எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 அக்டோபர், 2019

அன்பாலே ஆண்டவனைக் கட்டிய பூசலார். தினமலர் சிறுவர்மலர் - 36.

அன்பாலே ஆண்டவனைக் கட்டிய பூசலார்.
ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய உதவி செய்தவர்களை நினைத்து ”உங்களுக்கு மனசுக்குள்ள கோயில் கட்டிக் கும்பிடுறேன்” என்று புகழாரமாகச் சொல்வார்கள். நிஜமாகவே மனசுக்குள் கோவில் கட்டினார் ஒருவர். அதுவும் மாபெரும் ராஜா ஒருத்தர் கஷ்டப்பட்டுக் கட்டின நிஜக்கோயிலுக்குக் கூடப் போகாமல் அன்பாலே அமைந்த இந்த ஆலயத்துலதான் முதல்ல எழுந்தருள்வேன். ராஜாவே கட்டினதா இருந்தாலும் எல்லாம் அடுத்தபடிதான்னு சிவனே கனவுல சொன்னாராம். அது என்னன்னு பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
காஞ்சி மாநகரம். கைலாசநாதருக்காகக் கற்றளியில் மாபெரும் கோவில் அமைத்துக் கொண்டிருந்தான் மன்னன் காடவர்கோன். பார்ப்பவர் அனைவரும் வியக்கும் வண்ணம் மாபெரும் யாளிகளும் சிம்மங்களும் நந்திகளும், யானைகளும் கொண்டதாக உருப்பெற்றுக் கொண்டிருந்தது அந்தக் கோவில். அதன் கொடுங்கைகள் எல்லாம் கல்லாலே அமைக்கப்பட்டு பார்ப்பவர்க்கு அதுதான் உண்மையான கைலாயமோ என்று மயக்கம் ஏற்படும் அளவுக்கு இருந்தது.
அதே சமயம் தொண்டை நாட்டில் திருநின்றவூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பூசலார் என்ற எளியவர் இறைவனுக்குக் கோயில் கட்ட விரும்பினார். ஆனால் அவரிடம் அதற்கேற்ற பொருள் வசதி இல்லை.  ஆனால் மனதிலேயே கோவிலுக்குத் தேவையான கற்கள், மரம் ஆகியன இருப்பதாக எண்ணி பூமி பூஜை செய்து திருக்கோயில் கட்டும் பணியை ஆரம்பித்தார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

சிறுபிழையும் பொறுக்காத எறிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 35.

சிறுபிழையும் பொறுக்காத எறிபத்தர்
ஒருவர் சிறுபிழை செய்தாலும் பொறுக்காமல் தான் ஏந்திய மழு என்ற ஆயுதத்தால் தண்டித்து விடுவார் எறிபத்தர் என்பார். அதுவும் அவர் உயிராய்க் கருதும் சிவனடியார்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுப்பாரா. தன் பரசு என்னும் ஆயுதத்தைக் கொண்டு அவர்களை தண்டித்தார் ஆயினும் அவர் சிவகணங்களின் தலைவராய் உயர்ந்தார் அது எப்படி எனப் பார்ப்போம் குழந்தைகளே.
கொங்குநாட்டில் கருவூர் என்ற ஊரில் மாசி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர் எறிபத்தர். இவர் அன்பும் பண்பும் ஒருங்கே கொண்டவராயினும் சிவபக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுக்க மாட்டார். அப்படி இடையூறு செய்தவர்களை தன் மழுப்படையால் தண்டித்து விடுவார். அவ்வளவு கோபக்காரர்.
ஒருமுறை சிவகாமியாண்டார் என்பார் சிவனுக்கு சார்த்த அதிகாலையில் எழுந்து தூய நறுமணமிக்க மலர்களைக் கொய்து தனது பூக்குடலையில் எடுத்துத் தலையில் சுமந்து கொண்டு திருக்கோயில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அந்த அதிகாலையில் அலங்காரமாக நகர் உலா வந்து கொண்டிருந்தது புகழ்ச்சோழர் என்ற அரசரின் பட்டத்து யானை. கூடவே நான்கு பக்கமும் நான்கு பாகர்களும் யானையின் மேல் அமர்ந்து அங்குசத்தால் குத்தியபடி ஒருபாகனுமாக மொத்தம் ஐந்துபாகன்கள் சூழ அது நடந்து சென்று கொண்டிருந்தது.

வியாழன், 3 அக்டோபர், 2019

டைகர் & டர்ட்டில் மாஜிக் மவுண்டன். TIGER & TURTLE MAGIC MOUNTAIN.

இரும்பு அதிகமாகக் கிடைப்பதால் ஜெர்மனியில் இரும்பிலான சிலைகள் நினைவுச் சின்னங்கள், கலைச் சின்னங்களாக இங்கே நிறுவப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் டைகர் டர்ட்டில் மாஜிக் மவுண்டன் என்பது. இதை அடையும் வழியே மிகப் பெரிய மாஜிக்தான். கிட்டே சென்று சேரும் வரை அது ஒரு மலை என்றோ அதன் மேல் இவ்வாறான மல்டிபிள் ஸ்டேர்கேஸ்  அமைப்பு இருக்கும் என்றோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

மாலை வேளைகளில் இங்கே நடைப்பயிற்சியாகவும் சைக்கிள் ஓட்டியும் வருகிறார்கள் மக்கள். செங்குத்தான (நெட்டுக்குத்தான ) ஏற்ற இறக்கங்கள் கொண்ட குறுகலான, முள் செடிகள் நிறைந்த பாதையில் சில இளையவர்கள் சென்றுவிட நாமோ விழி பிதுங்கி சுற்றிச் சுற்றி வந்து ரோட்டுப் பாதையில் மேலேறி வந்தோம்.

வந்தால் கண்ணைக் கட்டும் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம்.. இது வடமேற்கு ஜெர்மனியின் பதினைந்தாவது பெரிய நகரமான டூயிஸ்பர்க்கில் இருக்கிறது. ஆங்கர்பர்க் என்னுமிடத்தில் குட்டிக் குன்று இருக்க அதன் மேல் கால்வனைசேஷன் ஸ்டீல் எனப்படும் எஃகிரும்புடன் துத்தநாக கோட்டிங் கலவை கொண்டு தயாரிக்கப்படுவது.

2011 இல் கட்டப்பட்ட இது இருபத்தியொரு மீட்டர் உயரம் கொண்டது. இதை அமைக்க இரண்டு மில்லியன் யூரோ செலவாயிற்றாம். ( ஒரு யூரோ = 72/ ரூ )  . இதை வடிவமைத்தவர்கள் உல்ரிச் கெந்த் & ஹெய்க் மத்தர். (ULRICH GENTH & HEIKE MUTTER )



புதன், 2 அக்டோபர், 2019

முடிவல்ல .. ஆரம்பம் – ஒரு பார்வை.


முடிவல்ல .. ஆரம்பம் – ஒரு பார்வை.



வாசகசாலை: காரைக்குடி இலக்கிய சந்திப்பு கலந்துரையாடலில் எனது சிறுகதை.

#வாசகசாலை வழங்கும் "காரைக்குடி இலக்கியச் சந்திப்பு" மாதாந்திரத் தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகளில், இன்று காலை நடைபெறவுள்ள பதினொன்றாவது நிகழ்விற்கான அழைப்பிதழை உங்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இந்தமுறை நிகழ்வில் உரையாட உள்ள கதைகளுக்கான சுட்டிகள்:
தேனம்மை லெக்ஷ்மணனின் "சுப் சிப் ஆனந்தம்":
http://www.vasagasalai.com/sup-chip-anandham
சுரேஷ் பிரதீப்பின் "446 A":
http://vallinam.com.my/version2/?p=5224
ஈவண்ட் லிங்க்:
வாய்ப்புள்ள காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. மகிழ்ச்சி..!


காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளேன். நன்றி கற்பகவள்ளி, வாசகசாலை, இளமதி. ஆங்கிலக் கலப்பு அதிகம் இருப்பதால் அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்திய வினைதீர்த்தான் அண்ணன் அவர்கட்கு நன்றி.

நான் பெங்களூரில் இருப்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் உண்டு.


Related Posts Plugin for WordPress, Blogger...