எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
DINDIGUL DHANABALAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DINDIGUL DHANABALAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட், திருக்குறள் ஸ்பெஷல் திண்டுக்கல் தனபாலன்

எனது மதிப்பிற்குரிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன் கடந்த சில வருடங்களாக வலையுலகில் எழுதி வருகிறார். தனது வலைப்பூவில் மட்டுமல்ல., மற்றவர்களின் வலைப்பூவிலும் அநேகமான பின்னூட்டங்கள் கொடுத்திருப்பார். வேகமாகப் படித்துவிட்டு நான் உட்பட பலர் கடந்து விடுவோம் பல வலைப்பூக்களை. ஆனால் தகுந்த பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிப்பதில், உற்சாகப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. பின்னூட்டங்களில் டிடி என்று பலர் அழைப்பார்கள். நான் தனபாலன் சகோ என்று விளித்திருப்பேன்.