எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2016

சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.



சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை

பட்டுகயிற்றை எப்பிடி இடுப்பை சுற்றி கட்டுகிறோமோ, அது மாதிரி இந்த புத்தகமும் சமூகத்தை சுற்றி சகல இடத்திலும் சாமனியதளங்களில் இலகுவாக பயணிக்கிறது.அறுத்து போடும் பட்டு கயிற்றில் உயிர் ஏற்றி ஆரம்பிக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு.

புதன், 2 நவம்பர், 2016

கோயமுத்தூரும் கர்நாடகாவும்.

1081. கரண்ட் இல்லாட்டி என்ன UPS இல்லாட்டி என்ன சூரிய வெளிச்சம் இருக்கே. ஹையா ஜாலி.. :)

1082.. தமிழ்நாட்டுல கரண்ட் இல்ல, கர்நாடகாவுல தண்ணீ இல்ல ஒரு மிடில் க்ளாஸ் தமிழன்/தமிழச்சி எங்குமே வாழ முடியாதா ?

1083. எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சில முட்டாள்தனங்கள் கூடவே இருக்கின்றன..

1084. ஐ ட்ராப்ஸ் போட்டா மூணு மணி நேரத்துக்கு மசமசன்னு இருக்கும்னாங்க. ஆனா ரோடெல்லாம் 4 சூரியன், 4 சந்திரன் தெரியுதே. :)

1085. அந்த ஏசிய ஆஃப் செய்ங்க.

ஏசியே போடலையே...

ஐயோ இந்த கோயமுத்தூரு என்ன இந்தக் குளிரு குளிருது.. :)

1086. எவ்ளோ பெரிய உள்ளம் இந்த ராஜாவுக்கு. !!!
அதியமான் கோட்டம். ஔவையும் அதியனும் நெல்லிக்கனியும்.

துள்ளுவதோ இளமை - எலும்பு - மூட்டு : A - Z பெட்டகம்.

துள்ளுவதோ இளமை - எலும்பு - மூட்டு : A - Z பெட்டகம்


துள்ளுவதோ இளமை - இது ஒரு நூல் அறிமுகம்பார்வை மட்டுமே. 305 எலும்போட பிறக்கும் நாம் பதின்பருவத்தை எட்டும்போது 206 எலும்புகளோட உறுதியாயிடுறோம். போன் மாஸ் டென்சிட்டி, ஆஸ்டியோ போராசிஸ், ஆர்த்தரைட்டீஸ், பேக் பெயின் , ஜாயிண்ட் பெயின், வயசானா குட்டையாறது, கால்சியம் குறைபாடு, எலும்பு முறிவு  இதெல்லாம் ஏன்னு  எலும்பு பத்தி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கையேடுன்னே இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

செவ்வாய், 1 நவம்பர், 2016

அறவாணர்கள்.

வீதி கலை இலக்கிய அமைப்பின் சிறப்புக் கூட்டத்திற்காக ( 24/10/2016 ) எழுதியது.

அர்த்தநாரீசன் அரிகரனென்று
அர்த்தசாமம் கோயில் சுற்றுவோரே
அவர்களாய்ப் பிறப்பெடுத்த எங்களை
அலியென்று கிலி கொண்டீர்
அரவாணர்கள் என்று கேலி செய்தீர்
அரவானின் துணையர்கள் நாங்கள்
அறவாணர்கள் என்று என்றுணர்வீர்.

காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

456. பொழுதெப்ப விடியும்
பூவெப்ப மலரும்
சிவனெப்ப வருவார்
பலனெப்பத் தருவார்

பொழுதும் விடிந்தது
பூவும் மலர்ந்தது
சிவனும் வந்தார்
பலனும் தந்தார்.

-- எங்கள் அப்பா அத்தைகள் இரவு தூங்கப் போகும்போதும் காலையில் கண்விழிக்கும்போதும் சொல்வார்களாம்.

457.சமத்தி சந்தைக்குப் போனாளாம்
வட்டி கிண்ணியா மாறிருச்சாம்.

-- அதிக புத்திசாலியான பெண் பாத்திரக் கடையில்  வட்டி ( சாப்பிடும் தட்டை ) விலைக்கு வாங்கும்போது விலை கம்மியாக பேரம் பேசி கிண்ணி ( சைட் ப்ளேட் )  க்குக் கொடுக்கும் விலையில் கேட்டாளாம்.

458.சங்குச்சக்கர சாமி வந்து
ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்.

- திருவிழாவில் (சங்கு சக்கர சாமி - திருமால் - கள்ளழகராக இருக்கலாம் ) சாமியை ஆட்டத்துடன் பல்லாக்கில் கொண்டு வருவதைப் போல வீட்டில் இருக்கும் ஆண்மக்கள் கோபப்படும்போது - சங்குச்சக்கர சாமியைப் போல ஆடுகிறார் என்று பெண்கள் குறிப்பிடுவது.

459.ஆரடிச்சா ஏனழுதே
அடிச்சாரைச் சொல்லி அழு
மாமன் அடிச்சாரோ
மல்லியப்பூச் செண்டாலே

-- இது தாலாட்டுப் பாட்டு. ராராட்டு என்றும் சொல்வார்கள்.  மாமா அடிச்சா அது மல்லியப்பூச் செண்டாம்.

460.அத்தை அடிச்சாளோ
அரளிப்பூச் செண்டாலே

அதையே அத்தை அடிச்சா அரளிப்பூச் செண்டாம். 

461.உந்தி உந்திக் காசு
பப்பு உந்திக் காசு
மாமா தந்த காசு
மச்செரம்பிப் போச்சு

-- இதுவும் குழந்தையை ஏந்திப் பாடும் பாட்டு. மடியில் உக்காரவைத்து ( ஆறுமாதக் குழந்தை ) அதன் இரு கைகளையும் பிடித்து விரித்து ஒரு உள்ளங்கையில் இன்னொரு ஆள்காட்டி விரலால் உந்தி உந்திக் காசு சொல்வதுண்டு. மாமா தந்தால் மச்செரம்பிப் போகுமாம் :) 

462.இங்கா இங்கா இங்கா
காவேரி ரங்கா
கஸ்தூரி ரெங்கா
எங்கே இருக்குமாம்
ரெங்கம்பழம்
தீர்த்தக் கரைக்கும்
திருவானைக்காவலுக்கும்
நடுவிலே இருக்குமாம்
என்னைப் பெத்த ரெங்கம்பழம்.

-- தொட்டில் குழந்தைக்குப் பாடும் பாட்டு. அது இங்கா இங்கா என்று சொல்லிக் கொண்டு தரையில் படுத்திருக்கும்போது அல்லது தொட்டிலில் விழித்துக் கொண்டு பேசும்போது இதை ராகத்தோடு சொல்வார்கள் பெரியவர்கள்.  ஸ்ரீரங்கத்துப் பெருமாளாக குழந்தையை உருவகித்துக் கொஞ்சுவது.

463.தொட்டிலிலே அட்டணக்கால்
தூங்குறது ஆரு மகன்.

-- சில குழந்தைகள் தொட்டிலில் அட்டணக்கால் போட்டுத் தூங்குவார்கள். அவர்களுக்காகப் பாடுவது.

464.ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.

-- நகரத்தார் வாழ்ந்த 96 ஊர்களில் ( தற்போது 72 ) மிக மிகக் கடைசியான ஊர் உலகம்பட்டி. அதனால் அங்கே இருந்து பெண்ணெடுத்தாலோ பெண் கொடுத்தாலோ ஊருக்குக் கடைசி உலகம்பட்டியிலா எடுத்தீர்கள் என்பார்கள். 

Related Posts Plugin for WordPress, Blogger...