எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மலீக்கா ஃபாரூக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலீக்கா ஃபாரூக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜனவரி, 2017

கசியும் மௌனம்- மலீக்கா ஃபாருக்கின் கவிதை நூலுக்கு முன்னுரை.



கூடிய விரைவில் வெளிவர இருக்கும் அன்புத்தங்கை மலீக்கா ஃபாருக்கின் கவிதை நூலுக்கான முன்னுரையை எழுதி ஓரிரு வருடங்கள் ஆகிறது. அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். புத்தகம் சீக்கிரம் வெளிவந்து வெற்றியடைய வாழ்த்துகள். அன்பும் மகிழ்ச்சியும் மலீக்கா :)

 தமிழ்ப் பெண்களின் வாழ்வியலை அதன் உயிர்த்துடிப்பை இவ்வளவு அருமையாக ரத்தமும் சதையுமாகப் பகிர முடியுமா என வியக்க வைக்கிறார் மலீக்கா ஃபாரூக். என் வலைப்பதிவ சகோதரியான இவர் நீரோடை என்ற வலைப்பதிவு மூலம் அறிமுகம். கன்னடக் கவிஞர் பி லங்கேஷின் கவிதைகளைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வு எனக்கு இவரின் கவிதைகளைப் படிக்கும்போதும் ஏற்பட்டது. 

நிறைய விருதுகள் பெற்றிருக்கும் இவர் இந்நூலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் திருமணமான பெண்ணின் மனையியலையும் மனவியலையும் பேசுகின்றன கசியும் மௌனம் மூலம். ஓரிரு கவிதைகள் ஆண்களையும் தாங்கிப் பிடிக்கின்றன. 

”ஆணின் அத்தனை
லாமுக்கு அடியிலும்
ஆரா சுமையின்
லாடங்கள் அடித்திருப்பதை “

“ஆண் மகன் அழுவது
அழகல்ல என்ற காரணத்தால் “

“அன்பிருந்தும்
அதை அழுத்தி அழுத்தியே
அழுத்தக்காரனாய் ஆக்கப்பட்டதென”