எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ரோஷிணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோஷிணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 அக்டோபர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், ரோஷிணியின் கோடரிக்காரன் கதை.


டெல்லியில் வசிக்கும் வலைப்பதிவர், நண்பர்,  சகோ வெங்கட் நாகராஜ் வெளிச்சக் கீற்றுகள், வெங்கட் நாகராஜ், நான் ரசித்த பாடல்கள் என்று மூன்று வலைத்தளங்கள் வைத்திருக்கிறார். அவரும் அவரின் மனைவி ஆதி வெங்கட்டும் என்னுடைய வலைத்தளத்தை வாசித்து அடிக்கடி பின்னூட்டமிடுவார்கள்.

இவருடைய இடுகைகளில் வைஷ்ணோ தேவி பற்றிய இடுகை ரொம்பப் பிடித்தது . ஏனெனில் நாங்கள் சென்று வந்தபோது அதிகம் ஃபோட்டோக்கள் எடுக்கவில்லை. மேலும் அருமையான புகைப்படங்களைப் பகிர்ந்து அதற்குத் தக்க கமெண்ட்ஸ் போடுவார் ஒவ்வொன்றும் அற்புதமாக இருக்கும்

ஒரு முறை தன்னுடைய பெண்ணின் விநாயகர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தார். பார்த்தால் ரொம்பவே நல்லா இருந்தது.கண்ணால் பார்ப்பதைக் கையால் செய்துவிடுவாள் என்று காரைக்குடிப்பக்கம் சமத்தான பெண் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். ரோஷிணியும் விநாயரைப் பார்த்து தத்ரூபமாக வரைந்திருந்தாள்.  மேலும் இரு படங்களிலேயே நமக்கெல்லாம் தெரிந்த கோடரிக்காரன் கதையைச் சொல்லி இருந்தாள். அது ஆச்சர்யமாக இருந்தது. அதனால் அவரிடம் ரோஷிணியில் ஒவியத் திறமை பற்றிக்கேட்டேன்.

/// வெங்கட் சகோ ரோஷிணியின் ஓவியத் திறமையை எப்போது கண்டுபிடித்தீர்கள். அவளுக்கு எவற்றை வரைவதில் விருப்பம் அதிகம். ? சில ஸ்பெஷல் ஓவியங்களையும் அவள் திறமையையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ///


எனது மகள் ரோஷ்ணிக்கு மூன்று வயதிருக்கலாம் – அப்போது அவள் பென்சில் பிடித்து அவளுக்கு தோன்றிய மாதிரி எதையாவது வரையத் துவங்கினாள். Pre-KG வகுப்புகளில் சேர்ந்த பிறகு வண்ணம் தீட்டுவதில் விருப்பம் – ஆரம்பத்தில் சில மனிதர்களின் தலைமுடிக்கு ஆரஞ்சு, பச்சை என்று வித்தியாசமாக வண்ணம் தீட்டுவாள்!! – ஒரு வேளை தில்லியில் பல இளைஞர்கள்/யுவதிகள் தங்களது தலைமுடிக்கு வித்தியாசமான வண்ணங்களை பூசிக்கொள்வதைப் பார்த்த விளைவாக இருக்கலாம்!