள்விகள் அனுப்புகிறேன் . பதில்  அனுப்ப வேண்டுகிறேன்.கேள்வி இதுதான்.

///ஏற்கனவே 4 பதிவுகள் எழுதி வரும் தாங்கள் வலைச்சரம் என்ற பதிவைக் கொண்டுவரும் எண்ணமும் அதை மற்ற வலைப்பதிவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடும் எண்ணமும் எப்படி ஏற்பட்டது..///


அன்பின் தேனம்மை லக்‌ஷ்மணன் 

எனன்னுடைய எழுத்துகள் பதிவுகளாகி அனைவரையும் சென்றடைந்தது அனைவரும் அறிந்ததே 
வலைச்சரம் பற்றி அனைவரும் அறிவர் - வாரம் ஒரு பதிவரை வலைச்சர ஆசிரியராக்கி - அவ்வாரம் முழுவதும் அவருக்குப் பிடித்த, மனம கனிந்த பதிவுகளையும் அப்பதிவுகளை  எழுதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்தும் வண்ணம் பதிவுகளை தொடர வேண்டும். இதற்காக அவ்வாசிரியர் அனைவரது வலைப்பூக்களையும் படித்து சிறந்ததைத் தேர்ந்தெடுத்து சுட்டீக்காட்ட வேண்டும்.இதனால் அவ்வாசிரியருக்கு அனைத்துப் பதிவர்களீ்ீ்ின் கருத்தும் எழுத்தின் போக்கும் உணர ஒரு வாய்ப்புக் 


கிடைக்கிறது,

 பொறுப்பாசிரியர் என்ற முறையில் நான் ஒவ்வொரு வாரமும் அனைத்து ஆசிரியர்களுடைய பதிவுகளையும் போக்கையும் படித்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பதால் எனக்கு அனைவரது கருத்தையும் தெரிந்து கொள்வதற்கு எவருக்கும் கிடைக்காத ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்து விடுகிறது. 

நானும் ஒரு வார வலைச்சர ஆசிரியராய் பொறுப்பேற்று பதிவுகளைத் தந்த போது எனக்கு இந்த பொறுப்பாசிரியர் பதவி தேடி வந்தது. இதில் பதவி வந்தது பெரிதல்ல - இதைச் சரியாய்ச் செய்வதற்கும் சிறப்பாய் எடுத்துக் காட்டுவதற்கும் பிறரையும் இம்முயற்சியில் ஈடுபடுத்துவதற்கும் நான் எடுத்துக் கொண்ட பயிற்சி முறையானது ; சிறப்பானது. ஏனென்றால் என்னை நானே சரியாச் செய்து கொள்வதற்கு நானே விதித்துக் கொண்ட விதி முறைகள் என்னை வலை உலகில்   சீனா என்று பிறர் பாராட்டும் நிலைக்குக் கொண்டு சென்றது.

சொல்வது எளீது - செய்வது அரிது என்ற வேத வாக்கு என்வரையில் உண்மையே ! எந்த நிலை எப்படி இருந்தாலும் அந்த நிலை நேரத்தோடு அந்த வார ஆசிரியருக்கு பதிவைக் கையினில்கொடுக்க நான் எடுத்துக் கொள்ளும் முயற்சி பள்ளீப் பாடம் படிக்கும் பாலகனின் நிலை தான். 

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற மன நிலையில் தான் நான் ஒவ்வொரு வாரப் பதிவிற்கும் ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது. எப்படியும் அவரது ஏழு பதிவுகளையும் நான் படிக்காமல் ஒரு வரி கூட எழுதுவதில்லை.  அதற்கும் காரணமுண்டு. ஒரு காலத்தில் பின்னூட்டப் பிதாமகன் என்று சொல்லும் அளவிற்கு மறுமொழி அளித்ததின் பயிற்சியே.

நான் முன்பே இங்கு சுட்டிக் காட்டிய சிறந்த பதிவுகள் அனைத்தும் என் நினைவுகளில் இருந்து வலை உலகில் எழுத்தாய் வடிவம் பெற்றது எனக்கு மிகவும் பிடித்த ஒரு சூழல். 

இந்த என்னுடைய எழுத்துகள் பலருக்கும் உந்து சக்தியாய் இருந்தது - ஊக்கமாய் இருந்தது - செயல் வெளிப்பாடாய் அமைந்தது - இது எனக்குப் பொழுது போக்கும் ம்ட்டுமல்ல - இதைக் கொண்டு சில பொதுத்தொண்டுகள் செய்வதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. அது தான் இதன் சிறப்பிற்கே காரணம்,

இந்தக் கை செய்வதை அந்தக் கை அறியாமல் செய் என்ற திருமறை தான் எனது ஊக்கத்தின் அடிப்படை. 

சிறந்த பதிவுகள் அனைத்துக்குமே இது தான் என்னுடைய பார்வை.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா.

இவருடைய சாதனைப் பதிவுகள்.


நான் 4 வலைத்தளங்கள் வைத்துக் கொண்டு எழுதத் துவங்கினேன்.

வருகிற ( ??? ) அக்டோபர்த் திங்கள் மதுரையில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என எண்ணுகிறோம் - விரும்புகிறோம் அது பற்றிய பதிவு :  

இன்பச் சுற்றுலா - 6, 7 மற்றும் 8 ம் நாள் அக்டோபர் 2013
​​ - 


இது பற்றிய பதிவு : 
  

எனது முதல் கணினி அனுபவம் - 1984 - 2010



வலைச்சரத்தின் தகவல்கள் தொகுப்பு



மாவட்ட ஆட்சியரின் உரை



மணல் விளையாட்டு -




தப்பு 


ஊமை நெஞ்சங்கள் !!!!!

தமிழ் அரசி - 22.11.1992 வார இதழில் அறிமுக எழுத்தாளர் வரிசை எண் : 3ல் - எனது செல்ல மகள் - இளைய மகள் எழுதிய கதை ஒன்று பிரசுரமானது. அவ்வறிமுகத்தையும் அக்கதையையும் இங்கு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மலரும் தீபத் திருநாள் நினைவுகள்



டிஸ்கி:- மிகப் பெரும் பதிவரான தாங்கள் சும்மாவுகாக உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. உங்கள் உழைப்பைப் பார்க்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது. கூகுளில் சென்று பின்னூட்டம் சர்வே எடுத்தால் அநேக பதிவர்களுக்கு அநேகப் பதிவுகளில் அதிகமாய்ப் பின்னூட்டமிட்டவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். இருந்தும் எளிமையாயும் அணுக்கமாயும் இருப்பதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

வலைப்பதிவர் சந்திப்பு ஒன்று வரும் அக்டோபரில் மதுரையில் நடக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள் ஒரு பதிவில். அது பற்றி என்னுடைய வாழ்த்தும் கருத்தும் , ”பதிவர் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.! அடுத்து ஒரு சங்கம் அமைக்கலாமா நாம்.!  :) வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். ! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !! .


17 கருத்துகள்:

  1. பல தளங்கள் அறிமுகம் கிடைப்பதற்கு, வலைச்சரம் ஒவ்வொரு பதிவருக்கும் வரப்பிரசாதம்...

    பதிலளிநீக்கு
  2. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற மன நிலையில் தான் நான் ஒவ்வொரு வாரப் பதிவிற்கும் ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது. எப்படியும் அவரது ஏழு பதிவுகளையும் நான் படிக்காமல் ஒரு வரி கூட எழுதுவதில்லை. அதற்கும் காரணமுண்டு. ஒரு காலத்தில் பின்னூட்டப் பிதாமகன் என்று சொல்லும் அளவிற்கு மறுமொழி அளித்ததின் பயிற்சியே.//

    பிரமிக்கவைக்கும் சாதனைதான் ..
    பின்னூட்டப் பிதாமகருக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. சிறந்த கருத்துப் பகிர்வு

    பதிலளிநீக்கு
  4. அன்பின் சீனா அவர்களின் வலைச்சரம் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவரின் பேட்டியை வெளியிட்ட சகோதரிக்கு நன்றி!

    வலைப் பதிவர்களில் வாரம் ஒருவரை வலைச்சர ஆசிரியராக்கி அவர்களை ஊக்குவிக்கும் பணிக்கு தனியே அவருக்கென்று ஒரு பாராட்டுவிழா நடத்த வேண்டும். யாரேனும் ஒருவரோ அல்லது குழுவோ இதனைச் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. இது வரை அறியாத விவரங்கள். சீனு அவர்களுக்குப் பராட்டுக்கள். உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் திரு. சீனா ஐயா அவர்களைப் பேட்டி கண்டுள்ள தங்கமான தங்களுக்கு என் முதற்கண் நன்றிகள்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு [இளமை ஊஞ்சலாடிய பருவத்தில்] எடுக்கப்பட்ட அவரின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளதற்கு என் இரண்டாவது நன்றிகள்.

    [இன்றும் நாங்களெல்லாம் மனதளவில் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருப்பவர்களே என்பது வேறு விஷயம் ;)))))) ]

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. பின்னூட்டப்பிதாமகரை திருச்சியில் நேரில் சந்திக்கவும், என் இல்லத்திற்கு தம்பதி ஸமேதராய் அவர்களை அழைத்து வரவும், திருச்சியில் உள்ள வேறு சில பதிவர்களையும் சந்திக்க வைக்கவும் என்னால் முடிந்தது என்பதை நினைக்கும் போதே சந்தோஷமாக உள்ளது. அவரை நான் முதன்முதலாக நேரில் சந்தித்த நாளில் வெளியிட்ட பதிவின் இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html

    பொதுவாக மிகவும் நல்ல மனிதர். என் இனிய நண்பர். எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் இருப்பவர் என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியே. எங்களுக்குள் பல விஷயங்களில் ஒத்துபோகும் ஒற்றுமை உண்டு.

    அவரின் வலைச்சரப்பணி மிக மிக பாராட்டத்தக்கதே. அடியேன் இதுவரை பல்வேறு வலைச்சர ஆசிரியர்களால் 87 முறைகளுக்கு மேல் வலைச்சரத்தில் பாராட்டிப்பேசப்பட்டுள்ளேன். 100 முறை ஆனதும் தனிப்பதிவாக சிறப்பித்து எழுதவும் உள்ளேன்.

    பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  8. வலைச்சரம் ஊக்குவிக்கும் பதிவர்களின் எண்ணிக்கை கணகிலடங்காமல் போகிறது. அன்பு தேனம்மா,சீனா சார் ஆதி நாளிலிருந்து ஆயிரம் பதிவர்களையாவது உற்சாகப் படுத்தி எழுதவைத்திருப்பார்.நல்ல அன்புள்ளம் கொண்ட அவரை அறிமுகம் செய்ததில் உங்களுக்கு நற்பெருமை. அவரிப் பற்றி விவரங்கள் கிடைத்ததில் எங்களுக்குப் பெருமை. இருவருக்கும் நன்றி மா.

    பதிலளிநீக்கு
  9. சீனா சாரின் அறிய இளமைக் காலப் புகைப்படத்துடன்
    அவரது பேட்டியும் பார்க்க... படிக்க... இனிமை.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. மன்னிக்கவும். சீனா சாரும் வலைச்சரம் என்ற தலைப்பைப் பார்த்ததும் வலைச்சரம் சீன சார்புள்ளது என்று நீங்கள் முறைப்பாடு செய்கிறீர்கள் போலிருக்கிறது என்று இங்கு வந்து பார்த்தால், நீங்கள் சீனா சாரைப் பற்றிப் பேசுகிறீர்கள். சீனா சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். :-)

    பதிலளிநீக்கு
  11. வலைச்சரத்துக்குப் பின்னாலிருக்கும் ஐயா அவர்களின் உழைப்பு நம்மை வியக்கவைக்கும் ஒன்று. அதை அவரே நமக்கு அறியத்தரும் வகையில் அற்புதமான பேட்டிக்கேள்வி மூலம் அறியாதோரையும் அறியச் செய்தமைக்கு நன்றி தேனம்மை. தொடர்ந்து திறம்பட வலைச்சரத்தை நிர்வகித்து வரும் திருமிகு. சீனா ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். அவர்களுடைய இளமைக்கால படம் அருமை.

    பதிலளிநீக்கு
  12. சீனா ஐயா பற்றிய பகிர்வுக்கு நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு
  13. சீனா ஐயாவின் பேட்டி அருமை...
    தாங்கள் தொகுத்துள்ள சீனா ஐயாவின் பதிவுகள் எல்லாமே மிக அருமை...
    வலைச்சரத்தில் சீனா ஐயாவுடன் இணைந்து இருப்பது எனக்கு மிகப் பெருமையாய் உள்ளது...

    பதிலளிநீக்கு
  14. அன்பின் தேனம்மை இலக்‌ஷ்மணன் - அருமையான பதிவு - தங்களீன் சாடர்டே போஸ்ட் அருமை - வாரா வாரன் ஒவ்வொரு சனிக்கிழமையும் தவற விடக்கூடாத பதிவு - அவசியம் படிக்க வேண்டிய பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. நன்றி தனபாலன் சகோ

    நன்றி ராஜி

    நன்றி ஜீவலிங்கம் சார்

    நன்றி தமிழ் இளங்கோ

    நன்றி அப்பாத்துரை சார்

    நன்றி கோபால் சார்.. 87 முறையா.. ஓ மை கடவுளே.. :) சீக்கிரம் 100 ஆக வாழ்த்துக்கள்.

    நன்றி வல்லிம்மா

    நன்றி முகம்மது சகோ

    நன்றி வியாசன் சார் ... ஹாஹா.. :) :)

    நன்றி கீதா

    நன்றி குமார்

    நன்றி ப்ரகாஷ்.. ஓ நீங்களும் வலைச்சரத்தில் இருக்கீங்களா அருமை & பாராட்டுகள். :)

    நன்றி சீனா சார் :)

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...