எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 நவம்பர், 2011

வேரோடிக் கிடந்தவை.

மக்கிப்போன ஒரு
சினிமா ஸ்டூடியோ
அதிபரின் விசிட்டிங் கார்டு...
வியாபாரம் படுத்த ஒரு
வெளிநாட்டுத் தந்திக் காயிதம்...
நட்டமாய்ப் போன
பங்குச் சந்தை பத்திரங்கள்...
எந்தக் காலப் பிரபலங்களோ
கறுப்பு வெள்ளையில் கூட்டமாய்...

செவ்வாய், 29 நவம்பர், 2011

டாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போராடி ஜெயித்த பெண்கள்)

ஒரு பெண் படித்திருந்தால் எத்தனை டிகிரி வாங்கி இருக்கலாம். ஒன்று., அல்லது இரண்டு., அதிகபட்சம் மூன்று முதல் ஐந்து வரை இருக்கலாம்.. ஆனால் கன்யாகுமரி கரும்பாட்டூரைச் சேர்ந்த ஆஸ்வின் ஸ்டான்லி கிட்டத்தட்ட 9 டிகிரிகள் படித்திருக்கிறார்.. டாக்டராக ஆசைப்பட்டு ப்ளஸ்டூவில் சரியாக செய்யாததால் டாக்டர் படிக்க முடியாமல் இருந்தும் பி ஹெச்டி படித்து டாக்டராகி சாதனை நிகழ்த்தியுள்ளார்..

அப்பா ஸ்டான்லி சுபமணி., அம்மா அமலா பேபி., ஒரு தங்கை ஒரு தம்பி எனக் கொண்ட இவர் குடும்பம் மிகுந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவக் குடும்பம். இரவில் பைபிள் படித்து கூட்டு ஜெபம் செய்துதான் தூங்கச் செல்வார்கள். அப்பா தற்போது இல்லை. அவர் பிஸிகல் எஜுகேஷன் டீச்சராக இருந்தார். அம்மா . தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அக்கவுண்டன் சுப்பரிண்டெண்ட் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மத நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பம் என்பதால் சினிமா ட்ராமா ஒன்றும் செல்வது கிடையாது.கதை புத்தகம் கூட படிப்பது கிடையாது. ஸ்ட்ரிக்ட் ரிலிஜியஸ் குடும்பம்.

சனி, 26 நவம்பர், 2011

பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..


பல நேரங்களில் பல மனிதர்கள்

எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் . நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்ன சாமி ஐயர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி. தெரியாத இன்னொரு விபரம் பேரறிஞர் அண்ணா., மற்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோர் இவருடைய நண்பர்கள் என்பது. இரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

சிரசாமிர்தம்...

சிரசாமிர்தம் வேண்டி
மந்தாரமலை பிடித்து

ஆதிஷேஷன்.,
வாசுகி தேடி..

கார்கோடகன்
காளிங்கன் தீண்டி

பதஞ்சலியைச்
சரணடைந்தேன்

வியாழன், 24 நவம்பர், 2011

சாயல்கள்...



ஒன்பதினாயிரம் நாட்கள்
கடந்திருக்கும்..
அவளுக்கும் அவருக்குமான உறவில்..

முதல் சந்திப்பிலேயே
அவர் முழுமையாய்
அங்கீகரித்துக் கொள்ள..
அவளுக்கு சில கேள்விகளும்
ஆசைகளும் மிச்சமிருந்தன..