எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஜனவரி, 2020

”எழுத்தும் நானும்” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ( காரைக்குடிக் கிளை)  கூட்டத்தில் எழுத்தும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்வு.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ( காரைக்குடி-சிவகங்கை ) மாவட்டத்  தலைவர் திருமிகு ஜீவ சிந்தன் அவர்கள் உரையாடும்படிக் கேட்டு  இந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார்கள்.

கிட்டத்தட்டப் பன்னிரெண்டு ஆண்டுகளாக காரைக்குடியில் செயல்படுகிறது இச்சங்கம் . வாராவாரம் சனிக்கிழமைகளில் த.மு.எ.ச. வின் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் முன்பு காலமான த.மு.எ.ச. நிறுவனர் டி. செல்வராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.




பார்வையாளர்களும் சங்கத்தின் அங்கத்தினர்களும் . நிகழ்வு 9 மணிக்கு முடிந்தது . அதுவரை சங்கத்தின் அங்கத்தினர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.


எனது உறவினர்களான வள்ளியப்ப அய்த்தானும், அழகப்ப சித்தப்பாவும் கலந்து கொண்டார்கள். நலந்தா பதிப்பக உரிமையாளர் திரு ஜம்புலிங்கம் அவர்களும் தமது உறவினர் திரு. மெய்யப்பன் அவர்களுடன் கலந்துகொண்டார்.

மாலை 7 மணி அளவில் நிகழ்வு தொடங்கியது. திருமிகு கலைவாணி வரவேற்புரை ஆற்றினார். புகழ்ச்சியில் கொஞ்சம் நெளியவைத்துவிட்டார் :)

முன்னாள் தலைவர் திரு. அரியமுத்து  அவர்களின் உரை. இவர் அழகான பாடல் ஒன்றும் பாடினார்.

இந்நாள் தலைவர் அவர்கள் திரு ஜீவ சிந்தன் அவர்களின் உரை.


எனக்கு 40 நிமிடங்கள் அளிக்கப்பட்டிருந்தன. நான் வாசித்த எழுத்துக்கள் பற்றியும் நான் எழுத வந்தது பற்றியும் கூறினேன்.  18. 19 நிமிடங்களிலேயே உரையை நிறைவு செய்தேன். சவுண்ட் க்ளவுடில் மகனார் பதிந்ததும் பகிர்வேன்.


எனது உறவினரான வள்ளியப்ப அய்த்தான் எனக்கு சாகித்ய அகாதமி போன்ற விருதுகள் கிடைக்க வேண்டும் என வாழ்த்தினார் :)


தனது கருத்தைப் பகிர்ந்த தோழர் திரு. ராஜா முகம்மது. காரைக்குடியை சொந்த ஊராகக் கொண்ட அனைவரும் நான் சொன்ன வாழ்வியலைப் புரிந்து கொண்டார்கள். தனிமை, முதிய பெண்களின் வாழ்க்கை, மறுதாரம், சுவீகாரம் ஆகியன பற்றியும் இன்னும் அவர்களின் பிரச்சனைகள் பற்றி எழுத வேண்டும் என நான் உரையில் குறிப்பிட்டதை ஐயா அவர்களும் ஆமோதித்தார்கள். நன்றி ஐயா.


கவிஞர் தென்றல் சாய் எனது முகநூல் வலைத்தள எழுத்துக்கள் பற்றிச் சிலாகித்துப் பேசினார். மறுநாள் விடியற்காலையில் புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டிய வேலை இருந்தும் வந்திருந்து வாழ்த்தியமை குறிந்து மகிழ்ந்தேன்.

அடுத்து அங்கத்தினர்கள் அனைவருமே எழுத்து சம்பந்தமாகவும் என் உரை சம்பந்தமாகவும் கருத்தைப் பகிர்ந்தார்கள்.

புதிதாக வாசிப்புக்கு வந்த பல இளையர்கள் இனியும் தொடர்ந்து எழுத்து மற்றும் வாசிப்புப் பணியில் ஈடுபடுவோம் என்று உரைத்தார்கள்.




நல்ல கூட்டம்தான். நமக்குத்தான் வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது.


எழுத்து என்றால் என்ன என்று வித்யாசமாய்க் கூறிய சிறுவன் .




திருமதி ஷண்முகப் ப்ரியா முன்னாள் தலைவர் அவர்களின் மகள். பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் அவர் தனது குழந்தைகளுடன் வந்திருந்தார். சுற்றுச் சூழல் பற்றியும் நீர் சேமிப்புப் பற்றியும் ஒரு கவிதை கூறினார். மிக அருமையாக இருந்தது.


செல்வி சபிதா பானு மிக அருமையாகப் பேசினார். தனக்கு ஒரு ரோல்மாடலாக நான் கிடைத்ததாக மகிழ்ந்தார். பத்து புத்தகம் போட்டும் பணிவாக இருப்பதாகவும் மேக்கப் போன்றவை இல்லாமல் எளிமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

”அன்பு ! அறிவு ! அனுபவம் ! கலந்த
எழுத்தில் எழுந்தருளிய
அம்மாவைக் கண்டேன் என்று
சொல்லவா! இல்லை
தித்திக்கும் தேன் கலந்த,
“தேனம்மை”
அம்மாவின் எழுத்து மழையில்
நனைந்தேன் என்று சொல்லவா!

தேனம்மைலெக்ஷ்மணன்

அம்மாவிற்காக என்  அகத்தில்
எழுந்த ஒரு சிறு கவிதை.”

நன்றி மகளே. நன்று மகளே :)


காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் பயிலும் இரு மாணவியர் வாழ்த்தினார்கள்.


இந்த இளைஞர் அம்மாவைப் பற்றி ஒரு பாட்டுப் பாடினார். விவசாய வாழ்வுடன் இணைந்த கிராமிய மணம் கமழ்ந்த அருமையான பாடல்.


எனது நூல்களில் ஆட்டோகிராஃப் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி எழுதிக் கொடுத்தேன்


காரைக்குடி நம்பிக்கையூட்டுகிறது. இளையர்கள் பலர் எழுச்சியுடன் புறப்பட்டிருக்கிறார்கள் இலக்கிய உலகத்தில் தம் தடம் பதிக்க.


கூட்டத்துக்கு வந்தவர்கள் பலர் கிளம்பி விட்டார்கள். ஒன்பது மணி வரை நடந்த இக்கூட்டத்தில் இன்னும் உரையாடிக்கொண்டிருந்தார்கள் சிலர். அவர்களது அன்பெனும் பெருமழையில் நனைந்து மலர்ந்தேன்.

காரைக்குடியில் வாசிப்பையும் எழுத்தையும் இன்னும் பரவலாக்கிய தமுஎ சங்கத்தினருக்கும் இடம் கொடுத்து உதவும் கார்த்தியேன் பள்ளியின் முப்பெரும் சகோதரியருக்கும் வந்தனங்கள். 

9 கருத்துகள்:

  1. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. அம்மா நம் சந்திப்பு அருமை உங்கள் பதிவு
    மிகவும் அழகு

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள். சிறப்பாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உரை கேட்க ஆசை

    பதிலளிநீக்கு
  4. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான நிகழ்வுப் பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொவு நிகழ்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் சகோ.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் தேன். மேன்மேலும் உயர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி துரை செல்வராஜூ சார்

    நன்றி சபிதா

    நன்றி கௌசி. சீக்கிரம் இணைப்பு கொடுக்கிறேன்.

    நன்றி டிடி சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஆன்மீகம். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...