எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 ஜூலை, 2014

அயித்தையும் அம்மானும்.

”நிலாச்சோறு ஊட்டும்
அத்தையின் கையில்
கவளம் கவளமாய்
உருண்டு கொண்டிருக்கிறது
நிலா. ”

நிலாச்சோறு என்றால் எனக்கு என் மீனாய்த்தை ஞாபகம்தான் வரும். நாங்கள் சின்னப் பிள்ளையாயிருக்கும்போது எந்த விசேஷம் என்றாலும் எங்கள் ஆத்தா வீட்டில் மூன்று அயித்தைகளும் சூழ வீடு களை கட்டி விடும்.தங்கள் பாசத்தால்  எங்கள் அப்பத்தா ஐயா இல்லாத குறையையும் போக்கி விடுவார்கள்.(பிறந்த குழந்தை முதன் முதலில் பேசத்துவங்கும் வார்த்தை ’அத்த அத்த’ தான். அது என்னவோ காரைக்குடிப்பக்கம் அதுதான் சொல்லணும் என்பார்கள். அத்த என்பது உறவைக் குறிக்கும். அத்தையின் சுருக்கம். ஆனால் அதுவே வியாதி வெக்கை எல்லாம் இல்லாமல் அத்துப் போகச் செய்யும் என்பதும் ஒரு நம்பிக்கை.   )

முதல் அயித்தை சரசய்த்தை, இரண்டாவது அயித்தை வசந்தா அயித்தை. மூன்றாவது மீனா அயித்தை. இவர்கள்தான் அனுவல் வீடுகளில் முதல் நாள் அல்லது அனுவல் முடிந்த அடுத்த நாள்  இரவு நேரங்களில் பிள்ளைகளைக் கூட்டி உக்கார வைத்து ( நிலவைச் சுற்றி அரைவட்டமாய் நட்சத்திரங்களைப் போல அமர்ந்திருப்போம் ). ஒரு சில்வர் பேசினில் குழம்புச் சோறும் தயிர்ச்சோறும்  போட்டுப் பிசைந்து கவளம் கவளமாக ஒவ்வொருவர் கையிலும் கொடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கிண்ணியில் வெஞ்சனங்கள் மோந்து கொடுத்திருப்பார்கள் அதைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு கவளத்தை வாங்கிச் சாப்பிடுவோம். சில சமயம் அவர்களே சாதத்தின் மேல் காய்கறிகளை வைத்துக் கொடுப்பார்கள். சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். பின்னே..அவ்வளவு ருசி. எழுந்திரிக்கவே மனசு வராது.

அத்தை கையில் சோறு பிசைந்து சாப்பிட்டு இருக்கீங்களா நீங்க.. இல்லாட்டா இப்பவும் கெட்டுப் போயிடல அவங்களுக்கு நாம் இன்னும் குழந்தைகள் தான்.  வாங்கி சாப்பிட்டுப்பாருங்க.  எப்பவும் சாப்பிடுறத விட இரண்டு மடங்கு சாப்பிடுவீங்க.

இன்றும் கூட என் அத்தை ஆத்தா வீட்டிற்குள் நுழையும்போதும் விசேஷம் முடிந்து சொல்லிகொண்டு செல்லும்போதும். தேனுக்கண்ணு என்று கூறி என் தாவாங்கட்டையை ஐந்து விரலாலும் தொட்டு வருடித் தன் வாயில் வைத்து இச் என்று முத்தம் கொடுத்துவிட்டுத்தான் செல்வார்கள்.
 

அந்த அயித்தைக்கும் சிதம்பர மாமாவுக்கும் ( அம்மானுக்கும் ) இன்று பீமரத சாந்தி. மாமாவும் அயித்தைக்கு இணையாகப் பாசம் செலுத்தக்கூடியவர்கள். பரிவோடும் அன்போடும் பாசத்தோடும் கனிவோடும் பேசுவார்கள். இருவரும் கருத்தொருமித்த காதல் தம்பதிகள். ஒருவர் மற்றவரின் கண்ணைப் பார்த்தே சேதி பரிமாறிக்கொள்ளக்கூடிய அந்யோன்யமுடையவர்கள்.


அவர்களின் பிறந்தநாள் காரைக்குடியில் மக்கள் சூழக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது, என் சித்தப்பாக்கள், அப்பா, வசந்த அயித்தை எல்லாரும் கலந்துகொள்ள நான் மட்டும் இங்கே இருந்தே வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.

“ சீரோடும் சிறப்போடும்  பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு எங்கள் அயித்தையும் அம்மானும் வாழ்க வளமுடன் , நலமுடன் . எங்கள் அப்பத்தா ஐயாவின் ஆசியும் இறையருளும் துணை நிற்கட்டும். உங்கள் பாதம் பணிந்து நிற்கும் எங்களுக்கும் உங்கள் ஆசியை வழங்குங்கள். “
 

செட்டிநாட்டுச் சொல்வழக்கு :-

19 . அப்பத்தா - அப்பாவைப் பெற்ற அம்மா,  அப்பாவின் ஆத்தா. 

20 . அப்பத்தா வீட்டு ஐயா - அப்பாவைப் பெற்ற அப்பா,  அப்பாவின் அப்பச்சி,  

21 . அயித்தை - அப்பாவின் சகோதரி ( மூத்தவர் & இளையவர்) , 

--மாமியாரையும் அயித்தை என்று அழைப்போம். ( கணவரின்/மனைவியின் அம்மா )

22. அம்மான் - அயித்தையின் கணவர்.

-- அம்மாவின் அண்ணன் தம்பிகளை அம்மான் என்று அழைப்போம். 

--மாமனாரையும் அம்மான் என்று அழைப்போம்.( கணவரின்/ மனைவியின் அப்பா )

23. பீமரத சாந்தி- 70 வது பிறந்தநாள்.

24 . அனுவல் - விசேஷம். 

25. கிண்ணி -  சாப்பிடும் வட்டிலுக்குப் பக்கத்தில் வெஞ்சனம் வைக்கும் தட்டு. 

26. மோந்து கொடுத்தல் - எடுத்து வைத்துக் கொடுத்தல். முகர்ந்து கொடுத்தல்  என்பதன் திரிபு.

27. சேதி - தகவல்.

28 .  வெஞ்சனம் - சமைத்த காய்கறி - கூட்டுக்கறி , பொரியல், மசியல், மண்டி, கோளா, வடை, வறுவல், துவட்டல், சிப்ஸ், மசாலை, பிரட்டல்,பொடிமாஸ்,  இதுபோல.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்9 கருத்துகள்:

 1. நிலாச்சோறு ஊட்டும் அத்தையின் கையில் நிலா மட்டுமா, அவர்களுடைய அன்பும் அல்லவா பிணைந்து கிடக்கிறது. பீமரத சாந்தி காணும் அத்தையும் அம்மானும் நீண்ட ஆயுளோடும் நிறைந்த ஆரோக்கியத்தோடும் நல்வாழ்வு வாழ இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. சகோதரி கீத மஞ்சரி அவர்கள் சொன்னது சரி...

  செட்டிநாட்டுச் சொல்வழக்கு விளக்கத்திற்கு நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
 3. அன்பான குடும்பம்.அனைவர் முகத்திலும் தெளித்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சி வெள்ளமாகப் பெருகி எங்களையும் நனைக்க வேண்டும் தேன். அயித்தைக்கும் அம்மானுக்கும் என் வணக்கங்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 4. கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நிலாச்சோறு
  செட்டிநாட்டுச் சொல்வழக்கு
  இரண்டுமே
  பதிவிற்கு அழகு
  சிறந்த பகிர்வு!

  பதிலளிநீக்கு
 6. ஏழ்பத்தாண் டோடுயர் வாழ்வும் எழிலாட
  வாழ்வாங்கு கண்டவர்க்கோர் வாழ்த்து !

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 7. ஆம் கீத்ஸ் உண்மைதான் நன்றி

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி வல்லிம்மா

  நன்றி ராஜி

  நன்றி ஜீவலிங்கம் சார்

  நன்றி சீராளன்

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 9. வெஞ்சனம் என்ற சமஸ்கிருதச் சொல் எப்படி காரைக்குடி பகுதிக்கு வந்தது என்று யூகிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...