நேற்று பழைய புத்தக அலமாரியை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது சுஜாதாவின் புத்தகம் கையில் சிக்கியது. முகநூல் சகோ கல்யாண்குமார் சொல்லியபடி நம் பால்யத்தில் படித்த (கல்லூரிப்பருவத்தில் ) எழுத்தாளர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும் என்ற அவாவில் இந்த இடுகை போட்டிருக்கிறேன். :)
காகிதச் சங்கிலிகள்
அநேகமாக தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த எழுத்தாளர் சுஜாதா. ரங்கராஜனாகிய அவர் தன் மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதி வந்தார். சட்டென விஷயங்களைக் கடத்தும் எழுத்து அவருடையது. இவருடைய கணேஷ் வசந்த் இல்லாத தொகுப்பு இது. இத்தொகுப்பில் நான்கு கதைகள் இடம்பெறுகின்றன.
