பத்மயக்ஞம்
:-
“என்னை ஏன் படைத்தாய் ?” ஒன்றல்ல இரண்டு பெண்கள் கேள்விக்கணைகளோடு கண்கசிய நின்றிருந்தார்கள் பிரம்மனின் முன். ரூப தீர்த்தத்தில் நீராடிய ஒருத்தியும் நாக குண்ட் இல் நீராடிய ஒருத்தியும் கூந்தல் நீர் சொட்ட கைகூப்பி நிற்க, தலையைப் பாரமாக்கிய க்ரீடத்தைக் கழட்டி வைத்துவிடலாமா என்று யோசித்தபடி நாலாபுறமும் பார்த்தார் நான்முகன்.
”ஏன். ஏன்?” என்று எத்தனை கேள்விக்கணைகள் அவர்முன். ’என்னை ஏன் படைத்தாய்’ என்று நித்தம் நித்தம் எத்தனை கோபாக்கினிகள் ?. அவருக்கு மட்டும் பதில் தெரியுமா என்ன. கைக்கு வந்ததை உருவாக்கி உலவவிடுதலே பணி. கிடைத்த மண்ணில் வனைந்த பாண்டம். கண்மூடி மௌனித்தார் இதைக் கேட்கவேண்டியே டெல்லியிலிருந்து ஒருத்தியும் சிதம்பரத்திலிருந்து ஒருத்தியும் புஷ்கருக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.
”பிதுர்வரம்.” என்ற வார்த்தைகள் உதிர்ந்தன அவர் வாயிலிருந்து. பிரம்மனா பேசினார் ?. ’என்னது, பிதுர்வரமா ?’ சன்னதியில் எதிரெதிரே நின்றிருந்த இருவரும் உடல் சிலிர்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன அழகு எத்தனை அழகு கோடிமலர் கொட்டிய அழகு என்றிருந்த நீரஜாவைப் பார்த்த கணத்தில் பத்மாவதியின் புத்தி பேதலித்தது. பிள்ளைகுட்டிகள் நட்சத்திரங்களாய்ச் சூழ பூரணநிலவைப் போலிருந்த பத்மாவதியின் களை நீரஜாவை வைத்தகண் மாறாமல் பார்க்கச் செய்தது.
வெள்ளிக் காசுகளை வெள்ளிக் கூர்மத்தின் மேல் பதித்துக் கொண்டிருந்தார்கள் பத்மாவதியின் பிள்ளைகளும் மருமக்களும். நாற்பத்தி மூன்று வயது பத்மாவதிக்குப் பதினெட்டிலேயே ராஜகோபாலுடன் திருமணமாகிப் பத்தொன்பதில் பெண்ணும் இருபது வயதில் பிள்ளையும் பிறந்திருந்தார்கள். அவளது நாற்பதாவது வயதில் பெண்ணுக்குத் திருமணமாகி நாற்பத்தி ஒன்றில் பேத்தியும் பிறந்துவிட்டாள். இரண்டு வயது அபியும் அம்மா அப்பாவோடு தொத்திக்கொண்டு காசு பதித்து சந்தோஷத்தில் கைதட்டியது.
பாட்டியைப் பார்த்து ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட அபியை அணைத்த பத்மாவதியின் கண்களில் இருந்து யாரும் பார்க்குமுன் இருசொட்டுக் கண்ணீர் சுண்டித் தெறித்தது கூர்மத்தின் மேல். சிலிர்த்தார் விஷ்ணு. பிரியத்தைக் கொட்டும் கணவன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த இவளுக்கென்ன குறையென்று நோக்கினார்.
தொப்பக்கா என்று உறவினர்களாலும் ஜப்பான் சுந்தரி என்று தாத்தாவாலும் கட்டச்சி என்று தம்பியாலும் கருவாச்சி என்று புகுந்த வீட்டாராலும் நாமம் சூட்டப்பட்ட தனக்கு கொள்ளைப் பிரியம் காட்டும் கணவன் கிட்டியிருந்தாலும் என்ன மனக்குறை என்று இவருக்குத் தெரியாதா என்ன ? என் அப்பா அம்மா தாத்தா பாட்டி அனைவரும் என்னைப் போலில்லையே. நான் மட்டும் ஏன் கறுப்பாய்க் குட்டையாய் குண்டாய் சப்பைமூக்காய் இருக்கிறேன் என யோசனையாய் நிமிர்ந்து பார்த்தவள் கண்ணுக்குள் பிரம்மனின் உதடு அசைந்தது.