மிரோஸ்லாவ் ஹோலுப்
கவிதைகள் – ஒரு பார்வை.
சரித்திரம் பூகோளம் இதிகாசம் புராணம் விஞ்ஞானம் கணிதம் வானவியல் பொதுத் தகவல்கள் தொன்மம் அனைத்தும் நிரம்பித்ததும்பும் கவிதைகள்தான் மிராஸ்லாவ் ஹோலுப் கவிதைகள். ஒருவர் இக்கவிதைகளைப் படிக்கத் தொடங்கிவிட்டால் நிச்சயம் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மேஷன் நடைபெறும். புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும், காட்சிக்குட்படும் கவிதைகள் இவை.
