எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஜூலை, 2016

சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

801. ஒரு சில ஃபேக் ஐடிக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களோ இல்லையோ ஃபாலோயர்ஸ் இருக்காங்க. !!!  :)

802. சில விஷயங்கள் சாண்ட்விச் மாதிரி, மனசுக்குத்தான் அசல் ருசி புரிபடும்.

803. எதையாவது படிச்சி சம்பந்தா சம்பந்தமில்லாம நாம ஏன் இங்க வந்து மண்டைய ஒடைச்சிக்கிறோம்னு சமயத்துல புரில. பட் புடிச்சிருக்கு.

804.  விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்பே முன்பே..
.
.கண்ணெதுக்காலயே இருக்கேன்.. ஏன் கஷ்டப்படுறே..
..

ஹிஹி சும்மா பாட்டு பாடினேன்..


805. உங்க கிராமத்து தெய்வங்கள், குல தெய்வங்கள் சிறப்புப் பற்றி சொல்லுங்க.. மக்காஸ்.



806. விலகி நின்று பார்க்கும்போது நமக்கு நாமே அந்நியமாகத் தோன்றுகிறோம்.

807. காம்பழகா
மொட்டழகா
கண்விரிக்கும் சூரியன்முன்
நாணிக் கவிழ்கிறது
புதிதாய்ப் பூத்த செடி.

செவ்வாய், 5 ஜூலை, 2016

அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.



அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.



இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து தலைநகரை ஆட்சி செய்த ஒரு அற்புத மனிதர் தம் கனவுகள் நனவாக அக்னிச் சிறகுகள் கொண்டு சிகரத்தை நோக்கிப் பயணித்த கதைதான் இது.. பத்ம பூஷன் , பத்ம விபூஷன் பெற்றவர், அக்னி என்னும் ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தக் காரணமானவர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் , மாணவர்களை நெறிப்படுத்தியவர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் என்று சில பரிமாணங்களில் மட்டுமே நமக்குப் பரிச்சயமான திரு அப்துல் கலாமின் உள்ளக் கிடக்கைகளையும் உத்வேகங்களையும் சந்தித்த சோதனைகளையும் அதன் மூலம் நிகழ்த்திய சாதனைகளையும்இன்னும் பல பரிமாணங்களையும் இதில் வாசிக்கலாம்.

திங்கள், 4 ஜூலை, 2016

காதல் ஆழியும் ”ங்கா”வும்.

"காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"
--பாரதி

கொஞ்சம் லாங் லாங் அகோ போடவேண்டிய போஸ்ட். :) ரொம்ப அதிகமில்லை ஜெண்டில் மேன் & உமன் இது 2012 இல் காதலர் தினத்தன்று நடந்தது. எவ்ளோ சுறு சுறுப்பு நாம. :)


டிஸ்கவரி புத்தக நிலையத்தில் “இணையப் பயன்பாட்டில் ஏற்படும் காதல் மற்றும் அதன் தொடர்பானவை” குறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. திரு ஞானி தலைமையேற்க ஆழி திரு செந்தில்நாதன் கலந்துரையாடலை துவங்கினார். மிக ஆரோக்கியமான விவாத மேடையாக அது இருந்தது. ஆண்கள் மிகச் சரளமாக பகிர்ந்தார்கள் .. இனி வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான இணையப் பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்று ஆழி திரு செந்தில்நாதன் கூறினார். ..நன்றி வேடியப்பன். 


இதில் நினைவில் மிஞ்சி இருந்த விஷயம். கேபிள் சங்கர் அவர்களும் அதிஷா வினோ அவர்களும் கூறியதுதான். ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற பாடலைப் போலப் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஏன் பொலிந்தது - முதல் சொற்பொழிவாளர் மாதுவின் பொலிவுரை.

ஏழாமாண்டுத் தொடக்கவிழாவும், டாக்டர் வானதி திரு.இராமநாதன் அவர்களுக்குப் பாராட்டுவிழாவும், அதை மணிமேகலைப் பிரசுரத்தின் திரு. ரவி தமிழ்வாணன் பாராட்டிய விழாவாகவும் முக்கனியாகச் சுவைத்தது காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜூலை மாதத் திருவிழா.
வழமை போல் செல்வி கவிதாவின் தமிழமுதத்துடன் துவங்கியது விழா.
பேராசிரியர் திரு. மு. பழனியப்பன் அவர்களின் இன்னுரையோடு களை கட்டியது.
விழாவில் முதல் கூட்டத்தில் முதல் சொற்பொழிவாற்றிய  திரு. இரா. மாது அவர்களுக்கு பேராசிரியர் செந்தழிப் பாவை சிறப்புச் செய்தார். 
மணிமேகலைப் பிரசுரத்தின் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் திரு. சேவுகன் செட்டியார் அவர்கள் சிறப்புச் செய்தார்கள்.
திருச்சிராப்பள்ளிக் கம்பன் கழகச் செயலாளர் திரு. இரா. மாது அவர்களின் சிறப்புரை.

மாது அவர்களின் தந்தையார் திரு இராதாகிருஷ்ணனும் கம்பனில் தோய்ந்தவர்கள். எனவே கம்பனிலேயே பிறந்து வளர்ந்திருக்கும் மாது அவர்களின் சொற்பொழிவு மிகச் செறிவாக இருந்ததில் வியப்பேதுமில்லை.

சனி, 2 ஜூலை, 2016

MANPASANTH HINDI SONGS ! மனசுக்குப் பிடிச்ச ஹிந்திப் பாடல்கள்.


 1. என்னைக்கு உன்னப் பார்த்தேனோ அன்னிக்கே அவுட்டு.. இந்தப் பாட்டு சொல்றது அதுதாங்க. :)

எந்த நாள்  உன்னுடன் அறிமுகம் நிகழ்ந்ததோ
அன்னிலேருந்து என் இதயம் என்கிட்ட இல்ல.
யாருக்கும் தெரியாது இந்த மழை எப்படிப் பொழிந்ததுன்னு
என் இதயம் தாகத்தால தவிக்குது  என் இதயம் தனிச்சிருக்கு..

முழுசா கேளுங்க. அற்புதம்.



2. என் கனவிலும் நீ
என் மூச்சிலும் நீ
என் மனமெங்கும் நீ
என் இதய ராகத்திலும் நீ

இரவு பகல் காலை மாலை
எல்லா நேரமும் உன் பெயர்தான் என் நினைவில்.



3. மிக மிகப் பிடித்த படமும் பாடல் காட்சியும்

ஐஸ்வர்யா ராய் நடித்த மிக அழகான படம். தன் தங்கைகளுடன் ஆடும் காட்சி. யோகா செய்வது போல் வளையும் நளினமான உடல் அசைவுகள். பிரமிக்க வைப்பார் ஐஸ். வினோத் கன்னாவின் மகன் அக்‌ஷயி கன்னா ஜோடியாக நடித்திருப்பார். என்கிட்ட உண்மை அன்பு இருக்கு , அது ஜெயிக்கும் என்ற தன்னம்பிக்கையோடு அக்‌ஷயி கன்னா சொல்வது அழகு. !

மழைப் பாடல்கள் என் ஃபேவரைட். :)


Related Posts Plugin for WordPress, Blogger...