திங்கள், 21 ஜூலை, 2014

டாலர்ஸ் & யூரோஸ் கொட்டித்தரும் ஏற்றுமதியும் இறக்குமதியும்

சென்னை: ஏற்றுமதி, பங்குச் சந்தை சார்ந்த கட்டுரைகளை, 15 ஆண்டுகளாக எழுதியும், பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், 'வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது, ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி' என்ற கருத்தரங்கை, சென்னையில் முதன் முறையாக தமிழில் நடத்துகிறார்.

சிறு தொழில் வணிகம் துவங்கி, முன்னணி நிறுவனங்கள் வரை, எல்லாருமே தொழில் வியாபாரத்தில் முன்னணி இடத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்திய கரன்சிகளை பார்த்து பூரித்து தொழில் செய்யும் பலருக்கும், அமெரிக்க டாலர்களையும், உலக கரன்சிகளையும் கொட்டித்தரும் ஏற்றுமதி தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு உண்டு. 

ஏற்றுமதி என்பது, வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யும் தொழில் தான். ஆனால் அது, தொழில் துவங்கியவுடன் புதையல் போல டாலர்கள் கொட்டாது. முறைப்படி, தவறில்லாமல், தெளிவான வெளிநாடுகளின் சட்ட, திட்டங்களை புரிந்து கொண்டு செய்தால் ஏற்றுமதியில் ஜெயிக்கலாம். இறக்குமதி செய்ய நினைப்போர், பொருட்களை மார்கெட்டிங் செய்வது எப்படி என்று தெரியாமல் உள்ளனர். இதில் தான், பல தடங்கல்கள் வருகின்றன. இவற்றைப் போக்கும் விதமாக, ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி மற்றும் இணையம் மூலம் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யலாம் என, ஏற்றுமதி, பங்குச்சந்தை சார்ந்த கட்டுரை களை, 15 ஆண்டுகளாக எழுதி, பல நாடுகளிலும் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், சென்னையில், ஆக., 3ம் தேதி, விவரிக்க உள்ளார். 

இந்த கருத்தரங்கம், முற்றிலும் தமிழில் நடத்தப்படுகிறது. காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை நடக்கும். பயிற்சிக் கட்டணம், 2,500 ரூபாய். தேநீர், மதிய உணவு, பயிற்சி புத்தங்கள் இதில் அடங்கும். 

ஏற்றுமதி தரத்துக்கு பொருட்களை தயாரித்து, ஆனால், ஏற்றுமதியில் இதுவரை ஈடுபடாமல் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த, 20 பேருக்கு, இலவச அனுமதியுடன் பயிற்சி தரப்பட உள்ளது. 

மாணவர்களுக்கு, 50 சதவீத கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 'தகுதி உடைய மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மும்பை எண்ணுக்கு தொடர்பு கொண்டு (எண்: 098204 51259) முன்பதிவு செய்யலாம். 

மேலும் விவரங்களுக்கு, www.exportimportnews.com, மற்றும் sethuraman.santhappan@gmail.com என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, சேதுராமன் சாந்தப்பன் தெரிவித்துள்ளார்.


4 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பகிர்வு

Rathnavel Natarajan சொன்னது…

ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி மற்றும் இணையம் மூலம் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யலாம் என, ஏற்றுமதி, பங்குச்சந்தை சார்ந்த கட்டுரை களை, 15 ஆண்டுகளாக எழுதி, பல நாடுகளிலும் ஏற்றுமதி பயிற்சி அளித்து வரும், பிரபல வங்கியாளர் சேதுராமன் சாந்தப்பன், சென்னையில், ஆக., 3ம் தேதி, விவரிக்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, www.exportimportnews.com, மற்றும் sethuraman.santhappan@gmail.com என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, சேதுராமன் சாந்தப்பன் தெரிவித்துள்ளார். = நமது முகநூல் நண்பர் திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் பதிவு, எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன்

நன்றி ரத்னவேல் ஐயா.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...