எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஏப்ரல், 2015

அமெரிக்கத் “தென்றலில் “ எங்கள் அம்மாவுடன் நாங்களும்.

அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து வெளிவரும் தென்றல் பத்ரிக்கையில் ( மார்ச் 2015 இதழில்)  எங்கள் சுசீலாம்மா பற்றி  மிக அழகாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் திரு அரவிந்தன் அவர்கள். அம்மாவைப் பற்றிய முழுமையான தொகுப்பாகவே இதைக் கொள்ளலாம்.

திரு அரவிந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். அம்மாவைப் பற்றி அறியாதவர்கள் இலர். அவர்களின் மாணவிகளாய் இருந்த பாக்கியத்தாலேயே என்னைப் பற்றியும் உமா மகேஸ் பற்றியும் நாங்கள் அவருக்கு ( சுசீலாம்மாவுக்கு ) எங்கள் புத்தகத்தை சமர்ப்பணம் செய்தது குறித்தும் எழுதி இருக்கிறார் திரு அரவிந்தன்.

சனி, 4 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட், திருக்குறள் ஸ்பெஷல் திண்டுக்கல் தனபாலன்

எனது மதிப்பிற்குரிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன் கடந்த சில வருடங்களாக வலையுலகில் எழுதி வருகிறார். தனது வலைப்பூவில் மட்டுமல்ல., மற்றவர்களின் வலைப்பூவிலும் அநேகமான பின்னூட்டங்கள் கொடுத்திருப்பார். வேகமாகப் படித்துவிட்டு நான் உட்பட பலர் கடந்து விடுவோம் பல வலைப்பூக்களை. ஆனால் தகுந்த பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிப்பதில், உற்சாகப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. பின்னூட்டங்களில் டிடி என்று பலர் அழைப்பார்கள். நான் தனபாலன் சகோ என்று விளித்திருப்பேன்.

வியாழன், 2 ஏப்ரல், 2015

செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

வளவு- பட்டாலைக்கு அடுத்து வளைவாய் வரும் பத்திகள்.. இது பட்டாலையையும் கீழ் வாசலையும் ( முற்றம் ) இணைக்கும் பகுதி.

மைக்கும் நானும்.

முகநூலில் மைக்குடன் ப்ரொஃபைல் பிக்சர் போட்டபோது வல்லிம்மா தன்னுடைய போஸ்ட் ஒன்றில் ஒரு  ஹேண்ட் ஷவர் சாய்ந்திருப்பது போலப் போட்டு இதப் பார்த்தா என்ன தோணுதுன்னு கேட்டிருந்தாங்க.

அப்போ நான் சொன்னேன் அம்மா எனக்கு அதைப் பார்த்தா மைக் ஞாபகம் வருது. அப்பிடின்னு சொல்லி அவங்களுக்குப் பிடித்த ( அப்பிடின்னு நான் நினைச்ச :) ) ஃப்ராங்க் சினாட்ராவின் ப்ளூ ஸ்கைஸ் சாங்கை ஷேர் செய்திருந்தேன். அதுக்கு அவங்க சொன்னாங்க. தேன் நானும் மைக் மோஹினி ஆகட்டுமான்னு.

ஸோ அந்த வார்த்தை ரொம்பப் பிடிச்சதால இந்த மைக் மோஹினி இடுகை. ( எதைப் பார்த்தாலும் கேட்டாலும் இடுகை இடுகைன்னு இடுகை போடத் தோணுதே இது இடுகையோமேனியாவா :)

சரி ரைட்டு படத்தைப் போடுறேன் :)

இது சுய உதவிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் குறித்துப் பேசியபோது முதன் முதலாக கல்லூரிப் பருவத்துக்குப்பின் பல ஆண்டுகள் கழித்து மைக்கைத் தொட்டது.

1.லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் சுய உதவிக் குழு மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள். (2010)