எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 அக்டோபர், 2020

மணவறைச்சடங்கும் மாமவேவும்.

 1611. மாலை மாற்றிக் கொள்ளுதல் :- திருப்பூட்டியதும் மாப்பிள்ளை மாலை அணிவிக்க மாப்பிள்ளையும் பெண்ணும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்வார்கள். திருப்பூட்டும் சமயங்களில் மேளதாள நாதஸ்வர இசை உச்சஸ்தாயியில் மங்களகரமாக ஒலிக்கும். மாப்பிள்ளையும் பெண்ணும் மிட்டாய்களை ஊட்டிக் கொள்வார்கள்.

1612. கும்பிட்டு வருதல்:-. திருப்பூட்டியபின் இரு மாமக்கார்களும் அழைத்துச் செல்ல முகப்புக்குச் சென்று வளவு அடுப்படி வரை அனைவரையும் மாப்பிள்ளையும் பெண்ணும் கூப்பிய கரங்களுடன் வணங்கியபடி வருவார்கள். இப்படி வரும்போது பெண் மாப்பிள்ளையின் வலப்புறத்தில் பெண் நடந்து ஜோடியாக வரவேண்டும்.

இதுவரை அங்கே புரோகிதர் வரமாட்டார். பகவணம் செய்ததும் அவர் போய்விடுவார். திரும்ப திருப்பூட்டி முடிந்ததும்தான் அவர் வருவார்.


1613. இசைகுடிமானம்.:- திருமண ஒப்பந்தத்திற்கு இசைகுடிமானம் என்று பெயர். இதை மாப்பிள்ளை பெண் இருவரின் அப்பத்தா வீட்டு ஐயாக்களோ அல்லது மாப்பிள்ளை பெண் இருவரின் அப்பாக்களோ கையெழுத்திட்டு வைத்துக் கொள்வார்கள். மாப்பிள்ளை பெண் இருவருக்கும் அதன் பின் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் சென்று பதிவு செய்து வருவார்கள். இன்றைய மேரேஜ் ரிஜிஸ்டரேஷனின் முன்னோடிதான் இசைகுடிமானம்.

1614. திருப்பூட்டிய சடங்கு :- சடங்குத் தட்டு, குழவி, கத்திரிக்காய், நிறைநாழி, சிலேட்டு விளக்கு வைத்துச் செய்யப்படும் இச்சடங்கை மாமியார் முதலில் செய்து கொள்வார். சடங்குத்தட்டு என்பது ஒரு வெள்ளித்தட்டும் ஏழு கிண்ணங்களும் அடங்கியது. இதில் விநாயகர், பஞ்சு, விபூதி, மஞ்சள், பச்சரிசி, புளி  போன்றவை இருக்கும். எனக்குக் கிடைத்த பாக்கியமெல்லாம் உனக்கும் கிடைக்கட்டும் என்று ஒவ்வொரு கிண்ணத்திலும் மூன்றுமுறை கையால் தொட்டுத் தன் கழுத்தில் வைத்து மணமகள் கழுத்திலும் வைப்பார்கள். அடுத்து சிலேட்டு விளக்கைப் பிடித்துக் கொண்டு கெண்டிச் செம்பில் நீர் ஊற்ற அதைப் பெண் வெற்றிலையில் வாங்கித் தன் காலடிக்குப் பக்கத்தில் ஊற்றுவார். நீங்கள் இட்ட பணியை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவேன் என்பதைப் போலிருக்கும் அது. அதேபோல் நிறைநாழி கத்திரிக்காய், பட்டுத்துண்டில் சுற்றிய குழவி ஆகியவற்றைக்கொண்டும். வீட்டில் தனம் தான்யம் நிரம்பி இருக்க வேண்டும். மக்கட் செல்வம் பெருக வேண்டும் என இச்சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

1615. மணவறைச் சடங்கு:-மேற்கூறிய சடங்குகள் அனைத்தையும் மணமகனின் அப்பத்தாளோ, அய்த்தைகளோ அல்லது உடன்பிறந்த சகோதரிகளோ இந்த மணவறைச் சடங்கைச் செய்து கொள்வார்கள்.

இச்சடங்குகளைச் செய்து கொள்ளும் மணமகள் மணையிலும் அதைச் செய்யும் மாமியார் அல்லது நாத்தனார் தடுக்கின் மேலும் நின்று செய்து கொள்வார்கள். 

1616. சாப்பாடு போடுதல் :- திருமணம் செய்விக்கும் ஐயர் சொல்படி மணமகன் மணவறையில் அமர்ந்திருக்க மணப்பெண் சாப்பாடு போடும் நிகழ்விது. மணமகன் முன் இலையில் பெண் நின்றுகொண்டே சாதம் பருப்பு காய்கறி குழம்பு அப்பளம் தயிர் பாயாச வகையறாக்களைப் பரிமாற ஆண் அவற்றைத் தொட்டு விட்டுக் கைகழுவுவார். ஒரு பாத்திரத்தில் ஆண் கைகழுவப் பெண் நீர் ஊற்றுவார். ( இன்று எல்லாம் அன்றைக்குத்தான் மணமகள் கையால் மணமகனுக்குச் சாப்பாடு கிடைக்கும். அதன் பின் அவனே போட்டுச் சாப்பிட வேண்டியதுதான் J

1617. கல்யாண வேவு.:- கல்யாணம் முடிந்ததும் வேவு இறக்குதல். ஆயா வீட்டினர் முதலில் இறக்குவார்கள். கல்யாணம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் வேவுஎடுப்பார்கள்.


1618. மாம வேவு:- தலைப்பிள்ளை திருமணத்துக்குத்தான் ஆயாவீட்டில் இருந்து மாமவேவு இறக்குவார்கள். பங்காளி வீட்டினரை மேளதாளத்துடன் அழைத்துவந்து ஆயாவீட்டார் வேவு இறக்குவார்கள். ஆயாவீட்டில் ஆண்கள் வேவு கொண்டுவர  பிள்ளை/பெண்ணின் வீட்டைச் சார்ந்த பெண்கள் இறக்கிக் கொள்வார்கள். நடுவீட்டில் அத்தை அல்லது அப்பத்தா விளக்கேற்றி, ஸ்லேட்டு விளக்கையும் ஏற்றி வந்து நடையில் வைக்க அங்கே இருந்துதான் வேவு இறக்கிக் கொள்வார்கள். இந்த வேவில் வேவுக்கடகாத்தில் பச்சரிசி வெல்லம் தேங்காய் பரங்கிக்காய் காய்கறி போன்றவை இடம்பெறும்.

1619. அரசாணிக்குப்  பொங்கலிடுதல். :- திருமண நிகழ்ச்சிகளில் பகவணத்தின் போது புரோகிதர்கள் அரசாணிக்காலுக்குப் பூஜை செய்து ஆரம்பிப்பார்கள். திருமணம் முடிந்ததும் அரசாணிக்காலுக்குப் பொங்கலிட்டுப் படைப்பார்கள். பெண்ணழைப்பு முடிந்ததும் அரசாணிக்கால் அவிழ்க்கப்படும். அதுவரை வைத்திருக்க வேண்டும்.

1620. தலைச்சீலையில் முடிதல். :- மாப்பிள்ளை அழைத்தபின், திருப்பூட்டு முன் நடக்கும் சடங்கு. முதல் செலவுக்குக் கொடுத்தல் என்பதே தலைச்சீலையில் முடிதல். பெண்ணின் தகப்பனார் அல்லது சகோதரன் ஒருதொகையை மாப்பிள்ளையின் தலைப்பாகையில் வெற்றிலை பாக்கோடு வைக்க அதை மாப்பிள்ளையின் மாமக்காரர் எடுத்து மாப்பிள்ளையின் அப்பாவிடம் கொடுப்பார். 


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.


1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. 
காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. 
காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. 
காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. 
காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29.
 காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. 
காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. 
காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. 
காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. 
காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.


35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.


59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே

75.  காவடியாம் காவடிகந்தவேலன்காவடி

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்

80. செட்டிநாடும் செந்தமிழும்தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும்சில திருமணச்சடங்குகளும்.

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும்சுவற்றலமாரிகளும். :-

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும்பெருமாளும் தேவியும்

87. இந்த சீர் போதுமா ?! 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

92. இனியெல்லாம் பிஸினஸே

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.

98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.

99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .

100. கானாடுகாத்தான்கடியாபட்டிதெக்கூர்கோட்டையூர்காரைக்குடிவீடுகள்.

101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.

102. பழம்பெரும் வீடுகள்.

103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. காரைக்குடிச் சொல்வழக்குபிச்சோடாவும் சித்தாடையும்.




106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார்காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.

108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்

109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.

110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.

111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும்சிவப்பு மாத்தும்.

112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.

113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.

115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.

116. காரைக்குடிச் சொல்வழக்குசம்போவும் கவுடும்.

117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.

118.காரைக்குடிச் சொல்வழக்குலண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.

 

119. காரைக்குடிச் சொல்வழக்குகிட்டங்கியும் பொட்டகமும்.

120. காரைக்குடிச் சொல்வழக்குதுடுப்பும் ஒலுகும்.

121. காரைக்குடிகானாடுகாத்தான் வீடுகள்.

 

122. கண்டனூர்கானாடுகாத்தான்தெக்கூர் வீடுகள்.

 

123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.

 

124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.

 

125.காரைக்குடிச் சொல்வழக்குசிலேட்டு விளக்கும் சாரட்டும்.

 

126.காரைக்குடிச் சொல்வழக்குகா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்


127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.

 

128. காரைக்குடிச் சொல்வழக்குபொன்னுளியும் விராகனும்.


129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்

 

130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

 

131.காரைக்குடி முனியையா கோயில்.

 

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

 

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

 

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

 

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

 

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

 

137. வட்டாரப் பழமொழிகள் - 4.

 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

 

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

 

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

 

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

 

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

 

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

 

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

 

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

 

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

 

147. பேர் பெற்ற வீடு.

 

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

 

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

 

150. பூசைச் சாப்பாடு.

 

டிஸ்கி :- இவற்றையும்பாருங்க.




 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. 
மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


3 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை சடங்குகள்... தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...