எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மார்ச், 2021

வாடிகன் சர்ச்சில் புனிதக் கதவும் புனிதர்களின் சலவைக்கல்/கிரானைட் சிற்பங்களும்.

 வாடிகன் நகரம். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனித திருச்சபை அமைந்த இடம். இத்தாலியின் ரோம் நகரத்தில் செயிண்ட் பீட்டர்ஸ் பேசிலிக்கா என்ற சர்ச் அமைந்த இடம். ஹோலி சீ என்ற இந்த இடம் பிஷப்பின் ஆட்சிக்கு உட்பட்ட தனி நாடு. குட்டி தேசம். 

இஸ்லாம் மக்களுக்கு மெக்கா போல் கிறிஸ்தவ மக்களுக்கு இது புனித ஸ்தலம். தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கே வந்து செல்ல வேண்டுமென்பது அவர்களின் ஆசையாக இருக்கும். 

செயிண்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இது( 120 ஆண்டுகளுக்குமேல் உருவாக்கப்பட்டு) பதினாறாம் நூற்றாண்டில் ( 18 நவம்பர் 1626 ) கட்டமைக்கப்பட்டது. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கால ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் அழகூட்டப்பட்டது இது. 

இங்கே பியட்டா என்ற மேரி மாதா மடியில் ஏசுவைத் தாங்கி இருக்கும் ( துயரச்) சிலை காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்கள், மார்பிள் சிற்பங்களையும் கண்டு பிரமித்தேன். 

இங்கே பைபிளின் பல்வேறு நிகழ்ச்சிகளோடு அப்போஸ்தலர்கள், போப்பாண்டவர்கள் ஆகியோரும் பளிங்குச் சிற்பமாகக் காட்சி அளிக்கிறார்கள். 

ஞாயிறு, 28 மார்ச், 2021

நமது செட்டிநாட்டிலும் பண்ணாகத்திலும் ”பெண்ணின் மரபு”.

 எனது பதினாலாவது நூலான பெண்ணின் மரபு இந்த ( 2021) வருடம் மார்ச் 8 ஆம் தேதி மதுரையில் உள்ள தானம் களஞ்சியம் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. 




அந்த நூல் வெளியீடு பற்றிய சிறப்புச் செய்திகளைப் “பண்ணாகம்.காம்” இணையமும் நமது செட்டிநாடு 2021 மார்ச்/பங்குனி இதழும் வெளியிட்டு உள்ளன. 

வெள்ளி, 26 மார்ச், 2021

அழகப்பா பல்கலையில் சிறப்பு விருந்தினராக.

 அழகப்பா பல்கலையில் டிசம்பர் 6 , 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் திரு. அய்க்கண், திரு. பழனி இராகுலதாசன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது. 


புதன், 24 மார்ச், 2021

சக்கர வியூகத்தை உடைத்த அபிமன்யு.

சக்கரவியூகத்தை உடைத்த அபிமன்யு

பதினாறு வயதே நிரம்பிய ஒரு இளைஞன் குருஷேத்திரப் போரில் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன், துரியோதனன் ஆகியோரைத் தன் வில்லாற்றலால் கதி கலங்க அடித்தான். யார் அந்த வீரன், அவன் பலம் என்ன பலவீனம் என்ன எனப் பார்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரை. அவளை பஞ்சபாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனன் மணந்து கொண்டார். சுபத்ரையின் வயிற்றில் அபிமன்யு கருவாக இருந்த போது சக்கரவியூகம் பற்றி சுபத்ரையிடம் பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். பாதிகேட்டுக் கொண்டிருக்கும்போதே சுபத்திரைக்கு உறக்கம் வந்துவிட சக்கரவியூகம் என்றால் என்ன அதில் எப்படி நுழைவது எனச் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணர் பாதியிலே நிறுத்தி விட்டார். சுபத்திரை இக்கதையைக் கேட்டாளோ இல்லையோ அவள் கர்ப்ப்பத்தில் இருந்த அபிமன்யூ நன்றாகக் கேட்டுக் கொண்டான்.
அன்பும் அழகும் அறிவும் பொருந்திய அப்பாலகனின் துவாரகையில் வளர்ந்து வந்தான். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் வில் வாள் வித்தைகள் எல்லாம் கற்றுத் தேறினான். கிருஷ்ணரின் மகன் ப்ரத்யும்னனும் அவனுக்கு வித்தைகள் எல்லாம் கற்பிக்கின்றான்.

சனி, 20 மார்ச், 2021

எனது பதிநான்காவது நூல் “பெண்ணின் மரபு “

 எனது பதிநான்காவது நூல் “ பெண்ணின் மரபு” நமது மண்வாசத்தின் தானம் களஞ்சியம் அறக்கட்டளையால் 2021 மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று  மதுரையில் வெளியிடப்பட்டது. 




“சமூக மீள்திறனில் பெண்களின் தலைமை “ என்பதுதான் இந்த ஆண்டு பெண்கள் தினத்துக்கான கரு. 

Related Posts Plugin for WordPress, Blogger...