எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 அக்டோபர், 2020

பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

 2781. சில இடங்களிலாவது சுயம் துலங்க நாம் நாமாகத்தான் இருக்க வேண்டும். சார்பு என்றைக்கும் மதிப்புத் தராது.

2782. அடுத்தவர்களின் நம்பிக்கையை மதித்துப் புண்படுத்தாமல் இருப்பதே ஆகச்சிறந்த குணம்.

2783. கண்ணாலமாம் கண்ணாலம்


2784. நாற்பது வருஷப் பாரம்பரியத்தைப் பத்து வருஷம் முன்னே உடைக்காம இருந்தா இன்னிக்கும் மார்க்கெட்ல கோலோச்சலாம். 

கட்டம் கட்டமா என்னிக்கு டிசைன் மாறிச்சோ அன்னிக்கே நான் மில்க் பிக்கீஸ் சாப்பிடுறத வெறுத்துட்டேன். 

பாக்கிங் & மூவிங் வசதிக்காக பார்பாரா டிசைன் மாத்துறது, ரெண்டரை நிமிஷம் ப்ரமோ ஆட் போடுறது 

இதெல்லாம் விட்டுட்டு பொதுமக்கள்கிட்டே சர்வே பண்ணி டிஸைனை பழையபடி ஆக்குங்க. பிஸ்குட் வெபாரம் பிச்சிக்கிட்டு ஓடும்.

2785. Once upon a time... Laddu packing for devotees ( Pazhani patha yatra ) at Mama's House


2786. முதல்நாள் காய், அடுத்த நாள் பழம், மூன்றாம் நாள் பஞ்சாமிர்தம்


2787. ஒரு போலீஸ்காரனா இருந்துட்டும் மகனைத் திருத்த முடியலையாமா? எதுக்கு ஸ்ரீகாந்தை இப்பிடி கார்னர் பண்ணனும். தங்கப்பதக்கம் வாங்கி மாட்டிக்கிறதுக்கா

சித்தி கொடுமைக்காரியா இருந்தால் தம்பியோட வுட்பீயை ஏன் கொல்லத் துடிக்கணும் ஆளவந்தான். என்ன கண்றாவி லாஜிக் இது

அதேபோல இந்தியன்ல மகன் லஞ்சம் வாங்கினான்னு கொல்றது. இப்பிடிக் குடும்பத்துக்குள்ளே குத்துப்பலி போட அலையிறது எதுல சேர்த்தி? நாந்தான் பர்ஃபெக்ட் அப்பிடின்னு நெனைக்கிறது கூட மனநோய்தான். 

என்னடி இது சீரியல் அடிக்ட் மாதிரி சினிமாவையெல்லாம் உண்மைன்னு நெனைச்சுப் பேச ஆரம்பிச்சிட்டே.

ஆறுமாசமா லாக்டவுன்ல இருந்தேன்ல. இப்பவும் கொரோனா ஃபோபியால வெளி உலகை பார்க்கவே கிலியெடுக்குது. பின்ன எப்பிடித்தான் டைம்பாஸ் பண்றதாம்.. அதுதான் பேரலல் திங்கிங், லேட்டரல் திங்கிங் எல்லாத்தையும் விட்டுட்டு பெர்பெண்டிகுலர் திங்கிங்ல இறங்கியிருக்கேன். 😉 :3)

OMG!

2788. எழுந்தடங்கும் புழுதியல்ல

கலைந்தலையும் மேகமல்ல

திமிர்ந்தடங்கும்  அலையுமல்ல

நிமிர்ந்ததிரும் என் எழுத்து.

-- இதுக்கு எச போஸ்ட் போடுமாறு அன்புக் கண்மணி சத்யாவை அழைக்கிறேன்.

2789. ஆத்மார்த்தம். கொஞ்சம் கண்கொண்டு பாருங்கள். காது கொடுத்துக் கேளுங்கள். மனிதர்களை மதித்து உரையாடுங்கள்.

2790.



ஞானவேல் கொண்டெதிர்வரும் வேலா
உனைக் கண்டவுடன் ஓடிடுவான் காலா
நாளென்ன கிழமையென்ன பாலா
நாள்தோறும் மெலிகின்றேன் நூலா
நன்றாக நீசிரித்தாய் சிவபாலா
வினையெலாம் பொடிந்திடுமே வெறுந்தூளா
உனைப்பற்றி உய்ந்திடுவேன் தோழா
உன்னுள் எனைச் சேர்த்திடுவாய் சேலா

-+ கரூர் கேவிபி நகர் ஞானஸ்கந்தன்.

2791. புதுவீட்டில் குடிபுக பால் காய்ச்சிக் கும்பிடுதல் - ஜெர்மன் தமிழர்கள் ஸ்டைல் 


2792. Hamm Kamatchi



2793. திருப்பாலத்துறை நெற்களஞ்சியம். 36 அடி உயரமுள்ளது. 3 வாயில்கள் உண்டு. 3000 கலம் நெல் சேமிக்கலாமாம்.! 

16 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது



2794. ரோமாபுரிப் பட்டணம்



2795. அன்பின் மிகுதியாலும் பெருமிதத்தினாலும் மனம் நிறைந்திருக்கிறது. 

ஆயிரக்கணக்கோருக்குப் பாடம் கற்பித்த ஆசிரியரின் ( அம்மாவின் ) மனதில் நாமும் இருக்கிறோம் என்பதே பெரும்பேறுதானே. 

நீளாயுளுடன் இன்னும் நிறையப் புத்தகங்கள் படைக்கப் பிரார்த்தனைகள் அம்மா. 

எங்கள் முன்னோடி நீங்கள்தான். வாழ்க வளமுடன், நலமுடன் நூறாண்டு

///என் வாழ்வின் கோடைகளைக் குளிர்நீரால் நிரப்பியதும்,

என்னையும் அறியாமல் என்னில் கரந்திருக்கும் அறிவின் ஆழ் உறக்கத்தை என் மாணவச் செல்வங்கள் வழி உலுக்கி எழுப்பித் தேடலின் பாதையில் இன்று வரை தொடர்ந்து செலுத்தி வருவதுமான ஆசிரியப்பணி வாய்த்தது என் வாழ்நாளின் பெரும்பேறு.ஓய்வு பெறும் நாள்வரை என் கோயில் கருவறையாய் இருந்தபடி நான் பாடம் சொன்ன,எனக்குப் பாடம் சொன்ன வகுப்பறைகளின் திக்கு நோக்கித் தொழுகிறேன்.
(புகைப்படங்களில் அன்று முதல்,இன்று வரை என் அன்பு மாணவியரோடு நான்..)///

சுசீலாம்மாவின் முகநூல் பக்கத்தில்.


2796. ஸ்விஸ் என்ன ஃப்ரான்ஸ் என்ன.. இந்தியாவிலேயே கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கே





2797. ஆண்களுக்குத் தேவை அழகான பெண் பொம்மைகள், கிளிப்பிள்ளைகள் எனபதை நிறுவி இருக்கிறது ஜெயமோகனின் கன்னியாகுமரி. 

2798. கருது ( அம்பு) , சத்தகம்


2799. எதிஹாடே எதிஹாடே இத்தனை படிதான் ஏனோ



2800. சாலையைக் கடக்கணும்னா இதைத் தொடுங்க/ பிரஸ் பண்ணுங்க


 டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...