டால்ஃபின் சஃபாரி (சவாரி)
டால்ஃபின்கள் பந்து விளையாடிப் பார்த்திருப்பீர்கள். ட்ரெயினர் சொன்னபடி வளைந்து நெளிந்து குதித்து வளையத்துள் புகுந்ததைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் துபாய் டால்ஃபின் ஷோவில் டால்ஃபின்கள் ட்ரெயினரைச் சுமந்து சென்று அதிசயிக்க வைத்தன.
இதோ அதன் இரு ட்ரெயினர்களில் ஒருவர் அங்கே இருந்த ஒரு ஸ்டாண்டில் ஏறி டால்ஃபின் குளத்தில் குதிக்கத் தயாராகிறார். குதித்து நீந்தி டால்ஃபின்களோடு அளவளாவுகிறார்.
இரண்டையும் இருபுறமும் புரவிகள் போல பிடரி ( ஃபின்ஸ் ! ) பிடித்தபடி நீந்தத் தொடங்குகிறார்.
பெண் ட்ரெயினரிடம் அவை சென்று அனுமதி வாங்குகின்றன ! :) அவரிடமிருந்து ஒரு ரப்பர் அல்லது ப்ளாஸ்டிக் தடியை வாங்கி வருகிறார் ஆண் ட்ரெயினர்.
அந்தோ அவர் பின்னேயே நீந்தி அவை அந்தக் கழியை எவ்விப் பிடிக்கின்றன.
தங்கள் வாயினால்
கவ்வியபடி நீந்தத் தொடங்குகின்றன.
ஆரம்பிக்கின்றது நீச்சல்குளத்தில் நுரைகளின் அதகளம். அந்தோ மெல்ல மெல்ல அவற்றோடு நீந்தி அவை கவ்விப் பிடித்துள்ள
அந்தக் கழியின் மேல் பாலன்ஸ் செய்தபடி
நிற்கின்றார்.
அப்படியே மேலே தவ்வி வளையத்துள் ஒரு பந்தையும் போடுகின்றார்.
அஹா என்ன ஒரு மாயம். இவ்வளவு தூரம் அந்த ஆண் ட்ரெயினர் எவ்விப் பந்தைப் போட முடிந்தது. மனிதரைச்
சுமக்கும் அளவு ( அதுவும் வாயால் ) டால்ஃபின்கள்
வலிமையானவைதான் போலும். பெண் ட்ரெயினரின் கரவொலியுடன்
கூட்டத்தினரான நமது கரவொலியும் அரங்கை அதிரவைக்கிறது.
இன்னும் அதிர்கிறது
டால்ஃபின் குளம் :) டால்ஃபின்கள் மேடையேறி
தங்கள் சவாரிக்கான
கரவொலியில் மகிழ்கின்றன.
பெண் ட்ரெயினர்
அவற்றைத் தட்டிக் கொடுத்து மீன் அளிக்கிறார்.
கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்துகிறார்.
படங்கள் தெளிவில்லா விட்டாலும் வர்ணனைகள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குடால்பினுக்கு பயிற்சி சிறப்பு...
பதிலளிநீக்குநானும் துபாயில் டால்பின் ஷோ பார்த்திருக்கிறேன்
பதிலளிநீக்குஆமாம். நன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குஆமாம் டிடி சகோ
நன்றி பாலா சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!