எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 மே, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், கேஜிஜியின் காரணப்பெயர்/பெயர்க்காரணம். :)

வலையுலகில் மதிப்பிற்குரிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் கேஜிஜி  எனப்படும் K G GOWTHAMAN கேஜி கௌதமன் சார். இவரும் ஸ்ரீராமும் (இன்னும் சில நண்பர்களும் என நினைக்கிறேன்) இணைந்து  எங்கள் ப்லாக் என்னும் வலைப்பதிவில்  சிறப்பான பதிவுகள் போட்டு வருகிறார்கள். அதில் பாசிட்டிவ் பதிவுகளையும் புகைப்படப் பதிவுகளையும் அவ்வப்போது படித்து வருவேன். என் வலைப்பதிவிலும் இவர்கள் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வருகிறார்கள். ( என் இன்றைய நிலைக்கு வலைப்பதிவர் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும்  இருக்கிறது . அதற்கு நன்றிகள் )

வலைத்தளத்தில் கேஜி கௌதமன் சாரின் முழுப்பெயர் சட்டென்று கண்ணில் படவில்லை. ஆனால் முகநூலில் இவர் பெயரைப் பார்த்தவுடன் பரிச்சயம் ஆனதாகத் தெரிந்ததும் நட்பு அழைப்பு விடுத்தேன். அட நம்ம கௌதமன் சார் இவங்க என்று தெரிந்தது. தன் குழந்தைகள்/ பேரப்பிள்ளைகள் பேரை இப்பவெல்லாம் ரெண்டு எழுத்துக்கு மேல வைக்கிறதில்லை மக்கள். அதுவும் AA என்று இரண்டு ஏ வரும்படி ஆதித்யா, ஆருஷ், ஆரத்தி, ஆதி என்று வைக்கிறார்கள். இதுல கல்யாணமகாதேவி கோபால கௌதமன்னு சார் முகநூலில் பேர் வைச்சு இருக்காங்களே அதுக்கு என்ன காரணமாக இருக்கும். ஒரு வேளை அம்மா அப்பா பேரையும் சேர்த்து வைச்சிருப்பாங்களோ ஸ்கூல்ல எல்லாம் எப்பிடி கூப்பிட்டு இருப்பாங்கன்னு ஒரே யோசனை

புதன், 28 மே, 2014

கனக்கும் இறக்கைகள்.

பறந்து பறந்து
களைத்து வந்தமர்கிறது
ஒரு பறவை.
இளைப்பாறுதல் தந்த கிளையில்
ஒட்டிக் கொள்கின்றன கால்கள்.
இருப்பிடம் கிடைத்த இன்பத்தில்
சோர்ந்திருக்கின்றன இறகுகள்.
வேண்டும்போதெல்லாம்
கனிகள் கிடைக்கின்றன வாய்க்கருகில்.
கிறங்கிக் கிடந்த ஒரு கணத்தில்
யோசிக்கத்துவங்குகிறது பறவை,

செவ்வாய், 27 மே, 2014

அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் நண்பர் திரு KT. இளங்கோ.

இளங்கோ சாரைப் பற்றிய அறிமுகம்
என்னுடைய முகநூல் நண்பர்களில் குறிப்பிடத் தகுந்தவர் திரு இளங்கோ அவர்கள். அவர் மட்டுமல்ல அவரது மனைவி திருமதி பத்மா கூட என் அன்பிற்குரிய தோழி.

என்னுடைய சாதனை அரசிகள் நூல் வெளியீட்டு விழாவுக்கு தம்பதியராய் வந்து சிறப்பித்தார்கள். அடுத்து வெளியான என் “ங்கா” கவிதைகளை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வந்து வாங்கி அதற்கு விமர்சனமும் எழுதி அனுப்பினார்கள்.

திங்கள், 26 மே, 2014

அப்பத்தா.



அப்பத்தா:-
*******************
அவளுக்குக் கோபமாய் வந்தது. ரொம்பக் கோபம். நேத்துவரை சிட்டி வெளையாடுறதுக்காக அவள் வீட்டுக்கு வந்து ஓடிக் கொண்டிருந்த அந்த வள்ளிக் குட்டி இன்னைக்கு சன்னல் வழியாக இவள் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமல் சென்றது. ‘சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பி வரும்ல.. அப்பப் பார்த்துக்கலாம்.’.

இவள் திரும்பி வந்து அப்பத்தாவின் தலை மாட்டில் நின்று எக்கிப் பார்த்தாள். ஆயா வீட்டிலிருந்து அப்போதான் அப்பத்தா வீட்டிற்கு வந்திருந்தாள். அப்பத்தா மேல் அவ்வளவு பிரியம் என்றோ வெறுப்பு என்றோ சொல்வதற்கில்லை. இருந்தாலும் அவளுக்கு அப்பத்தாளைப் பிடிக்கும்.