எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
TIGER TURTLE MAGIC MOUNTAIN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TIGER TURTLE MAGIC MOUNTAIN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 அக்டோபர், 2019

டைகர் & டர்ட்டில் மாஜிக் மவுண்டன். TIGER & TURTLE MAGIC MOUNTAIN.

இரும்பு அதிகமாகக் கிடைப்பதால் ஜெர்மனியில் இரும்பிலான சிலைகள் நினைவுச் சின்னங்கள், கலைச் சின்னங்களாக இங்கே நிறுவப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் டைகர் டர்ட்டில் மாஜிக் மவுண்டன் என்பது. இதை அடையும் வழியே மிகப் பெரிய மாஜிக்தான். கிட்டே சென்று சேரும் வரை அது ஒரு மலை என்றோ அதன் மேல் இவ்வாறான மல்டிபிள் ஸ்டேர்கேஸ்  அமைப்பு இருக்கும் என்றோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

மாலை வேளைகளில் இங்கே நடைப்பயிற்சியாகவும் சைக்கிள் ஓட்டியும் வருகிறார்கள் மக்கள். செங்குத்தான (நெட்டுக்குத்தான ) ஏற்ற இறக்கங்கள் கொண்ட குறுகலான, முள் செடிகள் நிறைந்த பாதையில் சில இளையவர்கள் சென்றுவிட நாமோ விழி பிதுங்கி சுற்றிச் சுற்றி வந்து ரோட்டுப் பாதையில் மேலேறி வந்தோம்.

வந்தால் கண்ணைக் கட்டும் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம்.. இது வடமேற்கு ஜெர்மனியின் பதினைந்தாவது பெரிய நகரமான டூயிஸ்பர்க்கில் இருக்கிறது. ஆங்கர்பர்க் என்னுமிடத்தில் குட்டிக் குன்று இருக்க அதன் மேல் கால்வனைசேஷன் ஸ்டீல் எனப்படும் எஃகிரும்புடன் துத்தநாக கோட்டிங் கலவை கொண்டு தயாரிக்கப்படுவது.

2011 இல் கட்டப்பட்ட இது இருபத்தியொரு மீட்டர் உயரம் கொண்டது. இதை அமைக்க இரண்டு மில்லியன் யூரோ செலவாயிற்றாம். ( ஒரு யூரோ = 72/ ரூ )  . இதை வடிவமைத்தவர்கள் உல்ரிச் கெந்த் & ஹெய்க் மத்தர். (ULRICH GENTH & HEIKE MUTTER )