எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மங்கையர் சோலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மங்கையர் சோலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஜூன், 2025

தொடர் முயற்சியாளர் தேனம்மைலெக்ஷ்மணன்

தொடர் முயற்சியாளர் தேனம்மைலெக்ஷ்மணன்

தேனம்மையின் பூர்வீகம் காரைக்குடி. பள்ளிப் படிப்பெல்லாம் ராஜமன்னார்குடி. தந்தை பெயர் சபாரெத்தினம், தாயின் பெயர் முத்துக்கருப்பாயி. உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு. அதுதான் இவரைப் புதிப்பித்த இடம். எம் ஏ சுசீலாம்மா என்ற தமிழன்னை வேதியல் படித்து வந்த இவரின் கவி இயற்றி வரும் திறனைக் கண்டுபிடித்து ஊக்குவித்தார்.

கல்லூரியில் நிறைய எழுதித் தியாராஜா பொறியியல் கல்லூரி, யாதவா கல்லூரி, மதுரை மெடிக்கல் காலேஜ், தியாசபிகல் சொஸைட்டி போன்றவற்றில் ஆன் த ஸ்பாட் கவிதைகள் எழுதிப் பரிசுகள் வாங்கிக் குவித்த இவர் திருமணமானபின் எழுத்தை மறந்தே போனார். அதன் பின் 24 ஆண்டுகள் கழித்துத் தன் ஆசிரியையைச் சந்தித்தபோது அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதிவருவதாகக் கூறினார். அறுபதைத் தாண்டிய தன் ஆசிரியை ரஷ்ய நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்து வந்ததை, முப்பெரும் விருதுகள் பெற்றதைக் கண்ட இவர் இந்த வயதிலும் அவர் செய்து வரும் சாதனைகளைக் கண்டு பிரமித்தார்.

வயது ஒரு தடையல்ல என்றும் கேட்டால்தான் விரும்பியது கொடுக்கப்படும் என்பதையும் உணர்ந்தார்.  தன் கிரியா ஊக்கியான ஆசிரியரைப் பின்பற்றி 2009 இல் வலைப்பூ ஆரம்பித்துப் பல்வேறு பத்ரிக்கைகளிலும் எழுதி வருகிறார்.

திங்கள், 20 ஜூன், 2022

பொதிகையின் மங்கையர் சோலையில் ஒரு மலராக.

 வாராவாரம் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்குப் பொதிகைத் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியின் பெயர் மங்கையர் சோலை. 





இந்நிகழ்வில் பங்குபெறும்படி திரு. விஜயகிருஷ்ணன் அவர்கள் அழைத்திருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் அறிமுகமாகும் பெண்கள் வித்யாசமான துறைகளைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல. வயது வரம்பில்லாமல் விதம்விதமான சாதனைகளைச் செய்தவர்களும் கூட. 

Related Posts Plugin for WordPress, Blogger...