எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 நவம்பர், 2023

அழகியை மீட்ட அழகி

 அழகியை மீட்ட அழகி

காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும்வரை”  என்று ஜெமினியும் சந்திரபாபுவும் பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகள் செயின்போலக் கோர்த்தும் வரிசையாகவும் தும்பிக்கை பிடித்தும் அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. அழகியின் தந்தை செந்தில்நாதன் முகமலர்ச்சியோடும் சிறிது கவலையோடும் அமர்ந்திருந்தார்.

 

அவர் கையசைக்கவும் ஹாலில் இருந்த டிவியை ரிமோட் கொண்டு அணைத்துவிட்டுச் சென்றான் பணியாள். அவரது மனைவியும் மகனும் கூட அமர்ந்திருந்தார்கள். அழகி தெளிவில்லாத முகத்தோடு நீரில் நனைந்து கசங்கிய ஒரு பூங்கொத்துப் போல அமர்ந்திருந்தாள். இன்னும் கூட ஹார்மோன்களை இசைபாடத் தூண்டும் அவளது அழகு ஸாமுக்குப் பிரமிப்பூட்டியது. 

 

கல்யாணகாலம் வரும்வரைதானா காதல்.. என யோசித்தபடி செந்தில்நாதன் அருகில் அமர்ந்திருந்தான் ஸாம். அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் சிறிது குழப்பமாகவும் இருந்தது. அழகியுடனான காதல் வாழ்வு.. எத்தனை நாள் ஏக்கம். நாள்கடந்து கிடைத்த வரம். அவனை வெறுமையாக்கியதோடு சிறிது அயர்வையும் தந்தது.

யூ ட்யூபில் 2181 - 2190 வீடியோக்கள்.

2181.பெரியநாயகி அம்மன் l  சோலை ராமச்சந்திரன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mv_u7qhKvkw


#பெரியநாயகிஅம்மன், #சோலைராமச்சந்திரன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERIYANAYAGIAMMAN, #SOLAIRAMACHANDRAN, #THENAMMAILAKSHMANAN, 



2182.நடராஜா l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HiJmreA6kFM


#நடராஜா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NATARAJA, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 3 நவம்பர், 2023

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.


 


காரைக்குடியைக் கல்விக்குடியாய் மாற்றியதில் வள்ளல் அழகப்பரின் பங்கு அளப்பரியது. அதேபோல் காரைக்குடியில் 21 ஆண்டுகளாய்ப் புத்தகத் திருவிழா நடத்தி அறிவுச் சுடரேற்றி வருபவர்கள் காரைக்குடிப் புத்தகத் திருவிழாக் குழுவினர். இவர்களுள் லயன் வெங்கட் என்று நண்பர்களால் அழைக்கப்படும் திருமிகு.வெங்கடாசலம் அதன் பொருளாளராய் இருந்து திறம்படத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

 

இது மட்டுமல்ல வாழ்வியல் நெறிகளை அழகுறத் தரும் திருக்குறள் கழகம், மெய்யியல் நெறியைப் பரப்பும் இந்து மதாபிமான சங்கம், இசைத்தமிழுக்கென்று உருவான தமிழிசைச் சங்கம், தனவணிகர் மரபுக்கேற்ற காரைக்குடி தொழில் வணிகக் கழகம் எனக் காரைக்குடியின் பாரம்பரியச் சங்கங்கள் பலவற்றுக்கு இவர் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி உள்ளார். உலகளாவிய அரிமா சங்கத்தின் காரைக்குடி மாவட்ட வட்டாரத் தலைவராகவும் பல்வேறு தொண்டுகள் புரிந்துள்ளார். எப்படி இவ்வளவையும் திறமையாக, சரிவர நிறைவேற்ற முடிகிறதென்று பார்க்கும்கணம் தோறும் என்னை ஆச்சர்யப்பட வைப்பவர் இவர். சுறுசுறுப்பானவர். எப்போதும் பளிச் தோற்றம் கொண்டவர். இவரைப் பார்த்தாலே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இந்த மனம் ஒரு நந்தவனம், சுவாமி சிவானந்தரின் பொன்மொழிகள் போன்ற நேர்மறை எண்ணங்கள் கொண்ட புத்தகங்களை அனைவருக்கும் பரிசாக வழங்கி மகிழ்பவர்.

யூ ட்யூபில் 2171 - 2180 வீடியோக்கள்.

2171.Music Notes played by our friend Vinodh

https://www.youtube.com/shorts/KA1o2i-Akdw


#MusicNotes, #Vinodh,



2172.திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=K1WcW-C7fOw


#திருச்செந்தூர், #பிள்ளைத்தமிழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUCHENDUR, #PILLAITAMIL, #THENAMMAILAKSHMANAN,