எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஜூன், 2022

பொதிகையின் மங்கையர் சோலையில் ஒரு மலராக.

 வாராவாரம் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்குப் பொதிகைத் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியின் பெயர் மங்கையர் சோலை. 

இந்நிகழ்வில் பங்குபெறும்படி திரு. விஜயகிருஷ்ணன் அவர்கள் அழைத்திருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் அறிமுகமாகும் பெண்கள் வித்யாசமான துறைகளைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல. வயது வரம்பில்லாமல் விதம்விதமான சாதனைகளைச் செய்தவர்களும் கூட. 

அந்நிகழ்வில் பங்கு பெறும் வாய்ப்பு கடந்த பதினொன்றாம் தேதி அமைந்தது. மகனாருடன் சென்னை சென்று கலந்து கொண்டு வந்தேன். மிகப் பெரும் செட்களில் பிரம்மாண்டமாக மிரட்டி இருந்தார்கள் மங்கையர் சோலை டீம். 

திருமதி சித்திரப் பாவை அவர்கள்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். இயல்பான எளிய புன்னகையுடன் எதிர்கொண்டார். திரு விஜயகிருஷ்ணா நிகழ்வை அழகாக நடத்திச் சென்றார். சிறப்பு விருந்தினர் திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள். 

என்னோடு பங்கு பெற்ற சக மலர்கள் திருப்பூரிலிருந்து திருமதி. கல்பனா கோவிந்தராஜ் ( அரசுப் பள்ளியில் ஆங்கிலக் கல்வியையும் ஸ்மார்ட் போர்ட் முறைகளையும் கொண்டு வந்தவர்). இவர் முதலில் பங்களிப்புச் செய்தார்.

அடுத்து நான். மின்னிதழ்கள், ங்கா, சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிக் கேட்டார் திரு விஜயகிருஷ்ணா அவர்கள்.  எழுத வந்தது, சிறப்பு நினைவுகள் பற்றி எல்லாம் சொன்னேன். என் குடும்பத்தினரே என் பலம் என்று சொன்னேன். என் எழுத்துக்கு உறுதுணையாய் இருக்கும் குடும்பத்தினர், வலைத்தள நண்பர்கள், முகநூல், மீடியா நண்பர்களுக்கும் நன்றி கூறினேன். சிறப்பு விருந்தினர் என் குடும்பம் என் பக்க பலமாய் இருப்பது குறித்தும் என் சமையல் திறன் குறித்தும் பாராட்டினார்.

மூன்றாவது ஐக்கிய அமெரிக்கக் குடியரசிலிருந்து இந்நிகழ்வுக்காகவே இந்தியா வந்து கலந்து கொண்டவர் திருமதி லதா. அவர் கலைகள் செழிக்க அங்கே பல்வேறு கலைஞர்களை அழைத்துப் பாராட்டியது, விருதுகள், சர்ப்ரைஸ் பரிசுகள் வழங்கியது குறித்தும், மனித நேயத்தோடு கொரோனா சமயத்தில் சுடச் சுட உணவு வழங்கியது குறித்தும் பகிர்ந்து கொண்டார். 

நான்காவது திருமதி அனிதா அவர்கள். இவர் மேக்கப், புதுவிதமான பொருட்கள் தயாரிப்பு எனப் பல்துறை வல்லுநர். அதைப் பயிற்றுவிப்பதிலும் வல்லவர். தனக்குத் தெரிந்த  எல்லாக் கலைகளையும் கற்றுத் தரக் கேட்பவரின் நிதி நிலை பொறுத்தும், அவர்களின் தேவை பொறுத்தும் பயிற்றுவித்து வருகிறார். நிறைய இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ளார்.

அடுத்து எர்த் ஜர்னலிஸ்ட் செல்வி. சாரதா. இவர் கோவையைச் சார்ந்தவர். நீலகிரி, குன்னூர் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் இயற்கை ஓவியங்கள் குறித்தும் அவை பதிவு செய்யும் அவர்களின் வாழ்வியல் குறித்தும் அழகுறப் பேசினார். மேலும் இந்தோனேஷியா காடுகளில் பாம் மர விளைச்சல், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு சர்வதேச எல்லையைக் கடப்பதில் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் பேசினார். 

சிறப்பு விருந்தினர் திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள். அவர் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறார். தினம் ஒரு விருது. கிட்டத்தட்டப் பத்துப் பதினோரு வருடங்களாக அவரது பயணக் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். அவர் எழுதும் கட்டுரைகள் அந்தந்த வெளிநாடுகளுக்கே நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வல்லமை படைத்தவை. டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்களின் வாழ்க்கையை நூலாக எழுதி உள்ளார். தங்க மங்கை விருது, ஸ்ரீசக்தி விருது, ஆழ்வார் மையத்தின் விருது ஆகியன பெற்றவர். அனைவரின் சாதனைகளையும் முயற்சிகளையும் தகுந்த மேற்கோள்கள் காட்டிச் சிறப்பித்துப் பாராட்டினார். 
மொத்தத்தில் அருமையான திங்கள். அருமையான நிகழ்வு. நன்றி மங்கையர் சோலை &  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு விஜயகிருஷ்ணன் சார் & நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி. சித்திரப் பாவை மேம். 
இந்த நிகழ்ச்சி உலகெங்கும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக உள்ளது. நீயா நானா போல் ரேட்டிங்கில் முதலிடம் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள் விஜயகிருஷ்ணன் சார், சித்திரப்பாவை மேம் & மங்கையர் சோலை டீம்.  


1.மங்கையர் சோலை - பார்ட் 1 l டிடி பொதிகை l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_XWkqTn5Jmw


#மங்கையர்சோலை   #டிடிபொதிகை  #தேனம்மைலெக்ஷ்மணன்

#MANGAIYARSOLAI #DDPODHIGAI #THENAMMAILAKSHMANAN


2.மங்கையர் சோலை - பார்ட் 2 I டிடி பொதிகை I தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=YEtExXBGW9g


#மங்கையர் சோலை-பார்ட்2  #டிடிபொதிகை  #தேனம்மைலெக்ஷ்மணன்

#MANGAIYARSOLAI-PART2 #DDPODHIGAI #THENAMMAILAKSHMANAN


3.மங்கையர் சோலை - பகுதி 1 l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8pSJTPBse00


#மங்கையர்சோலை - பகுதி #தேனம்மைலெக்ஷ்மணன்

#MANGAIYARSOLAIPART1 #THENAMMAILAKSHMANAN


4.மங்கையர் சோலை பகுதி 2, தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VIee6axUjZc


#மங்கையர்சோலைபகுதி2 #தேனம்மைலெக்ஷ்மணன்

#MANGAIYARSOLAIPAKUTHI2 #THENAMMAILAKSHMANAN

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...