என் வீட்டுத் தோட்டத்தில்..
வீட்டைச் சுற்றி இருந்த சின்னஞ்சிறு தோட்டத்தில் 15 வகைப் பூ, 6 வகை மரங்களும், 25 வகையான செடிகளும் இன்ன பிற கொடிகளும்.. வளர்த்தேன். சுவற்றிலிருந்து காம்பவுண்டு சுவர் எட்டடி இடம் இருக்கும். முன்பக்கம் பன்னிரெண்டு அடி இருக்கும்.
செடிகள் வாடினாலோ, மழையில் காற்றில் விழுந்தாலோ யாரும் கிளையை வெட்டி விட்டாலோ தாங்காது எனக்கு. தினமும் கூட்டி, புல் , களை எடுத்து பாத்தி கட்டி இத்தனை செடியா வளர்த்திருந்தேன் எனத் திகைப்பாய் இருக்கிறது இப்போது ஃப்ளாட்டுகளில் இருக்கும் போது.
முன்பு குடியிருந்தவர் பலா, கொய்யா வைத்திருந்தார். கொய்யா காய்த்ததும் ஊரோடு கொடுத்தோம். இப்போது மரமே இல்லை. காம்பவுண்டை அசைக்குதுன்னு அடுத்துக் குடியிருந்தவர் வெட்டி விட்டுட்டார்.