எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஜூலை, 2014

என்னைக் கவர்ந்த இரு குறும்(புப்) படம்&பாடல்

எவ்வளவோ குறும்படங்கள் பார்க்கிறோம். சில மட்டும் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். அந்த ரகம்தான் வாயை மூடிட்டு சும்மா இருடா, & குட்டீம்மா இது இரண்டும்தான் அந்தக் குறும்(புப்)படம்&பாடல்.

சென்ற சில மாதங்களாக என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று இது.


ஒரு அறையில் வசிக்கும் இரு நண்பர்கள் கிடார் இசைத்துப் பாடுவது போன்ற காட்சியமைப்பு. ஒரு பெண் தன் வாழ்வில் வந்தால் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று கற்பனை செய்யும் மத்தியதரக் குடும்ப இளைஞர்களின் ஆசையும் விருப்பமும் இந்தப் பாடலின் ஹைலைட்.இந்தப் பாடலின் இசை, பாடல் வரிகள் இதனோடு இதன் காட்சியமைப்பும் இனிமை . இவை எல்லாவற்றையும் விட இந்த நண்பர்கள் /சகோதரர்கள் இடையே இருக்கும் ஹார்மனியும் ரசிக்கத்தக்கது.  செம குறும்பு கொப்பளிக்கும் இரு இளைஞர்கள்  பிரதிபலிக்கும் ( இடை இடையே இனிப்பில் முந்திரி போல ) வசனங்களும் அழகு.

இது முகநூல் பகிர்வு . யூ ட்யூபிலும் பெரிதான விவரங்கள் ஒன்றுமில்லை. அதனால் யார் எழுதியது. இசைத்தவர் பாடியவர் படம்பிடித்தவர் பற்றித் தெரியவில்லை. ஆனால் மனவோட்டத்தில் கலந்த பாடல். ரிதமிக்காகத் திரும்பத் திரும்ப ஒலிக்கும் எளிமை. அதன் லயிப்புத்தான் என் வலைத்தளம் வரை அந்தப் பாடலை இழுத்து வந்துள்ளது.   இந்தப் பாடலைப் பாடியவருக்கும் கிடார் இசைத்தவருக்கும் படம் பிடித்தவருக்கும் வாழ்த்துகள்.


இந்தக் குறும்படமும் ரொம்பப் பிடிச்சிருந்தது. இது படத்தோட டைட்டில் சாங் மாதிரி.. மெல்லிசையோடு தவழும் பாடல்.  லிரிக்ஸ் அருமை.


மனித உறவுகளில் மரித்துக்கொண்டிருக்கும் பாசம் என்னும் உணர்வைத் தட்டி எழுப்பிக் கேள்வி கேட்ட படம் இது.ஒரு பேரனுக்கும் பாட்டிக்கும் உள்ள உணர்வு பூர்வமான உறவைப் பகிர்ந்த படம்.

முதுமையும் பிணியும் மரணமும்  அனைவருக்கும் வரக்கூடியது. அகிலா புகழ் அவர்களின் ஒரு கவிதையில் தலைக்கூத்தல் படித்து அதிர்ந்தேன். முன்பே சேலத்தில் இருந்தபோது ஒரு முறை அதைக் கேள்வியுற்றிருக்கிறேன்.

இந்தப் படத்தில் அவ்வளவு கொடுமை இல்லை என்றாலும்  உடல் நிலை சரியில்லாத அம்மாவிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொண்ட மகன் சாகப்போகிற கிழவிதானே இனி என்ன வைத்தியம் வேண்டிக்கிடக்கு என்று  அவருக்கு வைத்தியம் பார்ப்பதை வேஸ்ட் என்று கூறி விலகுவது கொடுமையானதுதான்.

சுட்டிப் பேரனாக வரும் அஷோக்கும் பாட்டியும் டாம் & ஜெர்ரி ஜோடி போல ஒரே கலக்கல். முதலில் பாட்டி சொல்லும் எல்லாத்துக்கும் வெறுப்பும் கோபமும் அடையும் அஷோக் பாட்டியின் உடல் நிலை சரியில்லை என்றதும் அவர் உள்ளே உறைந்திருக்கும் பாசம் வெளிப்படும் இடம் அற்புதம்.

ஆனால் பாட்டி ட்ரெயினில் வந்த பேரனைக் கூட்டிக்கொண்டு ( அன்னக்கிளி ஈறாய பரம்பரைப் படங்களில் வருவது போல ) கிராமம் கிராமமாக நடத்தியே கூட்டிப் போய் இருக்க வேண்டாம். :)

அதே போல பதின்பருவப் பேரன் படுக்கையில் சிறுநீர் கழிப்பதும் அதைப் பாட்டி அருந்தக் கொடுப்பதும்.. உவ்வேக்.. சிறுவர்கள் தூங்கும்போது சிறுநீர் கழித்தால் அவர்கள் மேல் பச்சைத் தண்ணீரை ஊற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்கள், அதன்பின் அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள்  என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் பாட்டி பாட்டிலில் பிடித்துக் கொடுக்கிறார். என்ன பாட்டியோ.. என்ன பாட்டி வைத்தியமோ..

திருமண வீட்டிலும் ஒருவர் இன்ஷூரன்ஸ் பத்தி கான்வாசிங்க் பண்ணுவது செம சிரிப்பை உண்டாக்கி விட்டது. நவீன காலப் பையன்களைப் போல வாட்டர் பாட்டிலும் கையுமாக அஷோக் அலைவது, செல்ஃபோனை நோண்டிக்கொண்டே இருப்பது இதெல்லாம் டைரக்டர் இந்த யூத்களை எப்பிடி அப்சர்வ் பண்ணி இருக்கார்னு தெரியுது. ஒரு வேளை அவரே யூத்தா இருக்கதால தான் செய்றத எல்லாம் ஈஸியா கொண்டுவந்துட்டாரோ என்னவோ. :)

பாட்டியைத்தான் பேரன் ஏய் கிழவி.. கிழவி என்று கூப்பிடுவது ஒட்டவில்லை. பாட்டின்னோ குட்டிம்மான்னோ கூப்பிட்டு இருக்கலாம். என்னதான் கிராமம் என்றாலும் மரியாதை இல்லாமல் யாரும் பாட்டியைக் கிழவி என்பதில்லை.

ஒரு சினிமா பார்த்த எஃபெக்டை இந்தப் படம் உருவாக்கியது என்றால் மிகையில்லை. ஏன்னா இது அரை மணி நேரக் குறும்படம். பெரியவர்கள் போற்றப்படவேண்டியவர்கள் என்று மிக நல்ல ஒரு மெசேஜை சொல்லியதற்காக இதன் இயக்குநர் கணேஷ்குமார் மோகனைப் பாராட்டலாம்.

காதலும் பாசமும் இன்னும் உலகில் நீடிச்சிருக்குன்னு சொன்னதுக்காக இந்தப் படம்&பாடலுக்கு ஹேட்ஸ் ஆஃப். :) 

4 கருத்துகள்:

 1. இரண்டு காணொளிக்காட்சிகளும் ரசிக்கவைத்தன,,

  பதிலளிநீக்கு
 2. http://vishcornelius.blogspot.in/2014/07/blog-post_7816.html

  https://www.facebook.com/photo.php?v=4689787525688&set=vb.1323962769&type=2&theater

  பதிலளிநீக்கு
 3. நன்றி ராஜி இரண்டையும் ரசித்தேன். முகநூலில் நட்பு வட்டத்தில் இணைந்தேன் :)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...