எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வித்யாசமானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வித்யாசமானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 ஜூலை, 2014

அந்த இரவின் தென்றல் இனிமை.



அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. அவளைப் போல் அந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும். 


அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.  அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக் காற்றில் நடக்க வேண்டுமென்றுதான். ஜீரணமாக வேண்டுமல்லவா.

விளக்குக் கம்பத்தின் அருகில் வந்தாயிற்று. அதுவரையில்  அவளைக் காணாமல் புருபுருத்துக் கொண்டிருந்த அவளுடைய சின்னப் புளியமரம் வா வா என்று இரைச்சலிட்டது.

காற்று கனவேகமாய் வீசித் தழுவியது. புளியம்பிஞ்சின் மணம், வயலில் நடந்த கதிர் அறுப்புக்குப் பின் உள்ள ஒரு மண் மணம், மழை எங்கோ தூறியதால் காற்றில் பரவிக் கிடக்கும் ஈரமண் வாசம் எல்லாம் நெஞ்சை வயிற்றை மூளையை கழுத்தை மூக்கை கண்ணை வாயை நிறைத்துக் கொண்டது. மூச்சை நன்றாக இழுத்தாள் . என்ன ! மணம் என்ன மணம். ! அப்பப்பா.. இதுதான் சொர்க்கம், மெல்லிசுச் சட்டையிலும் தாவணியிலும் லேசாகப் பொறித்திருந்த வியர்வைப் பொடிகளை காற்று புகுந்து சுத்தமாகத் துடைத்துவிட்டுப் போயிற்று.