எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 பிப்ரவரி, 2011

யுத்தம் செய்.. ( YUDHAM SEI REVIEW )எனது பார்வையில்..

ஒரு இளம்பெண்ணின் தாயாய் இருந்தால் அவளுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் போது என்ன செய்வீர்கள்.. ? மிரண்டு ஒதுங்குவீர்கள்.. ஒரு தாய் தன் குழந்தைக்கு கொடுமை இழைக்கப்பட்ட போது மிரண்டு எழுந்து மிரட்டியதுதான் யுத்தம் செய்.. நிச்சயம் எல்லாருமே செய்ய வேண்டிய யுத்தம்தான்.. அதை மிக அழுத்தமாக மிஷ்கினும் சேரனும் சொல்லி இருக்கிறார்கள்..


சேரனின் படம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பரிணாமம் இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூலாதாரமாய் பாசக்கார அண்ணன்., தம்பி., போன்ற ஒரு தோற்றம் இருக்கும். இந்தப் படத்திலும் அதே.. ஆனால் இன்னும் அழுத்தமான கம்பீரமான சேரனைப் படைத்திருக்கிறார் மிஷ்கின். மிக மிக அற்புதமாக செய்திருக்கிறீர்கள் சேரன்.


மிஷ்கின் அதிகம் படித்துக் கொண்டே இருப்பார் என கேள்வியுற்றிருக்கிறேன்.. ஜேகே யின் வார்த்தைகளை ஹீரோ ( சேரன்) ஜே கிருஷ்ணமூர்த்திக்காக ஜூடாஸ் வாயிலாக வெளிப்படும் வார்த்தைகள்.. THE OBSERVER IS OBSERVED.. புலப்படுத்துகிறது அவரது மேதமையை.. பேட்டிகளில் பார்க்கும் போதும் நேரில் பார்க்கும் போதும் புன்னகை முகத்தோடே காணப்படுகிறார் மிஷ்கின்.. ஆனால் பேட்டிகளிலும் வசனங்களிலும் செம ஷார்ப் மற்றும் கிண்டல் ஊடாடுகிறது. நிச்சயம் ஒரு தீவிரமான தாயையும் விடா முயற்சியுள்ள நேர்மையான போலீஸ் அதிகாரியையும் படைத்ததற்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் மிஷ்கின். சித்திரம் பேசுதடி., அஞ்சாதே போல இன்னொரு சிறப்பான படம் இது. ( நந்தலாலா நான் பார்க்கவில்லை).


நகரத்தின் நியான் விளக்குகளின் ஊடாக பயணம் செய்யும் போது எங்கோ ஒரு ஓரத்தில் இப்படி லைவ் ஷோக்கள் நடக்கக் கூடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது காட்சியமைப்புகள்.. ஆட்டோக்காரர்களின் இன்னொரு முகம்., போலீஸ்காரர்களின் செயல்பாடு., பொது ஜனத்தின் அஜாக்கிரதை.. இந்த மாதிரி சூழ்நிலைகளில் எதிர்த்துப் போராடுகிறவன் படும் சிரமங்கள் எல்லாம் வரைந்து வைத்த சித்திரங்களாய் அவஸ்தை ஏற்படுத்துகிறது.


காணாமல் போனவர்கள் பற்றி படிக்க நேரும் போதோ., இளம்பெண்., குழந்தைகள் கடத்தி கற்பழித்து கொல்லப்படும் செய்தியோ ., எரியூட்டப் பட்ட பெண் குழந்தைகளின் தாய்கள் பித்துப் பிடித்தவர்கள் மாதிரி இருக்கும் செய்தி படிக்கும் போதோ ஒரு தாயாய் பதறும்.. குற்றவாளிகளை நாமே தண்டிக்க வேண்டும் போல் இருக்கும். இதில் லட்சுமியின் பாத்திரப் படைப்பும் அதை அவரும் ஒய் ஜி மகேந்திரனும் வெளிப்படுத்தி இருக்கும் விதமும் அற்புதம்.. ஒய் ஜி மகேந்திரனும் இதுவரை இல்லாத இன்னொரு பரிமாணத்தில் .. கடைசியில் குண்டு படும் போதும்., கத்தி துளைக்கும் போதும் எதிரியை நோக்கி இருவரும் ஒருவர் மற்றவர் தோள் தூக்கி முன்னேறும் காட்சி கண்ணீரை வரவழைத்தது.


சேரனின் உதவியாளர்களாக தீப்தி ஷா., சங்கர் நன்றாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள்.. சிபிசிஐடி ஆஃபீசராக., சேரன் அசத்தல்.. ரொம்ப கம்பீரமும் கனமும் பொருந்திய பாத்திரம்.. மிகவும் சுளுவாக நடித்து சேரன் ஸ்கோர் செய்கிறார்.. எதையும் சரியாக செய்ய முடியாத மத்தியதரவர்க்கத்து மனிதனாகவும்., விடாமுயற்சியோடும் நேர்மையோடும் செய்யத் துடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் சிறப்பாக செய்திருக்கிறார் சேரன். நீதி கேட்டு யுத்தம் செய்யுங்கள் ஜெயிப்பீர்கள் என்ற செய்தியோடு.


இசை கே .. மிகுந்த பாராட்டுக்கள்.. பி.ஜி.எம்’மே கதையை எங்கோ கொண்டு செல்கிறது த்ரில்லர் என்பதை உணர்த்தி.. அடிநாதம் இதுவென்றால் காமிரா நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறது.. அதிகம் இரவு நேரங்களிலேயே எடுக்கப் பட்டிருப்பதால் இசையும்., காமிரா கோணங்களும் காட்சியமைப்புக்கு ஏற்ற திகிலை அதிகப்படுத்துகின்றன. இசைக்காக கே வுக்கும்., ஒளிப்பதிவுக்காக சத்யாவுக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.


குண்டு அம்மா., மாணிக்க விநாயகம்., வடிவேல்., ஜூடாஸ்., இசக்கிமுத்து., அந்த சகோதரன் என எல்லா காரெக்டர்களும் கன கச்சிதம். அமீர் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனம் என்பது மட்டுமல்ல அவருக்கு அதில் பாடிக் கொண்டே ஹார்மோனியம் வாசிப்பவர் சாரு என்பது ஆச்சர்யம். சிக்கென்ற நடனப் பெண்மணிகள் மிஷ்கினின் படத்தில் அழகு.


மிகச் சிறந்த படத்தை அளித்த கல்பாத்தி அகோரம் சகோதரர்களுக்கு நன்றி..
இதில் எங்கள் முகப் புத்தகத் தோழி தமிழ்செல்வியின் கணவர் நிக்கோலஸும்., அவரது தம்பி ஜாய்சன் சுஜித்குமாரும் ( தங்கம்)நடித்திருக்கி்றார்கள். அவரவர் பாத்திரத்தில் அவரவரும் கச்சிதமாய்.
மூன்று நடிகர்களோடு எங்கள் முகப் புத்தக நண்பர்கள் அனைவரும் அமர்ந்து பார்த்தோம் படத்தை.


நண்பரின் படம் என்பதால் பெரிதாக ஒன்றும் விமர்சித்து விடமாட்டீர்கள் என்று முகப் புத்தகத்தில் கிண்டலடித்து இருந்தார்கள்.. சிறப்பான ஒன்றை என் நண்பராயிருக்கும் ஒருவர் செய்தால் சிறப்பானது என்றுதானே சொல்ல முடியும். வேறு ஏதும் வார்த்தைகள் உண்டா என்ன.??


மிகச் சிறப்பு என்னவென்றால் இது அனைவருக்கும் சேரன் அளித்த ஃப்ரீ ஷோ.. சென்னை சிட்டி சென்டர் ஐநாக்ஸில்.. படம் முடிவில் அனைவரும் விரும்பி அளித்த தொகை குழந்தைகள் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. இதிலும் மனிதநேயம் மிக்கவர் எங்கள் நண்பர் சேரன் என்ற பெருமிதத்தோடும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியும்., ஒரு நல்ல செயலில் பங்குபெற்ற மனநிறைவும் கொடுத்த சேரனுக்கு நன்றி. :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 

29 கருத்துகள்:

  1. படம் முடிவில் அனைவரும் விரும்பி அளித்த தொகை குழந்தைகள் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.


    ....அக்கா, That is nice of Seran Sir to do it.
    நெகிழ்ந்தேன். உங்கள் நட்பு வட்டம் என்றும் வாழ்க!

    பதிலளிநீக்கு
  2. மேடம்... உங்கள் ரசனை பல இடங்களில் என்னுடயதோடு ஒத்துப்போனது...

    பதிலளிநீக்கு
  3. இவ்ளோ சொன்ன அப்புறமும்...அதுவும் சேரன் மிஷ்கின் !

    பதிலளிநீக்கு
  4. யுத்தம் செய் ........................ வாழ்த்துக்கள் சேரன் அண்ணன் ............. படைப்பாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    இப்படிப்பட்ட படைப்புகளை நாம் ஒதுக்கினால், இந்த அருமையான படைப்பாளிகளும் தொழில் நடத்தவேண்டி காதல், காமம் ஆகியவற்றை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டிய நிலைமை வரும். தமிழ் சினிமாவில் இருக்கிற ஒரு சில சிறந்த படைப்பாளிகளை ஆதரிப்போம் நாம்.

    பதிலளிநீக்கு
  5. உங்க கடமை உணர்ச்சிய நெனைச்சி புல்லரிச்சு போயிட்டேன்.நான் இப்பதேன் தூங்கி எழுந்திருக்கேன்.விமர்சனம் போட்டு அசத்திட்டீங்க.நான் எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன்.நன்றி அக்கா. ஒரு அற்புதமான படத்தை கொடுத்த சேரன்,மிஷ்கின் ஜோடி தமிழின் வெற்றிக்கூட்டணி.

    பதிலளிநீக்கு
  6. akka romba arumaiyana vimarsanam...oru 3 naal indha velaikaaga konjam presssure irundhadhuthaan but kadasi naal andru ellaraiyum paartha pinbu andha pressure maraindhu puthunarchi undaanadhu :)

    பதிலளிநீக்கு
  7. இந்த வாரம் மதுரைக்குப் போனவுடனே ஆற்ற வேண்டிய முதல் கடமை "யுத்தம் செய்"வதுதான்!
    திரும்பி வந்து இங்கே ரிலீஸ் செய்யாதவர்களுடன் யுத்தம் செய்யவேண்டும்!
    அருமை அக்கா!

    பதிலளிநீக்கு
  8. ஆரம்ப வரிகளே வலிமையாக..

    விமர்சனம் நன்று தேனம்மை.

    பதிலளிநீக்கு
  9. அழகான ரசனையுடன் சிறப்பா சொல்லியிருக்கீங்கம்மா....

    விமர்சன பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. //நண்பரின் படம் என்பதால் பெரிதாக ஒன்றும் விமர்சித்து விடமாட்டீர்கள் என்று முகப் புத்தகத்தில் கிண்டலடித்து இருந்தார்கள்.. சிறப்பான ஒன்றை என் நண்பராயிருக்கும் ஒருவர் செய்தால் சிறப்பானது என்றுதானே சொல்ல முடியும். வேறு ஏதும் வார்த்தைகள் உண்டா என்ன.??//

    சூப்பர்.....

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு விமர்சனம். சேரனின் மனிதாபிமானத்துக்கு ஒரு சல்யூட்.

    பதிலளிநீக்கு
  12. சகோதரி தேனம்மை அவர்வளுக்கு வணக்கம்....
    "யுத்தம் செய்" திரைபடத்தின் விமர்சனம் மிகவும் அருமை...
    எனவே ஒரு படத்தினை பற்றி தவறான விமர்சனம் கொடுப்பது எளிது... முட்டை இடும் கோழிக்கு தான் அறியும் அதை வலி...
    ஆனால் ஒரு படத்தை உருவாக்க உள்ள சிரமங்கள் பலராம் அறிய படாததே...இவ்வரிசையில் தங்களுடுடைய விமர்சனம் மிகவும் அருமை... நியாயமான, நேர்மையான விமர்சனாமாக இருந்ததது பாரட்டகூடியது...!!!

    பதிலளிநீக்கு
  13. அருமையான விமர்சனம்....

    ஐநாக்ஸ் திரையரங்கில் படத்தை திரையிட்டு, வசூல் தொகையை குழந்தைகள் மருத்துவமனைக்கு கொடுத்தமை நெகிழ வைத்தது...

    இது போல் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தோழமைகள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....

    வாழ்த்துக்கள் தேனம்மை....

    பதிலளிநீக்கு
  14. விமர்சனம் அருமை!! நிச்சயம் இந்த படத்தைப் பார்க்கனும்...

    பதிலளிநீக்கு
  15. [[[நண்பரின் படம் என்பதால் பெரிதாக ஒன்றும் விமர்சித்து விடமாட்டீர்கள் என்று முகப் புத்தகத்தில் கிண்டலடித்து இருந்தார்கள். சிறப்பான ஒன்றை என் நண்பராயிருக்கும் ஒருவர் செய்தால் சிறப்பானது என்றுதானே சொல்ல முடியும். வேறு ஏதும் வார்த்தைகள் உண்டா என்ன.??]]]

    இதைவிட வேறென்ன சொல்ல வேண்டும்..?

    பொழுதுபோக்கிலும் ஒரு சமூகக் கடமையை நிறைவேற்றிய உங்களுக்கு எனது நன்றி..!

    பதிலளிநீக்கு
  16. ரசனையான விமர்சனம்.. படம் பார்த்திட‌ ஆவலை ஏற்படுத்துகிறது!

    பதிலளிநீக்கு
  17. hello thenammai avarkale ungaludaya yuttham sei vimarsanam miga miga arumai, padam paarka aavalaka irukkiradhu nanri.

    பதிலளிநீக்கு
  18. I just happened to see Kalaignar TV. I am proud of you. Very happy to see you being elevated in thoughts. Best wishes
    Summavin mama!

    பதிலளிநீக்கு
  19. நன்றி சித்து., பிரபா., ஹேமா ( புரியலையே..??)., மெல்வின்., மரா., கயல்., பிரபு., ராமலெக்ஷ்மி., மாணவன்., அக்பர்., மனோ., சுதா., கோபி., குமார்., மேனகா., சரவணா., பிரியா., பிரணவம் ரவிக்குமார்., ஆயிஷா., டி வி ஆர்., ஷர்புதீன்., செந்தில்., லக்கி கை., ராமு மாமா., யுவா..

    பதிலளிநீக்கு
  20. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  21. ஓ, பழைய படமா? இப்போ வந்திருக்குனு நினைச்சேன். படம் தொலைக்காட்சியில் திரையிடப் பட்டால் கட்டாயம் பார்க்கிறேன். இப்போ சமீபத்தில் சேரனின் படம் பத்தி எதுவும் கேள்விப் படலையேனு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...