எனது பதிமூன்று நூல்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

ஸ்ரீ ப்ரம்மம் & ஏழைதாசன் - ஒருபார்வை

 ஸ்ரீ ப்ரம்மம் :- மாதாந்திரி. எட்டு வருடங்களாக கோயமுத்தூரில் இருந்து வெளி வருகிறது. சமூக முன்னேற்றத்துக்கான மாத இதழ். ஆசிரியர் அயிளை அ. நடேசன். 


ஆரிய வைசியர் வரலாறு, பஞ்சராம க்ஷேத்திரங்கள்,,வாசவி க்ளப், பூஜை, பிரார்த்தனை , ஹோமம், திருமண வாழ்த்து, சஷ்டியப்த விழா இவற்றோடு தன்னம்பிக்கைக் கட்டுரைகளும் மாதவிடாய் பற்றிய கட்டுரைகளும் மனோதத்துவக் கட்டுரைகளும் ஆரோக்கியக் கட்டுரைகளும்  பாரம்பரிய விளையாட்டுகளும் ஆரோக்கிய உணவுகளும்  இடம்பெற்றுள்ளன. தூக்கம் ஏன் இன்றியமையாதது என விளக்குகிறது ஒரு கட்டுரை. விதம் விதமான தாலிகள் பற்றிச் சித்தரிக்கிறது ஒரு கட்டுரை. 

வளரும் சிறார்களின் கலை ஈடுபாடுகள் ( ஓவியத்திறமை, ) பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு சாதனையாளர்கள்  ஆகியோரைப் பாராட்டி இருக்கிறது ஸ்ரீ ப்ரம்மம். 

நிறையக் கட்டுரைகளுக்குப் பங்களிப்புச் செய்துள்ளவர்கள் பெண்கள் என்பது சிறப்பு. சாந்தா சத்யநாராயணன், ஹரிணி உதயராஜா, சரஸ்வதி பாண்டுரங்கன், பிரவீணா அருண், சுபலெக்ஷ்மி, சுகுணா பரத்வாஜ், நிர்மலா குப்தா, விஜய நேதாஜி , ப்ரேமி கிரிஜா ராமநாதன் ஆகியோர் தம் கட்டுரைகளால் வியக்க வைக்கிறார்கள்.

நூல் :- ஸ்ரீ ப்ரம்மம்
ஆசிரியர் :- அயிளை அ. நடேசன். 
விலை:- ரூ 10/- ஆண்டுச் சந்தா -100/- 


ஏழைதாசன் :- இதுவும் ஒரு மாதாந்திரி. தமிழ்த் திங்கள் முதல் நாளில் வருகிறது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக வந்து கொண்டிருக்கிறது இந்நூல். உலகத்தமிழர்களின் ஒப்பற்ற குரல் என்ற கேப்ஷனோடு வரும் இந்நூலின் ஒவ்வொரு அட்டைப்படத்தையும் ஒவ்வொரு பிரபலம் அலங்கரிக்கிறார். 

க்ளரிஹ்யூ, ஹைக்கூ, மரபுக்கவிதைகள் என நூல் முழுவதும் ஒரே கவிதைகள் மயம். ஒரு பக்கத்தைக் கூட வீணாக்காமல் ஏன் ஒரு இஞ்ச் பேப்பரைக் கூட வீணாக்காமல் செய்திகள் தரப்பட்டுள்ளது. 

பிரஞ்ச் தமிழ் அகராதி, படைப்பாக்கப் போட்டிகள், மாநாடு, கருத்தரங்க விபரங்கள்,  விருது விழா, நூல் வெளியீடு, செவாலியே பட்டம், வாசகர் வட்டம் ( வாசகர் கடிதம் ) , திருக்குறள் பரப்புரைப் பயணம், சொல் ஆய்வுகள், குறுக்கெழுத்துப் புதிர், புத்தகச் சிறப்புரை, அரிய செய்திகள், விழிப்புணர்வுத் தகவல்கள், வர்மம், கொரோனா கவிதைகள், அட்டைப்படக் கட்டுரை ( இது விரிவாக விக்கிபீடியா போல் அட்டைப்படத்தில் இடம் பெற்ற பிரபலம் பற்றிய ஏ டு இஸட் தகவல்களை அளிக்கிறது. ) கல்விக்கூடங்கள் விடுதிகள் பற்றிய கட்டணச் சலுகைகள், வேளாண்மை இயல், சிறுகதைகள், பிறந்தநாளை ஒட்டி  இலக்கியப் பிரபலங்கள் பற்றிய தகவல்கள்  ஆகியன இடம்பெற்றுள்ளன. 

கருமலைத் தமிழாழன் அவர்களின் கவிதைகள் வெகு சிறப்பு. வேளாண்மை இயல் பற்றிய கட்டுரை வெகு சிறப்பு. பலரின் கவிதைகளும் சிறப்பாக உள்ளன. 

மொத்தத்தில் இருநூல்களும் பல்சுவைத் தொகுதிகள். 

நூல் :- ஏழை தாசன்
சிறப்பாசிரியர்:-கரு.கோ. மணிவாசகம்.
ஆசிரியர்:- விஜயகுமார்.
விலை :- ரூ 15/- ஆண்டுச் சந்தா - ரூ 200/-1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...