எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 பிப்ரவரி, 2015

குழந்தைகளைத் தாக்கும் ரேர் டிசீஸ்.( WORLD RARE DISEASE DAY )



குழந்தைகளைத் தாக்கும் கொடூர நோய்கள் ( WORLD RARE DISEASE DAY )

 குழந்தைகளைத் தாக்கும் மிக அரிதான நோய்கள் இவை: லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஸார்டர். – கௌச்சர், எம்பிஎஸ்,ஃபேப்ரி & பாம்பி – LYSOSOMAL STORAGE DISORDER – GAUCHER, MPS, FABRY & POMPE.  உலகில் 50 வகையான டிஸ்ஸார்டர் நோய்களின் தொகுப்பு ரேர் டிஸீஸ் என அறியப்பட்டுள்ளன. தற்போது  அதில் 6 க்கு மட்டுமே மருந்துகள் உள்ளன. இந்தியாவில் அதில் ஆறுக்கு இரண்டு வியாதிகளுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை. மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் அதைக் கண்டறிய ஆகும் செலவு 30 – 40 லட்சம் வரையில் ஆகிறது. கண்டுபிடிக்கவும் அதன்பின் சிகிச்சைக்கும் அரசாங்கம் எதுவும் கொடுப்பதில்லை. என மனித மரபணு மையத்தைச் சேர்ந்த மருத்துவர் மீனாக்ஷி பட் கூறியுள்ளார்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

திங்கள், 23 பிப்ரவரி, 2015

காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவில் தவத்திரு.பொன்னம்பல அடிகளாரின் உரை.

61 ஆண்டுகளுக்கு முன் , எனது பெரிய மாமாவு( திரு . வ. சுப்பையா அவர்களுக்கு ) க்கு 20 வயது. இன்றைக்கு நடிகர் நடிகையருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அந்த வயதில் அவர்கள் திருக்குறட் கழகத்தை (குறள் ) இலக்குவன் போன்ற  நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தார்கள். அந்தக் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவை எனது மூன்றாவது மாமா லயன் வெங்கடாசலம் அவர்கள் பொருளாளராக இருந்து சிறப்புற , களிப்புற, உவப்புற  நிறைவேற்றினார்கள். அவ்விழாவினைக் காணும் பாக்கியம் எனக்கும் கிட்டியது. அங்கே கிடைத்த சில திருக்குறளின் பொன் துளிகளை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

நவயுகப் புத்தகாலயம் திரு மெய்யப்பன், திரு முத்துப் பழனியப்பன், திருமதி கற்பகம் இளங்கோ, திரு சுபவீரபாண்டியன், திரு அய்க்கண் ஆகியோர் பங்குபெற்ற இவ்விழாவினை ( மாலை நிகழ்ச்சி ) திருமதி தேவி நாச்சியப்பன் தொகுத்து வழங்கினார்.

திரு பொன்னம்பல அடிகளின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் இருந்து நான் குறிப்பெடுத்தவற்றை இங்கே பகிர்கிறேன். (திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள  துறவறத்தின் சிறப்பு பற்றியும் உரையாற்றினார். )

கல்வியின் சிறப்பு பற்றி , இறைவனைப் பற்றி, வான்மழை சிறப்பு பற்றி, துறவறத்தின், துறவிகளின், தவத்தின் சிறப்பு பற்றி, தன்னலம் இல்லாத தொண்டுகள் பற்றி, இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி, இல்வாழ்க்கையின் பயன் பற்றி, வாழ்க்கைத் துணையின் நலன் பற்றி, நன் மக்கட்பேறு பற்றி, கற்காலம் தொட்டு கணினிக் காலம் வரை இளைய தலைமுறைக்குத் திருக்குறள் வழிகாட்டுவது பற்றி சிறப்பாகப் பேசினார்.

”தமிழ் வளர்க்கும் இடம், தமிழை சிந்திக்கும் இடம்  காரைக்குடி. ஆதியில் இலக்கியங்கள் அரண்மனை வாசத்தில் செழிப்புற்றன. அதன் பின் கோயில்களில் பக்தி இலக்கியமாக உருப்பெற்று சிறந்து விளங்கின. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நாட்டு விடுதலையைக் குறித்து வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்தாக இலக்கியம் மாறியது.  பாமரருக்கும்  எட்டும்படி இலக்கியம் என்னும் வினாக்குறியை வியப்புக்குறி ஆக்கியது தேச விடுதலைப் பாடல்கள்தான்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

'விழுதல் என்பது எழுகையே' ( அறிமுகம் )

ஐரோப்பா அவுஸ்திரேலியா கனடா ஆகிய நாடுகளின் எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதும் 'விழுதல் என்பது எழுகையே'என்ற நெடுந்தொடர் தமிழகம்,இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் இணைத்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறது.

சென்னையை வதிவிடமாகக் கொண்டவரும் தற்போது ஹைதராபாத்தில் வசிப்பவருமாகிய இளங்கலை வேதியல் பட்டதாரியும்,அரசியல் விஞ்ஞானத்தில் முதுநிலை பட்டதாரியுமான திருமதி.தேனம்மை லகஸ்மணன் அவர்களும் இந்நெடுந்தொடரில் இணைந்து எழுதுகிறார் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறோம்.

திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்களைப்பற்றிய கல்வியியல்,கலை,இலக்கிய செயல்பாடுகள் பற்றிய விபரத்தை வெகுவரைவில் வெளியிடுவோம் என்பதை அறியத்தருகிறோம்.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.

குங்குமம் தோழியின் பொங்கல் சிறப்பிதழில் ( 14.1. 2015 இதழ் ) ஸ்டார் தோழியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி குங்குமம் தோழிக்கு. இதழில் இரண்டு பக்கங்களில் வந்துள்ளது. ஆனால் இணைய இணைப்பில் முழுமையாகப் படிக்கலாம். :)  நன்றி குங்குமம் தோழி பொங்கல் சிறப்பிதழில் சிறப்பிடம் கொடுத்தமைக்கு. :)

கேள்விகள்:


1.
நான் ஒரு மனுஷியாக . தாயாக . தோழியாக [ எல்லம் ஒரே பத்தி ]

நான் தேனம்மைலெக்ஷ்மணன். ரொம்ப பர்ஃபெக்ட் என்று நினைத்துக் கொள்ளும் சாதாரண மனுஷி. வெற்றியைக் கொண்டாடுகிறேனோ இல்லையோ தோல்வியைக் கொண்டாடி விடுவேன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்யும் அனுசூயையாகவோ, அமிர்தானந்தமயியாகவோ, க்ரேக்க தேவதை ஹீராவாகவோ ( HERA)  நினைத்துக் கொள்வதுண்டு.என் தந்தை தாய்க்கும் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் தோழி. அப்புறம் முகநூல் நட்பு வட்டத்தில் அனைவருக்கும் பாசக்கார அக்கா.& மதிப்பிற்குரிய தோழி.

2.
பள்ளியும் ஆசிரியர்களும் . பள்ளி போதித்தது