எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 அக்டோபர், 2020

2010 : THE YEAR WE MAKE CONTACT. – சினிமா ஒரு பார்வை.

 2010 : THE YEAR WE MAKE CONTACT. – சினிமா ஒரு பார்வை.



1984 இல் வந்த இந்தப் படத்தை 1986 இல் திருமணமானவுடன் கணவருடன் சென்று பார்த்தேன். கோவை செண்ட்ரல் தியேட்டர் என்று நினைவு. முதன் முதலா பார்த்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம். ஆர்தர் சி க்ளார்க்கின் நாவல்களில் ஒன்று. முதலில் வந்தது 2001: A SPACE ODYSSEY. ( ஆர்தர் க்ளார்க்கின் 2010: ODYSSEY TWO என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது ) இயக்கியவர் பீட்டர் ஹைம்ஸ்.

ஆங்கிலப் படங்கள் எனக்குத் திகிலூட்டுவதாக அமைந்தாலும் கணவருடன் சென்றதால் பக்கத்தில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டே பார்ப்பேன். வயிற்றில் புளியைக் கரைக்கும் விநோதங்கள் அநேகம் இருக்கும். இதில் ஜூபிடரில் விண்வெளி வீரர் ஒருவர் தவறிப்போய் பின்னர் ஸ்பேஸ் ஷிப்பில் மிதந்து ஏறும் காட்சி அப்படிப்பட்ட ஒன்று.

ராய் ஷிடர், ஜான் லித்கௌ, ஹெலன் மிரன், பாப் பலபன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் லிஸ்டை விட ஆர்ட் டிபார்ட்மெண்ட், சவுண்ட் டிபார்ட்மெண்ட், ஸ்பெஷல் எஃபக்ட், விஷுவல் எஃபக்ட் கலைஞர்கள் லிஸ்ட் அதிகம். 5 ஆஸ்கர் அவார்ட், 2 சாட்டர்ன் அவார்டுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம், 2 ஹியூகோ அவார்ட் பெற்ற படம்.!

கதைன்னு பார்த்தா ரொம்ப சிம்பிள்தான் ஆனா ஸ்பேஸ்ல நடக்குறதுதான் திகில். அதிலும் இதில் அமெரிக்க ரஷ்ய விண்வெளி வீரர்கள் இணைந்து பணிபுரியிறாங்கன்னு காட்டி இருக்குறது வித்யாசம்.

ஒன்பது வருஷத்துக்கு முந்தி ஜூபிடருக்கு ( கதையில் சனிக்கிரகத்துக்கு ) அனுப்பப்பட்ட டிஸ்கவரி ஒன் அப்பிடிங்கிற ஸ்பேஸ்ஷிப் தோல்வியடைஞ்சிடுது. அதுல போன நான்கு விண்வெளி வீரர்கள் இறந்துடுறாங்க. டேவிட் போமென் என்ற காஸ்மோனெட் ( புது ப்ரயோகம், ஆஸ்ரானெட் மாதிரி ) மர்மமான முறையில் காணாம போயிடுறாரு. போகுமுன்னே டிஸ்கவரி ஒன்னில் இருக்கும் ஹால்9000 (HAL9000) அப்பிடீங்கிற கம்ப்யூட்டரை செயல் இழக்க வைச்சிட்டுப் போயிடுறாரு. இத பல்வேறு தடைகளுக்குப் பின்னே எப்பிடி ஆச்சு என்ன ஆச்சுன்னு ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானிகள் இணைஞ்சு ரஷ்யாவோட லியோனோவ் அப்பிடிங்கிற ஸ்பேஸ்ஷிப்புல வந்து கண்டுபிடிக்கிறாங்க.

அதுக்கு நடுவுல அவங்களுக்குள்ளே வரும் உரசல், ஸ்பேஸ்ஷிப்பில் வாழ்க்கை, ஜூபிடரில் இருக்கும் மோனோலித் எனப்படும் பாறைப்படிவம் அல்லது ஒற்றைக்கல்லின் சதி, சாதுவாய்த் தெரியும் ஹாலின் வில்லத்தனம் எல்லாம் கலந்து கட்டி இந்தப் படத்தை 1986 இல் பார்த்த என்னை அசரடிச்சிருச்சு.   

டிஸ்கவரி ஒன்னைக் கண்டுபிடிக்க டிஸ்கவரி 2 ரெடியாகுறதுக்குள்ள டிஸ்கவரி ஒன் ஜூபிடர்ல இருக்கும் லூ அப்பிடிங்கிற நிலவை மோதிடும் அதுக்குள்ள அதைத் தடுக்கணும்னுதான் ரஷ்ய விண்வெளி வீரர்கள் துணையை அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஏத்துக்குறாங்க. ஒரு வழியா முட்டி மோதி இரு நாட்டு வீரர்களும் ஜூபிடருக்கு வந்ததும் டிஸ்கவரி ஒன் யூரோப்பா அப்பிடிங்கிற ஜூபிடரின் நிலவுல ( ஜூபிடருக்கு மட்டும் நாலு நிலவு ) இருக்குறதக் கண்டுபிடிக்கிறாரு.

அது என்னன்னு கண்டுபிடிக்க ஆள் இல்லாம ஒரு மாதிரி ( மாடல்) ரோபோவை அனுப்புறாங்க. அத யூரோப்பா சுக்கல் சுக்கலா ஒடைச்சு டேட்டாவை காலி பண்ணித் தூளாக்கி ஜூபிடருக்கு வீசிடுது. அப்புறம் தேடிப்பார்த்தா டிஸ்கவரி ஒன் ஜூபிடருக்குப் பக்கத்துல ஸ்பேஸில் ஓரிடத்தில் மிதந்துக்கிட்டு இருக்கு. இதுலதான் எல்லாம் மிதந்து போய் ஏறுவாங்க பாருங்க முதுகுத்தண்டு எல்லாம் ஜிலீர்ங்கும். இதுக்குள்ளதான் சந்திராவும் கர்னோவும் போய் டிஸ்கவரியையும் ஹால்9000 ஐயும்( ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜண்ட்ஸ் கம்ப்யூட்டர்)  ஆக்டிவேட் செய்வாங்க.

இந்த டிஸ்கவரி ஒன் கண்டுபிடிக்கப் போனதே இந்த மோனோலித் பத்தித்தான்.இத எல்லாம் பார்க்கும்போதே பதட்டமா இருந்தாலும் இன்னொரு விஷயம்தான் ரொம்பப் பதட்டமாச்சு. எல்லா மோனோலித்தும் சேர்ந்து ஜூபிடரை மூழ்கடிச்சு ப்ளாக் ஹோல் போல் ஆக்குவதும் அதைச் சுருக்கிச் சுருக்கி டென்சிட்டி அதிகமாக்கிக் குறுகிய நட்சத்திர வடிவில் கொண்டு வர்றதும்தான்.

அதேபோல் காணாமப் போன டேவிட் போமென் அருவுருமாகிக் காற்றில் கலந்து மனைவி பார்த்துக்கிட்டு இருக்கும் டிவிக்குள்ள வந்து பேசுறதும் உடல்நிலை சரியில்லாத அம்மாவைப் பார்க்கப்போறதும் த்ரில்.

அதுவும் இந்த ஹால்9000 கம்ப்யூட்டர் (Heuristically programmed ALgorithmic computer) இருக்கே அதுதான் வில்லன். இதோட இண்டலிஜென்ஸ் அதிகமாகி மத்தவங்க பேசுறது, பேசுறதப் புரிஞ்சிக்கிறது, உதட்டசைவை புரிஞ்சிக்கிறது, முகத்தை வைச்சு அடையாளம்கண்டுபிடிக்கிறது, பல்வேறு மொழியறிவு, கலாரசனை, மனித உணர்வுகளைப் புரிஞ்சிக்கிறது, காரண காரியங்களை விளக்குறது, ஸ்பேஸ்ஷிப்பை இயக்கிறது ஏன் செஸ் விளையாடுறதுகூட செய்யுது.

ஒரு கட்டத்துல இதுதான் வில்லன்னு தெரிஞ்சிக்கிறாரு டேவிட் போமென். இத சரிப்படுத்தி நார்மலா கொண்டுவர  அது முன்னாலேயே அவங்க செயல்பட அதைப் புரிஞ்சிக்கிட்ட ஹால்9000 ஃப்ரான்கை அவரோட ஈவா பேடோட தூக்கி வீசிடுது ஸ்பேஸ்ல. ஃப்ரான்கைக் காப்பாற்றப் போன டேவிட் ஹெல்மேட் போடாமப் போயிடுவாரு. அப்ப டிஸ்கவரிக்குள்ள இருக்கும் நாலு விண்வெளி வீரர்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்காதமாதிரி வேக்யூம் ஆக்கிக் கொன்னுடுது.

எப்பிடியோ ஹாலோட பார்வையிலிருந்து தப்பிச்சு டேவிட் எமர்ஜென்ஸி ஏர்லாக்கை உடைச்சித் திறந்து டிஸ்கவரிக்குள்ள குதிச்சு ஏர்லாக் பண்ணி ஆக்ஸிஜன் சேம்பருக்குப் போய் ஸ்பேஸ் சூட்டை மாட்டிக்கிட்டு வந்து சாமர்த்தியமா ஹால்9000 ஐயும் செயல் இழக்கச் செய்துடுவாரு.. இதப் பார்க்கும்போதெல்லாம் சீட்டின் நுனியில் இருந்தேன் நான்.

அப்புறம்  விண்வெளி வீரர்கள் முன் தோன்றி லெனோவில் ஏறி சீக்கிரம் பூமிக்குக் கிளம்பும்படி சொல்லிட்டு மறைஞ்சிடுவாரு டேவிட் போமென். இரு நாட்டு வீரர்களும் லியோனோவில் கிளம்ப டிஸ்கவரி வெடிச்சிரும். யூரோப்பா அப்பிடிங்கற ஜூபிடரின் நிலவில் பசுமை தளிர்க்கும்.  

2010போய் 2020 இம் வந்திருச்சு.ஜூபிடருக்கும் ஒண்ணும் ஆகலை பூமிக்கும் ஒண்ணும் ஆகலை ஆனால் 2061: ODYSSEY THREE AND 3001 : THE FINAL ODYSSEY வந்திரும் போல இருக்கு J

இந்தப் படத்துக்கு என்னோட ரேட்டிங் நாலு ஸ்டார்.

****

இதையும் பாருங்க. 

https://www.imdb.com/title/tt0086837/?ref_=ttfc_fc_tt

2 கருத்துகள்:

  1. இந்தப் படத்தைப் பற்றிப் படித்துள்ளேன். பார்த்ததில்லை. உங்கள் பதிவு மூலமாக அதிகமான தகவல்களை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...