எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஜூலை, 2016

நொய்யல் நோயில்...

எனது நொய்யல் கவிதை 


நொய்(த)யல்
------------------
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை
சாயப்பட்டறைக்காரர்களுக்கு..
கடல் வரை
நீட்ட உத்தேசித்து
கையறு நிலையாய்
கிடத்தியதுதான் மிச்சம்..
வயலும் இல்லாமல்
வாழ்வும் இல்லாமல்
வெளிநாட்டின்
மானம் காக்கும் உடைகளில்
காயடித்துக் கிடக்கிறது
கிழிக்கப்பட்ட தோலுடன்
சாயம் பூசி நொய்யல்.

நன்றி:தேனம்மை லெக்ஷ்மணன்,கீற்று இணையத்தளம்

நன்றி காந்திய மக்கள் இயக்கம் திருப்பூர். 



வெள்ளி, 29 ஜூலை, 2016

2065 ம் ஆறு லட்சமும். !!!

841.ஸ்டேடஸை லைக் பண்ணி போடுறோமோ இல்லையோ லைக்ஸை லைக் பண்ணிப் போடுறதில்லை.

#மெக்கானிக்கல்_லைக்.

842. நமது லைக்ஸெல்லாமுமே நமது லைக்ஸில்லை.

#சிச்சுவேஷன்_லைக்ஸ்

843. தர்க்கரீதியா, கொள்கை ரீதியா, வேதாந்த ரீதியா சித்தாந்தரீதியா விருப்பப்பட்டு எப்பவுமே லைக்ஸ் போடுறதில்லை.

#நட்புரீதி_லைக்ஸ்.

844. என்ன விட்டுட்டு சாப்பிட்டதாலதான் வவுத்துவலின்னு சந்தோஷப்படும் பிள்ளை நட்புகளை என்ன செய்வது ? ப்ளாக் ஃபாரெஸ்ட், ரெட் வெல்வெட்னு கேக் ஃபோட்டோ போட்டு இன்னும் கடுப்பேத்துறதுதான் சரி :P

845. மாஃபியாவா..நோ நோ.. என் ஃப்ரெண்ட்ஸ்தான் போனா போகுதுன்னு கொஞ்சம் லைக்ஸ் போடுறாங்க. அதையும் கெடுத்திடுவாங்க போல இருக்கே.

846.அடையாளங்களை மறைக்க/மறுக்க விரும்புகிறோமோ நாம்...# சில சமயங்களில்..

புதன், 27 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக்கயிறு & பெண்பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை பாருவின் பார்வையில். :)

Paaru Kumar

எப்படியாவது இந்த உலகத்த விட்டு போறதுக்குள்ள....கால் பங்காவது இலக்கியவாதி ஆகனுங்கற முயற்சியல்.....

யாரு புத்தகம் வெளியிடறாங்க...இல்ல அதைப்பற்றி பேசுறாங்கன்னாலும்....கலந்துக்கறேன்.

இளமதி பத்மா ...அழைப்பின் பேரில் கலந்துகொண்டேன்...
தேனம்மை லஷ்மணின்.....
சிவப்பு பட்டுக்கயிறு மற்றும் பெண் பூக்கள் புத்தக வெளியீடு மற்றும் மதிப்புரை.

திங்கள், 25 ஜூலை, 2016

கல்யாண் நினைவு கவிதைப் போட்டி - 2016.

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய,
கல்யாண் நினைவு கவிதைப் போட்டி - 2016.


உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவரக் கூடியதா?
ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா?

வெள்ளி, 22 ஜூலை, 2016

சிவப்புப் பட்டுக் கயிறு & பெண் பூக்கள் நூல் வெளியீடு & மதிப்புரை.

ஜூலை 23 சனிக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சிவப்புப் பட்டுக் கயிறு & பெண்பூக்கள் நூல் விமர்சனம்.

பெண்பூக்கள் நூல் வெளியீடு - சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் திருமதி மணிமேகலை அவர்கள்.

 
 பெற்றுக் கொள்பவர் - திருமதி சுபா தேசிகன் அவர்கள்.

பெண் பூக்கள் & சிவப்புப் பட்டுக்கயிறு  நூல் மதிப்புரை .

இடம் :- டிஸ்கவரி புத்தக நிலையம், முனுசாமி சாலை, கே. கே. நகர், சென்னை.

நேரம். 23 . 7. 2016 சனிக்கிழமை. மாலை 6 மணி.

வரவேற்புரை - டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்கள்.

சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய மதிப்புரை :-

1. முன்னாள் வனத்துறை அதிகாரி & கோகுலம் எடிட்டர் திரு. லதானந்த். அவர்கள்
 
 

2. மென்திறன் பயிற்சியாளர்.திருமதி கயல்விழி மோகன் அவர்கள்

பெண்பூக்கள் பற்றிய மதிப்புரை :-

1. பொறியாளர் திரு. கே டி இளங்கோ அவர்கள்
 
 

2. லயனஸ் திருமதி. வசுமதி வாசன் அவர்கள்


ஏற்புரை. திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன்.

அனைவரும் வருக.
 
Related Posts Plugin for WordPress, Blogger...