எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 பிப்ரவரி, 2013

தகுதியுள்ளது..

எங்கோ ஒரு சிறுமி
மறைமுக பாலியல்
துன்பியலில் பயந்து
நடுங்கிக் கிடக்கிறாள்.

நெடுஞ்சாலை ஓர
குத்துப் புதருக்குள்
காதலனை சந்திக்க
சென்றவளின் பிணம்.

மிதவாதியா அல்லவா
பிரிக்கத் தெரியாமல்
சூலுற்றவளுக்கு
சிறையில் பிரசவம்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

ஷாம்பூ

”மம்மி.. ஷாம்பூ போடுங்க.. சீயக்கா வேணாம். கண் எரியும்.” சிணுங்கினாள் மீத்து.

”அம்மம்மாகிட்ட கேளு.சீயக்காய்தான் நல்லது. “ அம்மா ரேச்சல்.

“ஷாம்பூவே போடு. அதென்ன அம்மம்மாகிட்ட கேக்கிறது..” தன் அதிகாரத்தை நிலைநாட்டியபடி நகர்ந்தாள் மீத்துவின் தாதி ப்ரேம்.

டில்லிக்கு வேலை நிமித்தம் வந்தபோது பஞ்சாபின் திலீப் சர்மாவை காதல் மணம் செய்தவள் கேரள ரேச்சல்.

கேரளாவின் சிவப்பரிசிச் சோறு., குழாய்ப்புட்டு., கடலைக்குழம்பு., சாப்பிட்டு வளர்ந்த ரேச்சல் மாமியாருக்காக ரோட்டி., காலிதால் மாக்னி., பஞ்சாபி பனீர்., ஆலு கோபி., கோப்தா க்ரேவி., கடி., என உணவையும் மாற்றிக் கொண்டாள். தேங்காய் எண்ணெய், சீயக்காய் குளியல்தான் மாற்ற முடியவில்லை அவளால்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை


மனைவி சொல்லே மந்திரம்னு சிலர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவங்களுக்கும் மேனேஜ்மெண்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என சிலர் கேட்கலாம். வீட்டை பொறுப்பா நிர்வகிக்கிற தன்னோட மனைவிகிட்ட இருந்து தன் அலுவலக மேலாண்மை நிர்வாகத்தைக் கத்துக்கலாம்னு சொல்றார் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஷாரு ரெங்கனேகர். தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்தவர் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

லங்காதீபம் ( கவியருவி) விருது.

திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இலங்கையில் செயல்படும் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் இவர். இதன் சார்பாக இதன் தகவல் பிரிவின் செயலாளர் ரமலான் தீன் அனுப்பிய அழைப்பு இது. மிகச் சிறப்பான இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி ரமலான் & கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மேடம்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

நெருஞ்சி. கவிதைத் தொகுதி எனது பார்வையில்


நெருஞ்சி

புதுக்கவிதையில் சமுதாய சிந்தனைகளைத் தூண்டிய தொகுப்புநெருஞ்சி”. இதன் ஆசிரியர் கால காலன். எல்லாந்தந்த தாய்க்கும் தந்தைக்கும் படைத்திருக்கும் இவர் தனது சொந்தப் பதிப்பகத்திலேயே இதை வெளியிட்டிருக்கிறார். விலை ரூ 75.

75
கவிதை கொண்ட இந்த கவிதைத் தொகுப்பு சமுதாயத்தின் அவலங்களைச் சுட்டி நெருஞ்சி முள்ளாய்த் தைக்கிறது. இதன் முன்னுரையில் கவிப்பேரரசு வைரமுத்து இதைக் குறிஞ்சிப் பூக்கள் எனக் குறிப்பிட்டது தகுமே.. ஏனெனில் சமுதாய நோக்கோடு படைக்கப்படும் கவிதைகள் அரிதான காலகட்டத்தில் இந்தத் தொகுப்பு நம் வாழ்வியல், அரசியல், நடப்பியல், சூழலியல் குறித்த கேள்விகளைக் கேட்டபடி செல்கிறது.