எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
களியைக் களிப்போடு உண்ட ஈசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களியைக் களிப்போடு உண்ட ஈசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஜூலை, 2025

சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்

 சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்

என்னது ஈசன் களி உண்டாரா.. அதுவும் களிப்போடு உண்டாரா என ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆம் அடிமுடி அறிய ஒண்ணாதவர், ஆதியந்தம் அற்றவர், தில்லையின் அம்பலவாணர், தன் பக்தனான சேந்தன் இட்ட களியை உண்டு அதைக் களிப்போடு உலகத்தாருக்கும் அம்பலப்படுத்தினார். அக்கதையைப் பார்ப்போம் வாருங்கள்.

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவெண்காடர் எனப்படும் பட்டினத்தடிகளின் முதன்மைக் கணக்காளர் சேந்தனார். மருதவாணன் கொடுத்த ஞானத்தால் துறவறமேற்ற பட்டினத்தடிகள் தனது கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்கிவிடும்படித் தனது கணக்காளரான சேந்தனாரிடம் கட்டளையிட்டார்.