எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 அக்டோபர், 2020

கொலோன் கதீட்ரலில் கண்ணாடி ஓவியங்களும் கடைசி விருந்தும்.

 ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கே  உள்ள ஜன்னல்களின் கண்ணாடிகளில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. யேசுவின் வாழ்க்கை, அவர் நிகழ்த்திய அற்புதங்கள். அபோஸ்தலர்கள், கடைசி விருந்து, சிலுவையில் அறைதல் ஆகியன ஓவியங்களாகி உள்ளன. 1996 இல் யுனெஸ்கோ இதைப் பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. 

யேசு நிகழ்த்திய அற்புதங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளன. 


1248 இல்  இதைக் கட்ட ஆரம்பித்தார்களாம்.ஆனால் படிப்படியாகக் கட்டி. நடுவில் ஏழு நூற்றாண்டுகள் விட்டுப்போய் 1880இல் இப்போதிருக்கும் இரட்டைக்கோபுரங்களோடு வானளாவக் கட்டி முடித்தார்களாம். 

இந்த கதீட்ரலே சிலுவை அமைப்பில் ( லேடின் க்ராஸ்) அமைக்கப்பட்டுள்ளது. உயரே இருக்கும் இசைக்கருவிகளும் சிற்பங்களும் கண்ணைக்கவர்கின்றன.

அதைவிட அதிகமாய் இந்தச் சாளர ஓவியங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. 

1509 இல் பீட்ரஸ்- அண்ட் உர்சல் ஜெஸ்ஸி - ஃபென்ஸ்டர் வரைந்தது இதில் ஒன்று. 
மாடர்ன் ஓவியங்களை ஜெரார்ட் ரிச்சர்ட் என்ற  ஓவியர் வரைந்திருக்கிறார். 

மன்னர்கள், அடிமைகள், கைதிகள், பிணியாளர்கள், யேசு நிகழ்த்தும் அற்புதங்கள், இயேசுவின் பிறப்பு,  சிலுவையில் அறைதல்,இறப்பு, உயிர்த்தெழுதல் என அனைத்து ஓவியங்களையும் பார்க்க வேண்டுமென்றால் அதற்கே ஒரு நாளாகும். 

மேலும் ஓவியங்கள் இருந்த கண்ணாடிச் சாளரங்களும் மிக உயரே இருந்தன. இருந்தும் கோதிக் பாணிக் கட்டிடக்கலையா அல்லது இந்தக்கதீட்ரலின் உயரம் காரணமா எனத் தெரியவில்லை. பாதி இடங்கள் மணிரத்னம் படம் மாதிரி இருட்டாகவே இருந்தன. 

மன்னர்கள்.  

இயேசுவின் பிறப்பு. மூன்று மன்னர்கள் வந்து மண்டியிட்டு வாழ்த்துவது மிக அழகு..

மரித்த ஏசுவை மரியாள் ஏந்தும் காட்சி கண்ணீல் நீர் வர வைத்தது. 

இதுதான் கடைசி விருந்து. யூதாஸ் முத்தமிடும் காட்சி. 

இது 1846 இல் அன்பெடங்ஸ்- ஃபென்ஸ்டர் வரைந்தது.

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெரோ க்ராஸையும் ஆர்ச்பிஷப்களின்/புனிதர்களின் கல்லறைச் சிற்பங்களையும், இயேசுவின் வாழ்வியல் சிற்பங்களையும் சிலுவைப்பாதையையும் நீங்கள் இங்கே காணலாம். 

எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட இந்த அற்புத கதீட்ரலை ஜெர்மனி சென்றால் காண மறவாதீர்கள். இந்தியாவில் நீங்கள் படித்த ( நற்கருணை வீரன் பற்றியோ ) பள்ளிக்கூடங்களோ உங்கள் கிறிஸ்துவத் தோழ/தோழிகளோ நிச்சயம் மனக்கண்ணில் தோன்றுவார்கள்.

2 கருத்துகள்:

  1. வாவ்! அழகா இருக்கே! எட்டு நூற்றாணடுகளாகக் கட்டப்பட்டது வியப்பளிக்கிறது. பகிர்விற்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  2. நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...