எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

காத்திருப்பு :-



காத்திருப்பு :-

*காகங்கள் கரைதல் போல்
இருப்புக் கொள்ளாமல்
நகரும் வாழ்க்கை.

8888888888888888888888888888888

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

அமீரகத்தின் தமிழ்த்தேரில் தாய்மை.

அமீரகத்தில் இருந்து வெளிவரும் தமிழ்த் தேர் இதழில் தாய்மை பற்றிய என்னுடைய மூன்று கவிதைகள் வெளியாகி உள்ளன.

தாய்மை:-
==========
மழை பொழிந்தது
கட்டிடங்கள் கட்டிடங்கள்  
கட்டிடங்கள் வழித்து.. 

கற்கள் வெறுமே நின்றன..  
மழை சலித்துச் சுருண்டது

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நாதாங்கி.

தாளிடப்பட்ட கதவின் பின்
பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை
எத்தனை முறைதான் அழைப்பது ?

தட்டத் தட்ட அதிர்கிறது
நாதாங்கி

உள் அலையும் சுவாசம்
வெப்பமாக்குகிறது அறைக்கதவை

சண்டையிட அல்ல
சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை
கதவு திறவாத ஒருவரிடம்
கத்தாமல் தெரிவிப்பதெப்படி

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஸ்நேகம் :-



ஸ்நேகம் :-

*அன்புச் சூல் கொண்டு
மேகமாய் நான்.

*கட்டிட இறுக்கம் தூர்த்து
கொஞ்சம் மண்ணாகவும்
மரமாகவும் இரேன்.
என்னை நான் சமர்ப்பிப்பதற்கு.

இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்


இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்

காரைக்குடியில்  மக்கள் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்ட இழவுகார விடுதியினால் அந்தத் தெருவில் வசிப்பவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஊருக்கும் உத்தரகிரியை மண்டபம் வேண்டும்தான் என்றாலும் அது குடியிருப்புப் பகுதியிலோ , பள்ளிக்கூடப் பகுதியிலோ  அமையாமல் காப்பது நலம்.
Related Posts Plugin for WordPress, Blogger...