சனி, 19 ஜூலை, 2014

சாட்டர்டே ஜாலிகார்னர் , ப்லாகிங் புயலான புதுகைத் தென்றல்

புதுகைத் தென்றல் என் வலை உலக சகோதரி.2007 இல் இருந்து கிட்டத்தட்ட 1000 க்கும் மேல  பதிவு எழுதி இருக்காங்க. என்ன சிறப்புன்னா முதல் இடுகையிலேயே படம் எல்லாம் போட்டு எழுதி இருக்காங்க. ஹைதை பிரியாணின்னு அரசியல் , மெலுஹா புக் பத்தி விமர்சனம் எல்லாம்  எழுதி இருக்கும் இவரோட பல பதிவுகளை நான் படிச்சிருக்கேன். மிகச்சிறப்பான முறையில் எழுதும் இவர் என்னுடைய பல பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டுள்ளார்.

நன்றிகள் பல கலாஸ்ரீராம். அட அதுதாங்க இவர்ங்க பேரு. புதுக்கோட்டை சொந்த ஊர்ங்கிறதால புதுகைத் தென்றல்னு வைச்சிருக்காங்க.

முதன்முதலா வைஃபாலஜி பார்த்துட்டு தான் எப்படிப் புதுகைத் தென்றலாகவும் புயலாகவும் மாறினேன்னு சொல்றாங்க. அவங்க கிட்ட கேட்ட கேள்வியும் பதிலும் :-


///பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் முதற்கொண்டு சுற்றுச்சூழல் பற்றி வரை உங்கள் வலைத்தளத்தில் பகிர்கிறீர்கள். முதன்முதல் எப்ப எழுத வந்தீங்க. யார் இது பத்தி சொன்னாங்க. வலைத்தளம் எழுத வந்த அனுபவத்தை சும்மாவின் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.///

ச்சும்மா வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்
//பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் முதற்கொண்டு சுற்றுச்சூழல் பற்றி வரை உங்கள் வலைத்தளத்தில் பகிர்கிறீர்கள். முதன்முதல் எப்ப எழுத வந்தீங்க. யார் இது பத்தி சொன்னாங்க. வலைத்தளம் எழுத வந்த அனுபவத்தை சும்மாவின் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.///
இந்தக்கேள்விக்கு பதில் சொல்ல சொல்லி தேனக்கா கேட்டிருந்தாங்க.  எழுத வந்தது ஆக்சிடெண்டாத்தான்.

இம்சைஅரசி வலைப்பூ பார்த்து ச்சும்மானாச்சும் படிச்சிக்கினு இருந்தேன்..... அப்படியே நூல் பிடிச்சு போனா சுரேஷ் அண்ணா வைஃபாலஜி எழுதி செமயா கலாய்ச்சுக்கிட்டு இருந்தாங்க.

பதிவுலகில் பல பெண்கள் இருந்தாலும் யாரும் பதிலடில்லாம் கொடுக்காம தவிச்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்து புறப்பட்டதுதான் இந்த புயல் (பேருதான் தென்றல் :) )

இப்படித்தான் எழுதணும் இதுதான் எழுதணும்னு எந்த வரையறையும் வெச்சுக்கலை என்பதால மனசுல பட்டதை, பதிஞ்சதை பதிவாக்கி சந்தோஷப்பட்டுக்குவேன்.

ஆனா இப்ப வரைக்கும் ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா ரங்கமணிகளுக்கும், கிட்டுமணிகளூக்கு டெர்ரரா இருப்பதை (!!):)) தங்கமணிகளுக்கும் கண்மணிகளுக்கும் ஆற்றும் சேவையா சந்தோஷப்பட்டுக்கறேன்.

ஒவ்வொரு ஆக்‌ஷனுக்கும் ஏதோ ஒரு ரியாக்‌ஷன் இருக்கும்னு சொல்வாங்க  அதுபோல “தாரே ஜமீன் பர்” சினிமா பார்த்துட்டு வந்ததற்கப்புறம் மாண்டிசோரி ஆசிரியை படிப்புல படிச்சதை பலருக்கும் உதவும் வகையில் (!!)எழுதலாமேன்னு நினைப்பு மண்டைய குடைய உருவானதுதான் பேரண்ட்ஸ் கிளப்.

பாடும் நிலா பாலுவுக்குன்னு தனியா வலைப்பூ இருக்கே, நம்ம கானகந்தர்வனுக்கு இல்லையேன்னு எனது அபிமான பாடகருக்காகன்னு டெடிகேட் செஞ்சு ஆரம்பிச்சதுதான் கானகந்தர்வன் வலைப்பூ. இம்புட்டும் செய்ய மக்கள்ஸ் தான் காரணம். நல்ல நட்பு வலையுலகத்துல கிடைச்சது. அவங்க தந்துகிட்டு இருக்கற ஊக்கத்தால தான் “நானும் எழுதறேன்”.  வேடிக்கை பார்க்க வந்தவனை கோதாவுல இறக்கின மாதிரியோ.... இல்ல நண்பனை ரயிலேத்த வந்தவனையே ரயிலுக்குள்ள ஏத்திவிட்ட கதையாவோ  சும்மா படிச்சு பார்த்து ரசிச்சுக்கிட்டு இருந்த என்னிய பதிவெழுத வெச்சுப்புட்டாக. எப்படியோ நானும் சில பல வலைப்பூக்கள் துவங்கி டெர்ரராவும், ஆசிரியை, தாயாவும் என் மனதை பகிர்ந்துக்கிறேன்

டிஸ்கி:- உங்க வலைப்பூவிலும் என்னை கவர்ந்த அம்சம் என்னன்னா இந்த இண்ட்ரொடக்‌ஷன்தான் கலா. :)

///தாங்கள் படித்துக்கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி( HUSBANDOLOGY) பேராசிரியையின் வலைப்பூவை :)))///
 
 சூப்பர் போங்க. சும்மாவிலும் சூறாவளி மாதிரி கருத்துக்களைக் கொட்டுவீங்கன்னு பார்த்தேன். ப்லாகிங் புயல் மாதிரி இத்தனை ப்லாக் ஆரம்பிச்சுருக்கீங்க. எல்லாத்துலயும் எழுதுறக்கே டைம் பத்தாது. பயணங்கள் மற்றும் பணிகளின் நடுவில் கருத்து அனுப்பியமைக்கு நன்றி கலா. நன்றி தங்கமணிகளின் பேராசிரியையே. :)

17 கருத்துகள் :

கீத மஞ்சரி சொன்னது…

புதுகைத்தென்றல் கலாஸ்ரீராம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். கருத்திடாவிட்டாலும் உங்களுடைய பல பதிவுகளை வாசித்து ரசித்திருக்கிறேன். முக்கியமாக குடும்ப உறவு பேணும் பல பதிவுகள். கணவரை அய்த்தான் அய்த்தான் என்று நீங்க குறிப்பிடுவதே ஒரு அழகு. ஒவ்வொரு பதிவையும் சுவாரசியமா எழுதி அசத்தறீங்க. என்னுடைய ஃபேவரைட் ப்ளாக்ஸ் லிஸ்டில் புதுகைத் தென்றலும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பதிவெழுத வந்ததையும் இங்கு சுவாரசியமா சொல்லி அசத்திட்டீங்க. பிரமாதம்.
புதுகைத் தென்றலிடம் சரியானதொரு கேள்வி கேட்டு பல விஷயங்களையும் அறியத் தந்த தோழி தேனம்மைக்கு நன்றி.

பால கணேஷ் சொன்னது…

ஹஸ்பெண்டாலஜி புரொபசர் பேர்ல தென்றல் வெச்சுக்கிட்டு புயலா எழுத வந்ததை சுவாரஸ்யமா சொல்லிருக்காங்க. ஆக்சுவலி அவங்களோட பதிவுகள் பலதைப் படிச்சிருந்தாலும் தென்றல் மேடத்தோட பேரு கலா ஸ்ரீராம்ங்கறது இன்னிக்குத்தான் தெரியும். ஆயிரம் கடந்தும் குன்றாத ஆர்வத்தோட எழுதற தென்றல் மேமுக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சகோ புதுகைத் தென்றல் பற்றி இங்கே படித்ததில் மகிழ்ச்சி. தில்லியில் குடும்பத்துடன் சந்தித்தது உண்டு.......

வாழ்த்துகள் சகோ. தற்போது ரொம்பவே பிசி என்பதால் பதிவுகள் குறைந்து விட்டது. மீண்டும் பதிவுலகில் தொடர வேண்டும்.

kala sriram சொன்னது…

Nandri thenakka.

kala sriram சொன்னது…

Nandri geetha manjari

nandri balaganesh.

Nandri D.D

Nandri saho. Mahanai collegeil serkum velai mudinjadhu. Ini pathivulagil pazayapadi vara aarambipen.

kala sriram சொன்னது…

Nandri geetha manjari

nandri.bala ganesh

nandri DD

nandri saho. Ashish college admission mudinjachu. Ini pazayapdi varuven.

ADHI VENKAT சொன்னது…

சரியான கேள்வி.... அழகான பதில். தென்றல் அவர்களை 2011ல் தில்லியில் குடும்பத்தோடு சந்தித்திருக்கிறோம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். சட்டுனு ஒட்டிக்குவாங்க....:) புதிதாக சந்திப்பது போலவே இருக்காது. நானும் விரும்பி வாசிக்கும் சில பதிவுகளில் அவருடையதும் ஒன்று.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை - அழகிய அருமையான பதிவு - ஜாலி கார்னர் ஜொலிக்கிறது - புதுகைத் தென்றலினை அறிவேன் - அவரது பதிவுகள் பல படித்திருக்கிறேன். நன்று - நல்வாழ்த்துகள் புதுகைத் தென்றல் - நல்வாழ்த்துகள் தேனம்மை - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புதுகைத்தென்றலுக்கு இனிய வாழ்த்துகள்.!

சே. குமார் சொன்னது…

புதுகைத் தென்றல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா...

Vijiskitchencreations சொன்னது…

Very nice introduction and good work dear Thenu.

புதுகைத் தென்றல் சொன்னது…

நன்றி ஆதி,

நன்றி சீனா சார்

நன்றி இராஜராஜேஸ்வர் அம்மா,

நன்றி குமார்

நன்றி விஜி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீதா

நன்றி கணேஷ்

நன்றி தனபாலன் சகோ.

நன்றி வெங்கட்

நன்றி ஆதி

நன்றி சீனா சார்

நன்றி ராஜி

நன்றி குமார்

நன்றி விஜி

நன்றி கலா. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

புதுகை.அப்துல்லா சொன்னது…

என் போன்ற பலரும் வலைப்பூவில் இருந்து இடம்மாறி கூகிள்பிளஸ், முகநூல் என்று சென்றுவிட்டபோதும் விடாமல் வலைபதியும் கலா அக்காவிற்கு என் அன்பும், வாழ்த்தும்.

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி அப்துல் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...