எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 24 செப்டம்பர், 2012

சங்கடம் . ( ஆனந்தவிகடன் சொல்வனத்தில்..)

வெள்ளையடித்தபின்னும்
மின்னும் க்ரேயான் பொம்மைகள்.
மிச்ச தேதிகளோடு
தொங்கும் நாட்காட்டி
பால்கனிக் கொடியில்
காற்றிலாடும் கிளிப்புகள்.
சுவற்றலமாரியில் கிடக்கும்
பாச்சை உருண்டைகள்
தாளிதத்தின் தெறிப்புகளை
சுமந்திருக்கும் சமையலறை மேடை.

கதவைத் திறந்ததும்
சோப்பு வாசத்தையும்
குழந்தை சுவாசத்தையும்
குழப்பி வைத்த காற்று.
சங்கடமாகத்தானிருக்கிறது
முன்பு குடியிருந்தவர்களின்
நினைவைச் சுமந்து தவிக்கும்
வீட்டுக்குள் புதிதாய்க் குடி புக..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 15.8.2012 , ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியானது.7 கருத்துகள்:

 1. மிகவும் அருமையான வரிகள்..பகிர்வுக்கு நன்றி....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  பதிலளிநீக்கு
 2. மிக அருமையான கவிதை வரிகள் ....வாழ்த்துகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 3. நன்றி காமெடி உலகம்

  நன்றி சமுத்ரா

  நன்றி பிரியா

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி சாரல்

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...