எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுக்ராச்சாரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுக்ராச்சாரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜூலை, 2018

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். தினமலர் சிறுவர்மலர் - 26.


உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன்.


நர்மதை நதியின் கரை. அங்கே அஸ்வமேத யாகங்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.. நூறு யாகங்கள் ஒருங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்திர பதவியை அடைந்தபின்னும் அதைத் தக்கவைத்துக் கொள்ள மஹாபலி மன்னன் இந்த ஹோமங்களை நடத்திக் கொண்டிருந்தான்.

அசுரகுல மன்னன் ஆனாலும் மஹாபலி அறநெறி தவறாதவன். பிரஹலாதனுடைய பேரன். தன்னால் எதுவும் முடியும் என்ற எண்ணம் கொண்டவன். சகல சம்பத்துகளும் கொண்ட அமராவதிப் பட்டணம் மஹாபலி மன்னனின் வசமாகிவிட்டது.  இந்திரனும் தேவர்களும் இந்திரபுரியைவிட்டு மறைவிடம் தேடித் தஞ்சம் புகுந்தார்கள்.

ஹோம சமித்துக்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. அவிர்பாகங்களை அந்த அந்த தேவதைகள் பிரத்யட்சமாகி வாங்கிக் கொண்டார்கள். பூக்களும் பூஜா திரவியங்களுமாக மணத்துக் கொண்டிருந்தது அந்த இடம். ஹோம குண்டங்களில் இருந்து ஹோமப் புகை சூரியனைத் தொடுவது போல எங்கெங்கும்உயர்ந்து கொண்டிருந்தது.

அசுர குல குரு சுக்கிராச்சாரியாரின் மேற்பார்வையில் ஒவ்வொரு யாக குண்டத்திலும் பட்டும் பீதாம்பரமும் கொப்பரையும் வாசனைப் பொருட்களும் பூமாலைகளும் மணக்கப் பூர்ணாகுதி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பூர்ணாகுதி முடிந்ததும் யாசிப்பவர்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து மஹாபலி அவர்களின் ஆசி பெறுவான்.